பரிதிமாற் கலைஞர் - தமிழ் இலெமுரியா

14 November 2015 9:42 pm

சூரிய நாரா யணனென்னும்சொற்களை அதன் பொருளோஅழகிய பரிதி மாற்கலைஞர்!நேரிய தமிழின் மொழி பெயர்ப்பால்நிறைந்தார் தமிழர் நெஞ்சினிலே!ஆரிவ ரைப்போல் ஆரியர்கள்அழகிய தமிழில் பெயர்வைத்தார்?தனித்தமிழ்த் தந்தை மறைமலைக்குத்தக்கதோர் பதவி தனைத் தந்தார்!இனித்திடு தமிழில் நாடக நூல்இல்லையெ னப்பிறர் ஏசாமல்தனிச்சிறப் புடைய நூல்கள்தமைத்தந்தவர் பரிதி மாற் கலைஞர்!பனித்தமிழ்ச் செல்வியல் மொழியென்றுபகர்ந்தவர் முதலில் இவரன்றோ?தமிழ்மொழி வரலாற் றையெழுதித்தமிழ் நிறை பரிதி மாற்கலைஞர்அமிழ்தனை யதுதமிழ்" எனக் கூறிஅதன்பல சிறப்பை எடுத்துரைத்தார்!அமிழ்ந்திடு மொழியாம் ஆரியத்தைஅப்பட்ட மாகத் தோலுரித்தே"உமிழ்திடும் அதனை உயர்த்தாதீர்!உயர்ந்தது செந்தமிழ்!" எனவுரைத்தார்.- புலவர்.பெ.சயராமன், கல்லக்குறிச்சி "

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி