14 January 2017 8:44 pm
நெல்லும் கரும்பும் நெடும்படை எருதும்சொல்லும் கதையை சற்றே கேளடாஅல்லும் பகலும் அழகியல் உலகும் கல்லும் நீரும் கனிநிறைக் காடும்வெல்லும் அறமும் வெகுமதி அறிவும்செல்லும் நொடியும் சொல்லும் பாடமும்எல்லாம் மண்விழா என்றே எண்ணடாபல்லோர் மகிழ்ந்திடும் பெருவிழா நமதடாகதிர்வரும் திசையை கழனிகள் நோக்கிடஎதிர்வரும் பொங்கலை எம்மினம் விரும்பிடபுதிரெனக் கண்டிடும் புத்தொளி நிறைந்திடமுதியோர் முதல்இளம் மொட்டுகள் வரை தம்பதிவொளி முழங்கிட பொங்கல் பொங்கிடபுதிதாய் பூத்ததாய் புவிமகள் மலர்ந்திடஇதுபோல் ஒருவிழா எங்கடா உண்டு புதுமை போற்றும் புதுவிழா ஏதடாசித்திரை என்றாய் சனவரி என்றாய் அத்தரை ஆண்டினை ஆடையாய் தரித்துக்கத்தினாய் மதத்தின் கழுதையாய் நின்றேஎத்திசை போற்றும் எம்மின வள்ளுவச் சித்தன் பிறந்த சுறவத் திங்களேஇத்தரை ஆண்டென இனத்தார் மொழிந்தும்பித்தனாய்க் கிடக்கிறாய் பிறமத இழிவில்மொத்தமாய்க் கிடக்கிறாய் மரித்த பிணமாய் – பரணிப்பாவலன்