விண்வெளியில் வேரூன்றி விருட்சமானார் - தமிழ் இலெமுரியா

16 October 2014 1:15 am

வான்வெளியை வசப்படுத்தி வெல்வோ மாயின்  வல்லரசாய்ப் பாரதமும் உயர்ந்து நிற்கும்ஏனிதற்கு ரஷ்யாவை அமெரிக் காவை எதிர்ப்பார்த்துக் கையேந்தி நிற்க வேண்டும்வானூர்தி ஏவுகணை செயற்கைக் கோள்கள் வடிவமைக்க எம்மாலும் கூடும் என்றுதானுரைத்துச் செயல்படுத்தி வெற்றிக் கொண்ட  தமிழ்த்தாயின் தவப்புதல்வன் அப்துல் கலாம்.தென்கோடி இராமேசுவரம் பிறந்த மேதை ஜெயினுலாப்தீன் ஆஷியம்மாள் பெற்றோர் தந்தஅன்போடும் பண்போடும் அடக்கத் தோடும் ஆன்மிக நெறியோடு வளர்ந்தார், கல்விதன்பாட்டில் வயதோடு தழைத்து ஓங்க தமிழோடு அறிவியலும் வாய்க்கப் பெற்றுசென்னையிலே எம்ஐடி கலகம் சென்று  வானூர்தி பொறியியலைக் கற்றுத் தேர்ந்தார்.எஞ்சினிலா கிளைடர்எனும் விமானந் தன்னை எம்ஐடி மாணவனாய்ச் செய்தார் அந்தவிஞ்ஞானத் திறனோடு விமானி யாகும் வேலைக்கு மனுசெய்து தோற்றுப் போனசஞ்சலத்தில் விரக்தியிலே துவண்ட போது தைரியத்தை சிவானந்த சாமி ஊட்டநெஞ்சார்ந்த துணிவுடனே டெல்லி சென்று தொழில்நுட்ப பாதுகாப்பு அமைச்சில் சேர்ந்தார்.ஏவிகணை தொழில்நுட்ப சிகர மேற இன்னல்பல சோதனைகள் எதிர்த்து வென்றார்ஏவுகணை வழிநடத்த இலக்கைச் சேரும் எண்ணில்லா முயற்சிகளில் வெற்றி கண்டார்ஏவுகணை பாரதத்தின் பாது காப்பில் இரும்புக்கரம் போல்விளங்கச் செய்தார் அந்தமேவுமணு ஆயுதங்கள் சோத னையில் அமெரிக்கரை அதிரவைத்தார் சிரித்தார் புத்தர்"பாதுகாப்புத் தொழில்நுட்ப அணுஆ ராய்ச்சிப் பாதையிலே விண்ணுயர்ந்து ஓய்வு பெற்றப்போதினிலே அறிவியல்ஆ லோச கராய் பொக்ரானின் சோதனையால் ஞாலம் வென்றார்சாதனையை அக்கினிச் சிறகு களாய் சரிதத்தில் இளைஞர்வழி காட்டி யானார்நாதனெனக் குடியரசுத் தலைவ ரானார் நண்பரென குழந்தைகளின் மனதில் பூத்தார்.-குடந்தை பரிபூரணன்"

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி