20 July 2013 11:39 am
மானம் பெரியதென்று வாழ்வதே வாழ்வென்று
தானும் அதுபோலவே வாழ்ந்திட்ட பெரியாரின்
பண்புநலன் பலவாறாய்ப் பத்திரிக்கையில் எழுதுகிறார்;
நண்பருக்கும் பகைவருக்கும் நல்லவர்மிக என்கின்றார்!
பெரியாரின் தன்மைகளை மேடையிலே பேசிட்டால்
பெரியாரின் கொள்கைகளைப் புத்தகமாய் எழுதிட்டால்
பெரியார்க்குப் புகழ்சேர்க்க கருஞ்சட்டை அணிந்திட்டால்
பெரியார்க்குச் சிலைவைத்தால் பெருமைகளும் நிலைத்திடுமா?
அவர்சொன்ன பெண்ணுரிமை ஆச்சாரம் குலபேதம்
அவர்சொன்ன புரட்சிமணம் அவதாரக் கடவுள்கதை
அவர்சொன்ன வகுப்புரிமை அத்தனையும் நடைமுறையில்
குவலயத்தில் வலம் வந்தால் பெரியாரும் வாழாரோ?
– பட்டுக்கோட்டை தமிழ் அன்பன்.