15 December 2013 5:49 am
காந்தியைப்பார் நேருவைப்பார் அண்ணா வைப்பார் காமராசர் கக்கனைப்பார் என்று சொல்லிஏந்தியவர் புகழ்தன்னைப் பாடு கின்றார் ஏற்றமிகு தலைவரரென்றே ஏத்து கின்றார்மாந்தநேயப் பண்பாளர் மக்கள் தம்மின் மனமறிந்து நலம்காத்த தூய ரென்றேமாந்திமாந்தி அவர்களினைப் போற்று கின்றார் மரணத்தை வென்றவராய் வணங்கு கின்றார்!இன்றிவர்கள் போலவொரு தலைவ ராக இருக்கின்றார் இவரென்றே சொல்வ தற்குநன்றாக நாள்முழுதும் தேடிப் பார்த்தும் நாடுதனில் ஒருவருமே கிடைக்க வில்லைதன்னலமே இல்லாமல் தம்மின் சுற்ற தகுநலத்தைப் பார்க்காமல் நாளும் மக்கள்நன்நலத்தை எண்ணிசெயல் ஆற்று கின்ற நல்லவரின் பெயர்சொல்ல இயல வில்லை!வன்முறையைத் தூண்டுபவர்; மதங்கள் சாதி வளர்த்துபகை பெருக்குபவர்; கட்சித் தொண்டர்முன்நிறுத்திப் பேரணிகள் நடத்தித் தம்மின் முழுவலிமை பாரென்றே அஞ்சச் செய்வோர்புன்மையான சொற்களிலே ஒருவர் மீது புறங்கூறித் தூற்றுபவர்; நாட்டை ஏய்த்துத்தன்வீட்டுச் சொத்தாக மாற்று வோரே தலைவரென்ற போர்வைக்குள் இருக்கின் றார்கள்!அரையாடை மேனியராய் சொத்தை யெல்லாம் அளித்தவராய் வீடுமின்றிக் குடும்ப மின்றித்திரைவாழ்க்கை ஏதுமின்றி எளிய ராகத் திகழ்ந்தவர்போல் இன்றிங்கே யாரே உள்ளார்!உரையொன்றும் செயல்வேறாய் ஆற்று வோரே உயர்தலைவர் போலிங்கே இருப்ப தற்குக்கரைபோன்று காட்டாற்றைத் தடுத்தி டாத கடமையற்ற மக்கள்தாம் உணர்க நன்றே! – பாவலர் கருமலைத் தமிழாழன்.