மாற்றிச் சொல்லலாமா? - தமிழ் இலெமுரியா

16 August 2014 10:17 am

பெயரைக் கேட்கும்போதுஊரைச் சொல்லலாமா?வேலையைக் கொடுக்கும்போதுகூலியைக் கேட்கலாமா?தீப்பிடித்து எரியும்போதுதேவாரம் பாடலாமா?வெள்ளம் புரளும்போதுவிடுகதைச் சொல்லலாமா?தெரியாமல் தவறியதைக்கேட்காமல் சொல்லலாமா?தெரிந்த உண்மையைக்கேட்டும் மறைக்கலாமா?நண்பனின் கமுகத்தைஎதிரியிடம் உளரலாமா?நல்லோரைப் புறங்கூறிநயவஞ்சகரிடம் சேரலாமா?கேட்டக் கேள்விக்கு மாற்றிச் சொல்லலாமா?தெரிந்தும் சொல்லாமல்தேர்வில் தோற்கலாமா?சொல்லும்போது எழுதும்போதுகருத்து மாறலாமா?தேவையின்றிச் சொல்லிதண்டனையைப் பெறலாமா? – முனைவர் ம.வி.வைத்தியலிங்கம்

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி