பொங்குமாங் கடல் பொங்கி! - தமிழ் இலெமுரியா

15 November 2013 12:44 am

வாய்விட்டுப் புலம்புதற்கு நாம்கற்ற மொழியும்வழிவிட்டு நின்றுடுமே! கண்ணீரும் வழியும்!தாய்ப்பசுவைப் பரிந்திட்ட சேய்க்கன்றைப் போலத்தனியறையில் அமர்ந்தபடித் தவித்திடுவார் சாலபுலிப்பெயரைக் கேட்டதுமே கிலிகொள்ளும் வீரர்!பன்னிரண்டு வயதினனைக் கடத்திவந்த தீரர்!சலிக்காமல் புதுமுகில் கொல்வதிலே சூரர்!சாகும்வரை அருகிருந்து ரசிக்கின்ற வீரர்!புலிக்குப்பி றந்தவனைப் பச்சிளமை மாறாபோர்மிரட்சி கண்டறியாப் பாலச்சந் திரனைவலிசிறிதும் நோக்காமல் குண்டுபாய்ச்சி மார்பில்!விழுப்புண்கள் பெறுமாறு நேர்நிறுத்திக் கொன்றார்!குறுகுறுத்த விழிகளில்கண் ணீர்சிறிது மில்லை;கொலைக்களத்தில் வீழ்ந்தாஅலும் மேனிவாட வில்லை;உறுபகையை எதிர்நிற்கும் பெருவலியுடை யவனோ?செருமுகத்தில் தந்தைக்குப் பின்வீழ்ந்தான் இவனோ?பொருதடக்கை வாளுண்டா? மணிமார்பக முண்டா?போர்முகத்தில் புறங்கொடாத புயவலிமை உண்டா?பெருந்தோளில் துப்பாக்கி வடுக்கள்தாம் உண்டா?மாசுமறு வற்றமங்காத் திருமேனி அன்றோ?!பறந்துபறந்து குண்டுகளைக் கொத்துகொத்தாய்ப் போட்டார்பரவியெங்கும் தமிழ்மக்கள் செத்துசெத்து வீழ்ந்தார்திறமையுடன் இவற்றையெல்லாம் ஆவணப்பட மாக்கிவெட்டவெளிச் சமாக்கிடவே செய்தார்சேனல் நான்கில்கச்சாமிக் குரவெடுப்பார் புத்தருக்கு முன்னால்கொலைச்சாமி ஆகிடுவார் தமிழர்க்கு முன்னால்எச்சாமிக் குமடங்கா வல்லவரக்கன் ஆவார்!அமெரிக்கப் பூசாரி அடிக்குப்பிணம் ஆவார்!திறந்தவீட்டில் தெருநாய்போல் தானுழைந்து தின்றுமிகக்கொழுத்து தாய்மகளைத் தின்றதுபோல் இன்றுபிறந்தநாடு வேறொன்றாய்ச் சிங்களர்தாம் வந்தார்தமிழினத்தின் இறந்தநாடு" என்றபெயர் தந்தார்!தூங்கியோரின் தொடையினில் தரித்திட்ட கயிரைதொங்கல்மாலை அணியுமாறு அணிந்தவரின் உயிரைவாங்குகின்ற கதைபோலத் தமிழினத்தை வீழ்த்தியாழ்ப்பாணப் பெருமைகளை அழித்தனரே தாழ்த்தி!தணிந்திருக்கும் இலங்கையில் எரிமலைகள் வெடிக்கும்!தமிழர்க்குக் கேடுசூழ்ந்தார் தலைவீழ்ந்து துடிக்கும்பணிந்தறியாச் சிங்களரின் மண்குப்புற வீழும்!பொங்குமாங்க டல்பொங்கி நீருக்குள் ஆழும்!!!- புலவர் சி.சுவாமிநாதன், பந்தநல்லூர்."

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி