14 October 2013 9:40 am
வெற்றடுப்பில் ஏற்றிவைத்தால் பால்பொங் காதுவிறகுவைத்து எரியூட்ட வேண்டு மன்றோ!கற்றவர்கள் நமக்கென்ன என்றி ருந்தால்கழிசடைகள் கோலோச்ச நாடு பாழாம்நற்றிறந்தோர் நல்இளைஞர் முனைந்து கூடிநாடுயர்த்தும் நற்பணிகள் ஆற்ற வேண்டும்வெற்றிடமாய் விட்டுவைத்தால் எவைஎ வையோவீடுகட்டிக் குடியேறும் மனிதன் வாழா!அறச்செயல்கள் அருகிடவே வன்மம் எங்கும்ஆடுதடா பேயாட்டம் என்ன செய்ய!விறல்இருக்க நகம்நீண்டு உடலைக் கீறும்வேதனைகள் நீளுதடா என்ன சொல்ல!நிறம்மாறி நிலைமாறி மனித ரெல்லாம்நேர்வழியைத் தவறென்று நிகழ்த்து கின்றார்துறவியலில் அரசியலில் கள்வர் போந்தேதோற்பொம்மை போல்நம்மை ஆட்டு கின்றார்!ஆறெல்லாம் நீரில்லை மணலும் இல்லைஅகலாத மின்வெட்டு தொழில்மு டக்கம்கூரெல்லாம் தன்னலமே! பொதுமை இல்லை!குறுக்குவழி பொருள்சேர்த்தே குனிந்து போனார்சேறில்லை வயலில்லை விளைச்சல் இல்லைசெயற்கரிய செயல்செய்வார் யாரு மில்லைமாறியிங்கு நலம்சேரப் போவ துண்டோமாற்றிடத்தான் வென்றேடுப்போம் மக்கள் கூடி.- கொட்டப்பட்டு ப.சக்திவேலன்