நலம் நலமாய்! - தமிழ் இலெமுரியா

14 February 2014 9:13 am

எப்பொழுதும் குளிர்ந்தஇளங் காற்று வீசும்இறகசைய வண்டினங்கள் இசை அமைக்கும்!வெப்பத்தை மாற்றுகிற அடர் வனங்கள்வெண்கொக்கு இரைபார்க்கும் சிற்றோடைகள்!தப்பாது மழை வழங்கும் கானகத்துத்தண்ணீரில் நெளிந்தோடும் குஞ்சுமீன்கள்!இப்பாரில் இவற்றையெலாம் சுவைத் திருந்தால் எப்போதும் நலம்நலமாய் வாழ்வினிக்கும்!நடைபயில வரும்மாலைப் பொழுது நீல நதிபாயும் தொடுவானச் சித்திரங்கள்!கொடைவிரித்து அசைகின்ற நிழல் மரங்கள் கொடிமலரில் தேனருந்தும் பட்டாம் பூச்சிமடைமாற்றி நீர்பாய்ச்சும் வயல் வரப்பு மழைதடுத்துப் பெய்விக்கும் உயர் மலைகள்!எடைமிகுந்து போகாத உடலும் பெற்றால் எப்போதும் நலம்நலமாய் வாழ்வினிக்கும்!வேற்றுமையைக் களைகின்ற எழுத்து! மண்ணில் விசைபெற்ற நேர்கோட்டுப் பயணம்! கொல்லும்கூற்றுவனைப் புறந்தள்ளும் ஒழுக்கம்! வந்த கொடுங்கோலை எதிர்க்கின்ற ஆற்றல்! கொள்கைச் சேற்றகத்துப் புலமைநடும் பான்மை! தீய சிற்றின்பம் வெஃகாத நெஞ்சம்! நாளும்ஏற்றமுடன் அகத்தன்பு நிறைந்திருந்தால் எப்போதும் நலம்நலமாய் வாழ்வினிக்கும்!மனம்திறந்த உரையாடல் பகைமை தீர்க்கும் மானுடத்தின் குறியீடு! எல்லை மீறும்சினம்துறந்த கனிமொழிகள் புன்னகைக்கும் சிந்தனையில் நிறம்குழைக்கும் தூரிகைகள்!வனம்திறந்து விழும்அருவி திவலைப் பூக்கள்! வளர்இயற்கை தனைப்பேணி நடந்து சென்றால்இனம்அறிந்து தோழமையை நிரப்பிக் கொண்டால் எப்போதும் நலம்நலமாய் வாழ்வினிக்கும்! – பூ.அ.இரவீந்திரன், கோவை.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி