மணமும் முறிவும் - தமிழ் இலெமுரியா

15 May 2016 7:45 pm

குலமறிந்து  குணமறிந்து சுற்றம்  யாவும்கொண்டிட்ட  தரமறிந்து தொழிலைச் செய்யும்பலமறிந்து படிப்பறிந்து உள்ளம் கொண்டபன்பறிந்து பற்றறிந்து மேனி தன்னின்நலமறிந்து நன்மொழியின் திறன றிந்துநாற்புறமும் நாவுரைக்கும் சொல்லறிந்துஉலகறிய மணமுடிக்க உறுதி செய்தஉயர்வான திருமணங்கள் உறவாய் வாழும்!காணும்முன் காதலனைக் காமம் கொண்டுகானல்நீர் மயக்கத்தில் புரண்டு வீழ்ந்துஆணுடனே பெண்ணும்தான் அறி விழந்துஅன்னை தந்தை சுற்றத்தை மதியாதிங்கேவீணுக்கு வீறாப்பு நெஞ்சுள் கொண்டால்வெற்றியேதும் பெறுவதிலை  திருமணங்கள்;பேணுவது வாழ்வறமே என்று ணர்ந்தால்பெருவாழ்வே; மணமுறிவு இல்லா தாகும்!இருமனங்கள் ஒன்றாக இணைந்தால்  தானிங்(கு)இல்லறங்கள் சீராகும்; இனிமை யாகும்;கருத்தினிலே கொண்டிட்ட பிரிவை எல்லாம்கலப்பற்ற மெய்யுரைத்துத் தீர்த்தல் வேண்டும்;அருத்தங்கள்  நிறைந்திட்ட  அகவாழ் வுக்குஅன்பேதான் அடிப்படையாய் ஆதல் வேண்டும்;மருந்துக்கும் மணமுறிவு வேண்டாம்; வேண்டாம்;மரணத்தில் பிரிதல்தான் மணவாழ் மாண்பு! – கே. பி. பத்மநாபன், கோவை

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி