15 December 2013 5:47 am
பயிர்வாழ நீர்வேண்டும் உண்மையினை பாடுபடும் விவசாயி நன்கறிவான்;உயிர்வாழ உணவுப்பொருள் தேவையினை ஊருலகில் உலவுகின்ற நாமறிவோம்;தயிர்ஆக வேண்டுமெனில் சிறிதளவே காய்ச்சியபால் புறைசேர அவசியமாம்;அயர்வின்றி உழைத்தாலே நோயின்றி ஆரோக்கிய மேனிநலம் காணலாமே!வாழ்வுக்குப் பொருள்வேண்டும் என்றறிந்து வழிகாணும் நோக்கத்தில் ஊறவேண்டும்;பாழ்நஞ்சை நல்லுணவில் கலக்கின்ற பழிகாரர் இனம் கண்டு விலக வேண்டும்;தாழ்வுக்கு நமைஇட்டுச் செல்லாமல் தகுதிக்கும் குறையாத பணி வேண்டும்;வாழ்வதிலும் பொருள்வேண்டும் என்பதனை வாழ்வாங்கு வாழ்ந்துநாம் காட்டவேண்டும்! - பட்டுக்கோட்டை தமிழ்அன்பன்