14 April 2014 6:09 am
சாக்கு போக்கு சொல்லாமல் சற்றும் தயங்கி நில்லாமல்தாக்க மோடு வாக்களிப்பீர் சரியாய் எண்ணி வாக்களிப்பீர்தேக்க மின்றி களப்பணிகள் துரித மாக பயனீட்டும்ஆக்கம் விளைக்கும் வாக்களிப்பு அளித்தல் நமது கடமையன்றோ!விலைக்கு போகும் வாக்குகளால் மேன்மை எல்லாம் குன்றிவிடும்பொல்லா பொறியும் தலைவிரிக்கும் பொய்மை நிலத்தை ஆட்டுவிக்கும்சொல்லும் செயலும் வேறுபடும் சிறுமை வலிமை பெற்றுவிடும்எல்லை மீறி கையூட்டும் எனைத்தும் எச்சம் ஆக்கிடுமே!அளிக்கும் வாக்கே அனைத்திற்கும் ஆணி வேராய் உருவெடுக்கும்இளைய சமூகம் எழுச்சிபெறும் இனிய பொழுதை உருவாக்கும்தெளிவாய் அளிக்கும் வாக்குகளால் திடமாய் மலர்ச்சி பூத்துவரும்ஒளிதல் இன்றி தீர்க்கமுடன் உமது வாக்கு அளிப்பீரே! -கவிச்செல்வர் இரா.லாலாலஜபதி.