15 September 2014 6:04 am
பெரியார் என்றொரு புதுயுகம் இங்கே பிறந்து வந்ததடா பேதைமை என்னும் இருள்கிழித் தொளிமழை வானெனத் தந்ததடாநரியார் நாயகம் நடத்திய காட்சிகள் நமைவிட்டுச் சென்றதடா நச்சு மரங்களின் வேரினில் வெந்நீர் பாய்ச்சிக் கொன்றதடா!பிரம்மனின் முகத்தில் பிறந்தோ மென்றே பேய்களின் ஆட்டமடா பெரியாரியத்தின் நெருப்பு மொழிகளால் எடுத்தது ஓட்டமா.அரசர்கள் தம்மைப் பின்னிருந் தியக்கி உழைப்பை மாய்த்ததடா ஆரிய மாயையில் தமிழனின் பெருமைகள் தம்மைச் சாய்த்ததடா!சதுர்மறை காட்டில் புதிர்களைப் போட்டு சாதிகள் அணிவகுப்பு சாணக்கியச் சதிகள் வலைகளை விரித்து சாமிகள் படையெடுப்புபிதுரார்ஜிதமாய்ப் பார்ப்பனர்க்கிங்கே மன்னர்கள் பரிசளிப்பு பேதைக ளென்றே உழைப்பவ ரொடுங்க பேதங்கள் பெருங்குவிப்பு!அன்று தொடங்கிய பேதங்க ளிங்கே இன்றும் தொடர்கிறதே ஆதிக்கச் சாதிகள் சாதிக்கப் புதிய ஆரியம் படர்கிறதேகுன்றென உயர்ந்த பெரியாரியங்களைக் கூறுகள்போட் டெழுந்தார் கொள்கைச் செவிடர்கள் கருத்துக் குருடர்கள் கூலிக்கு மாரடித்தார்!சாதிக் கொடிகளைத் தைலா புரங்கள் ஏற்றித் திரிகிறதே சல்லடைக் கண்களாய்த் தாழ்த்தப் பட்டோர் தீயாய் எரிகிறதே.யாதும் ஊரென யாவரும் உறவென அறைந்த தமிழகமே ஆண்டவர் நாங்களென் றாணவத் தாலிங்கு அனல்மொழி உமிழ்கிறதே!எரிதழ லெங்கே எடடா தம்பீ இழிவினைத் தீயிடுவோம் இழுக்கினைச் சுமப்போர் கழுத்தினை நெரித்து அறிவுக்குப் பாயிடுவோம்அரிதா ரங்கள் அரங்கேற்றங்கள் அனைத்தையும் சாகடிப்போம் அணியணியாகப் புரட்சியை ஏந்தித் துரோகத்தை வேகடிப்போம்!- கவிஞர் பூவரசி மறைமலையன், கோவை