நீர்நிலைகள் - தமிழ் இலெமுரியா

17 February 2015 4:27 pm

தாகம்…..எட்டுத்திக்கும்கதிர்வெடித்துத்தெறித்தைப்போலஎரிகிறது.நாக்கு வறண்டு நீர்ப்பசையற்று போகிறது.குட்டைகிடங்குஊருணிகுளம்,ஏரிஎல்லாம் நிரம்பி வழிகிறது.ஆனாலும்என்தாகம் தணிக்கநாளும் அல்லாடுகிறேன்.குட்டையைநெருங்கும்போதுகானல் நீராய்காட்சித்தருகிறதுஐயம் அகலகையை நீட்டினால்உடம்பின் ஈரத்தை உறிஞ்ச முயல்கிறதுஏமாற்றத்தோடுதிரும்பும்போதுதவளைக்குதித்தஓசை கேட்கிறது!கிடங்கை நாடுகிறேன்விதவிதமானகாலடித்தடங்கள்பூச்சியினங்கள் முதல்புள்ளினங்கள் வரைகால்நடைகளின் தடங்கள்மாந்தனின் சுவடு வரைபதிந்து கிடக்கின்றனகாய்ந்தும் ஈரமாயும்!ஒருவாய் அள்ளிப்பருகுகிறேன்வாயும் தொண்டையும்சில்லிட்டு குளிர்கிறது.உயிர்களின் வேர்களில்ஓடித்தங்குகிறதுமறுபடியும்அள்ளிக்குடிக்க முடியாமல்கிடங்கின் நீர்மூடிக்கொள்கிறது.நீரினைத்திறக்கமுயற்சிக்கையில் – அதுஎன்மூளையின் ஈரத்தைசுண்ட இழுத்தது.மயக்கம் தெளிந்து கரையேறிகோள்கள் காலில் மிதிபடகோடிக்காதம் ஓடினேன்.ஊரணியைச் சுற்றிமக்கள் வெள்ளம்.வெள்ளத்தில்நானொரு துளியாய்கலந்தேன்.தகிக்கும் தாகம் தணிக்கஎன் தனித்துவம் இழந்துஊரணி போற்றினேன்கைமண்டி ஏந்திமுண்டியடித்துஎல்லோரும்நீர்பருகினார்கள்உயிர்காக்கும் தாயென்றேன்ஊர்க்காக்கும் கோனென்றேன்ஊரணியை நெருங்கியதும்பெரும் நாற்றம் குடல் பிடுங்கமூக்கைப் பிடித்தப்படிபின்னர்ந்தேன் பிணமாக!நிறைந்துகிடக்கும் குளம்,சிற்றலைத் திரண்டு வந்துகரையினில்நுரைமலர் கோர்த்துப் பழகுகிறது.மடைவழியே நீர் பாய்கிறது.வாய்மடையின்கடைவாய் எல்லாம்நீர்வழிகிறது.தாய்மடியின் சேய்போலபசியமர்ந்து கிடக்கிறது.வயல்வெளிகள்.குளம்அருளைத்தேக்கி வைத்துஅமுதமென்று சொன்னது.தாகம் தணிக்க குனிகிறேன்அடுத்த கணம்பாளம் பாளமாய்குளத்து நீர்வெடித்துப் பிளக்கிறது.தாகம் தணியாமல்கரையேறி நடக்கிறேன்.அலைகள் வந்து, வந்துகரையை மெழுகும்ஓசை கேட்கிறது…..என்தாகம் தணியாமலேதொடர்கிறது தேடல்… -இறை.ச.இராசேந்திரன்

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி