17 November 2014 11:31 am
ஊருச் சோற்றுக்கு நாக்கை நீட்டாதேஊழல் செய்தே பொருளை ஈட்டாதேகாரி உமிழ்வான் இனிவரும் பிள்ளைகவின்நிறை முகத்தை ‘தொட்டி’ ஆக்காதே ! பதவிப் பசிக்கு ஆடுகள் சாகலாம் கதவின் இடுக்கில் கண்ணகி ஏங்கலாம் உயர்வுக்கு உழைத்தவர் பாதியில் ஏகலாம் ஊர்ப்பணி செய்பவர் உறங்கிட ஏலுமோ?சாதியும் மதமும் சமத்துவம் நல்காதீதிலா வாழ்க்கை திசைமாறிப் போகாபாடாற்ற வேண்டின் பண்பாட்டு அமைப்பில்பாடமும் பாதையும் ‘நாமாதல்’ வேண்டும் காலச் சூழ்நிலை கறையைப் பூசும் கண்ணியம் காப்போர் உள்ளம் கூசும் குற்றம் களைந்து சுற்றம் பேணடா குருடன்கைத் தடியாய் மாறிடப் பழகடா !நன்றும் தீதும் பணியைப் பொறுத்ததேபண்பிலாச் செயலால் பெற்றவள் நாணுவாள்பண்பெனப் படுவது நடத்தையால் ஒளிர்வதுதன்னகம் துலக்கி ‘தமிழ்ப்பணி’ ஆற்றுக ! –து.மருது, பெங்களூர்.