நினைத்தது நிறைவேறட்டும் - தமிழ் இலெமுரியா

15 December 2013 5:46 am

என்ன செய்ய நினைத்தாய்என்னரும் தமிழ் இளைஞனே!இனத்திற்கு உயிர் துறக்கும்இலட்சிய வீரனாக நினைத்தாயா?- என்னஅன்னத்தைத் தமிழ் மொழியதனைஆகாது என்போரின்ஆணவத்தை அடக்கிடவே!ஆர்த்தெழ நினைத்தாயா? – என்னஆயிரமாண்டு அழுக்குச் சிந்தனையும்அடிமையில் ஆழ்ந்த உணர்வையும்அழித்து விட்டுத் தமிழருக்கு எழுச்சியூட்டஅரும்பணிகள் ஆற்றிட நினைத்தாயா? – என்னஅறிவியலில் தமிழை ஏற்றிவைக்கஆனதெல்லாம் செய்வோமென்றுஎண்ணத்தில் எழுச்சி கொண்டுஏற்றம் காண நினைத்தாயா? – என்னகாலத்தில் வளர்ந்த மூத்த தமிழைகலைகளின் தமிழ்மொழியென்றுஞாலத்தில் நிலைநிறுத்ததோளுயர்த்த நினைத்தாயா? – என்னஇருப்போர்க்கும் இல்லார்க்கும்இலக்கியம் வரலாறு அறியாதார்க்கும்இதயத்தில் தமிழை பதிய வைக்க!என்னால் முடியுமென்று நினைத்தாயா? – என்னபார்முழுவதும் பரவி பயன் ஈந்தபகுத்தறிவுச் சிந்தனையைநேர்நின்று மக்களிடம்நிலை நிறுத்த நினைத்தாயா? – என்னஇன்றுபோய் நாளை வா என்றுஇதயத்தில் எண்ணிடாமல்இன்றே செய் நன்றே செய் எனஇயங்கி நலம்தர நினைத்தாயா? – என்ன – சங்கீதா, இரா.கண்ணன்

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி