மொழிப்பற்று - தமிழ் இலெமுரியா

17 June 2014 8:49 am

தமிழினைப் போற்றுதும் தாய்தமிழ் போற்றுதும்தாயைச்சேய் பேணல் தலையறநம் மெல்லவர்க்குந்தாய்தமிழே யாமாத லால்.தென்மொழி போற்றுதும் தீந்தமிழ் போற்றுதும்தாயிற் சிறந்தம்மம் தானாம்வாழ் நாளெல்லாம்ஆய்சுவை யோடளித்த லால்தொன்மொழி போற்றுதும் சொற்றமிழ் போற்றுதும் போனகமாய்த் தாரகமாய்ப் போக்கியமாய் நாமாரவானமுதின் மேலினித்த லால் – நாவலர் சோமசுந்தர பாரதியார்நினைக்கிறதை உயிர்த்தமிழில் பாடி வைப்பேன்! நீடுலகில் தான்வாழும் வரையென் அன்புமனைக்கிழத்தி மேடைகளில் முழங்கி நிற்பாள்! மக்களெலாம் முத்தமிழப் பயின்று போற்றும்வினைக்கென்றே வளர்த்திடுவேன்! இம்மா ஞாலம் வெல்தமிழன் சிறப்புணரக் கேட்ட பின்புஎனைக்கொன்று விடுபடைப்பே! புலமை மூத்தோன் என்சிதைக்குத் தமிழ்ப்பாடித் தீமூட் டட்டும்! – கவிஞர் கலைக்கூத்தன் (மும்பையில் வாழ்ந்து மறைந்த கவிஞர்)

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி