16 December 2014 2:34 pm
செவ்வாய் கோளில்குடியேற்றம் நடக்கிறது.கண்டம் விட்டுகண்டம் தாவிய மானிடன் கோள்விட்டு கோள்தாவுகிறான்.இறைச்சி ஊடகத்துள்மாபெரும் செல்லுகை இது.மானுட நேயத்தைதொலைத்து விட்டுமாற்று மீட்சி தேடும்பொய்மை இது.மாந்தர்களைபசியில் கொன்று கொன்றுஅறிவியலுக்கு உரமிடுகிறார்கள்.பசுமை அழிந்து போகிறதுநில உருண்டை வறண்டுபோகிறது.பூமியின் குடலைப் பிடுங்கிஅறிவியல் வயிறு வளர்க்கிறது.ஆறுகள் நடந்த இடமெல்லாம்மணற்கொள்ளை.வேர்கள் சென்ற இடமெல்லாம்ஈரவளிக் கொள்ளை.நம்வரலாறு தங்கியஇடமெல்லாம்கனிமக்கொள்ளை.மலைகளை சிரைத்துதேயிலை பயிரிட்டார்கள்மழை குறைந்தது.விளைநிலங்களை அழித்துவீட்டுமனைகளுக்குகல்நட்டார்கள்நிலத்தடிநீர் குறைந்தது.பணப்பேய்கள்நிலையம் போட்டு நின்றதால்வறட்சி பாய்போட்டுபடுத்துக்கொண்டது.சிட்டுக்குருவிகளும்சில்வண்டுகளும்தூக்கணாங்குருவிகளும்தும்பிகளும் மனதில் மட்டுமேபறந்து திரிகின்றனஇசையெழுப்பிக் கிடக்கின்றன.வயல்வெளிகளில்வீடுகளை விதைத்துமின்சாரங்களை பாய்ச்சுவதால்குளங்கள் கால்கழுவும்குட்டைகளாய் குறுகிக்கிடக்கிறது.மனிதனின் பேராசை வேள்வியில்நிம்மதிகளும் மகிழ்ச்சிகளும்வாழ்வுமே எரிந்து புகைகிறது. – இறை ச.இராசேந்திரன்