24 July 2013 2:20 pm
சாதிமதம் பார்க்காமல்
அனைவரையும்
சொந்தம் கொண்டாடும்
சுதந்திரக் கொசுக்கள்!
இரத்தம் குடிக்கும் பெண் கொசுக்களும்
இலைகளை உறிஞ்சும் ஆண் கொசுக்களும்
கூடிப் புணர்ந்து பல்லாயிரமாய்ப் பெருகி
பூமியையே அச்சப்பட வைக்கிறது
புதுப்புது நோய்களைப் பரப்பி!
கொசுக்கள் எல்லாம்
அய்க்கூ கவிதைகளாய்
தனித்தன்மையை
நிலைநாட்டிப் பறக்கின்றன!
பகைவென்ற மறவர்கள் கூட
தற்காத்துக் கொள்கிறார்கள்
கொசு வலைக்குள் புகுந்து கொண்டு!எத்தனை
எத்தனை வகைகள்
இந்தக் கொடுங் கொசுக்கள்!
கால்கள் நீண்டதாய்
கண்கள் சிறுத்ததாய்
இறக்கைகள் முளைத்ததாய்…அடடா
இரவு நேர ரோமியோக்கள்!
நேற்றிரவு
தூக்கமற்று அயர்ந்த வேளையில்
கடித்தக் கொசுவை அடித்து நசுக்க
கையோங்கிய போது
தப்பித்தக் கொசு – என்
காதில் விழுமாறு மொழிந்தது
“அடிக்காதே நண்பா! இனி
எனக்காவது உன் ரத்தம்
பயன்படட்டுமே!”
– பாவலர் கருமலைப் பழம் நீ,
சென்னை