11 September 2013 12:07 am
பனிக்காலத்தில் பஞ்சணையில் படுத்துறங்கும் மனிதருக்குஅயர்ந் துறங்கி மறந்துவிடும்பொழுதாம் அதிகாலையில்நாம் கண்டறியா தொரு சுகமாய்தோன்றி முடக்கிவிடும் சோம்பலைமுறித்தே எழுந்து விடு!வாராது வந்த மனிதவுடலாம் மண்ணில்நடந்து செல்வதே சுகமாம் கால்கள் இரண்டிருக்கநடைப்பயிற்சி செய்தால் நலங்கூடும்நாளும் சுறுசுறுப்பாயிருப் பீருலகில்நாளும் துயில் கொண்டால் பஞ்சணையும்நொந்த நோகும் எழுந்தே நடந்தால்எதிர்வரும் மனிதரெல்லாம் உறவாம்தனதுடலை நலமாய் வைத்தே பழகுவாய்நலந்தரும் உணவு அளவாய் உண்டுமகிழ்வாய் வாழ்வதே மருந்தாகும்அகவை யொரு முடிவல்ல மனிதருக்குமுடியா தென்றே படுக்கையில் உழன்றால்முடிவாய் வரும்பெருந் தொல்லையாம்காலைமாலை இருவேளை கடமையாய்விரைந்து நடைப்பயிற்சி செய்தே வந்தால்சர்க்கரை, சினம், படபடப்பு குறைந்தே வரும்நாளும் நலமாய் கூடி வாழலாம்.- இரா.சொ.இராமசாமி, கோவை.