15 July 2014 4:03 am
வான ளாவிய செந்தமிழ் வளர்குலம் வறுமையும் கீழ்மையும் அடிமையும் உற்றதால்கூன ளாவியும் குறுகியும் சிதைந்துமோர் குருட்டுச் செவிடனாய்ப் பெருநடை தளர்ந்ததே!மான மிலாததாய் மற்றவர் முன்னிலை மண்டி யிட்டுயிர் வாழவும் துணிந்ததே!ஆன எழுச்சியோ டொன்றி இயங்கினால் அற்றைப் பெருமையும் சிறப்பும் ஆகுமே!பூட்டிய இருப்புத் தொடரி தெறித்திடப் புதுமைப் புரட்சியை மக்கள் தொடங்கினால் கூட்டை யுடைத்தரி மாவும் வெளிப்படும் கொள்கை போலவே உரிமையும் புலப்படும்!நீட்டிய உறக்கம் களைந்திங் கெழுகவே நீணிலம் எங்கணும் வாழ்ந்திடு தமிழினம்!ஈட்டிய பெரும் பொருள் செல்வர் ஈகுக! இளைஞர் கூட்டமும் எழுந்துலா வருகவே!- பாவலரேறு பெருஞ்சித்தரனார்.