உடற்பருமனைச் சீராக்கும் ஓர் கலை - தமிழ் இலெமுரியா

10 September 2013 8:53 am

இது ஓல்லியாக விரும்புபவர்களுக்கான புதிய உலகம். பொதுவாக உடல் பருமன் அதிகமுள்ளவர்கள், அவர்கள் எதை சாப்பிடக் கூடாதோ அதை அதிகம் விரும்பி உண்பவர்களாகவும், தேவையில்லாத உணவை அளவுக்கதிகமாக உண்பவர்களாகவும் உள்ளனர். ஒரு முறை ஒருவருக்கு உடல் பருமனும் அதன் மூலம் மன அழுத்தமும் வந்து விட்டால், நாம் அவர்களுக்குச் செய்ய வேண்டியவை, செய்யத் தகாதவைகளைப் பற்றி அறிவுறுத்த வேண்டும். ஏனெனில் நாக்கை வெல்வதே மிகச் சிறந்த பணியாகும். தமிழில் வாயைக் கட்டு நோயை விரட்டு" என்னும் பழமொழி ஒன்று உண்டு. இந்த உடற்பருமனைக் குறைப்பது தொடர்பாக, இந்தியாவிலேயே முதன்முதலாக ஐதராபாத்திலுள்ள தொண்டு நிறுவனமான "சேவா சாதனி"ல் உன்னதமான முறையில் ஒருவருடைய எடையை குறைக்கின்றனர். நாம் எண்ணிய நிலையை அடைவதற்கு மிகவும் காரணமாக அமைந்துள்ள இந்த உண்ணும் கலையைப் பற்றி அந்நிறுவனத்தின் தொடர்புடைய அறிவொளி ஆசானுடன் ஓர் நேர்காணல் செய்தோம். விடுதலை பெறுதல், தனியார் மயமாக்கம், உலக மயமாக்கம் ஆகியவைகள் ஒரு நாட்டிற்கு செழுமையை கொடுக்கிறதோ இல்லையோ தெரியாது. ஆனால், தற்போது பெரும்பாலான நலக் கூடங்கள், அழகு நிலையங்கள் "சில விநாடிகளில் உங்களுடையை எடையைக் குறைக்கலாம்" என்கிற ஒரே ஒரு வசீகர சொல்லைப் பயன்படுத்தி மிக விரைவில் அதிக வருவாயை ஈட்டுகின்றனர். உண்மையில் இது சாத்தியமோ இல்லையோ; ஆனால், இது போன்ற கனிவான, வசீகரமான முழக்கங்களை நம்பி, சீரற்ற உடலமைப்பு மற்றும் கொழுப்பு நிறைந்த உடலமைப்பு கொண்ட பல இலட்சக்கணக்கான ஆண்களும், பெண்களும் மயக்க நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இத்தகைய சதைக் குறைப்புக் கூடங்கள், மங்கலகரமாக "எடைக் குறைப்பு மையங்கள்" என அழைக்கப்படுகிறது. அறிவியல் பூர்வமாக இது சாத்தியமோ இல்லையோ, ஆனால் உடலிலும், மனதிலும் எதிர் வினைகளை தோற்றுவிக்கின்ற கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுதல் போன்ற குறுக்கு வழி செயல்முறைகள் பல கையாளப்படுகின்றன. இந்நிலையில் வியப்பூட்டும் விதமாக, ஐதராபாத்திலுள்ள "சேவா சாதன்" எனும் ஒரு நிறுவனம், உடற்பருமன் தொடர்பான கண்கவர் செயல்முறைகளைச் செய்து நிரூபித்து வருகின்றனர். இந்த அமைதிப் புரட்சி , அறிவியல் பூர்வமாக உங்களுடைய பணம் மற்றும் மனத்தை குறைக்கிறதோ இல்லையோ, ஆனால் சதையை (உடல் பருமனை) நிச்சயமாகக் குறைக்கிறது. இந்த நிறுவனத்தில் 90 நாட்கள் தங்கி, உங்களுடைய எந்த ஒரு உணவுப் பழக்கத்தை விட்டுக்கொடுக்காமல் சமச்சீரற்ற சதையை 10 முதல் 12 கிலோ வரைக்கும் குறைக்கலாம். நன்கு மென்று உண்ணுவதால், உணவின் முழு இயங்கு முறையையும் அதாவது உடற்பருமனைக் குறைக்க முடியுமா? என்ற கேள்விக்கு விடையளிக்கிறார். இந்தக் கட்டுரையாளர் இந்த அற்புதமான தொழில்நுட்பத்தைக் கற்று, அதன் மூலம் பின்பற்றப்பட்ட சரியான உணவு முறையால் (சரியாக உண்ணும் அனைத்து முறைகளையும் பின்பற்றி), 6 மாத காலத்தில் 10 கிலோ எடையைக் குறைத்து பயனடைந்தவர்களில் ஒருவர் ஆவார். ""தமிழ் இலெமுரியா""வின் வாசகர்களுக்காக பதிலளிக்கும் அறிவொளி ஆசான் இராமதேசி பிரதீப் ராவ் சீரிய சிந்தனையாளர், அறிஞர். தற்போது உடற்பருமனை எண்ணி மன அழுத்தத்திற்கும்,  உடல் சோர்விற்கும் ஆளாகி, நிலை கொள்ளாமல் தவிக்கும் மக்களின் பல சுவாரசியமானக் கேள்விகளுக்கு விடையளிக்கிறார். அந்த நேர்காணலிருந்து சில துளிகள்:எந்த ஒரு உணவுக் கட்டுப்பாடும் (பத்தியமும்) இல்லாமல் உடற்பருமனைக் குறைப்பதென்பது எப்படி சாத்தியமாகிறது? ஆமாம், சாத்தியமானதுதான். அதனால்தான் நீங்க இங்க வந்திருக்கிறீங்க. உணவில் கட்டுப்பாடு விதிக்கின்ற சமயங்களில் மனம் அவற்றை ஏற்க மறுக்கிறது என்பதை நாங்கள் அறிவோம். மனதினுடைய ஒத்துழைப்பின்றி உடற் பருமன் குறைப்பதென்பது சாத்தியமில்லாத ஒன்று. எங்களுடைய உத்தியால் மிக எளிய முறையில், அதிலும் எந்தவித உணவுக் கட்டுப்பாடுகளும் இல்லாமல், எடையைக் குறைக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளோம்.அது எவ்வாறு முடியும்? உணவைச் சரியான முறையில் உட்கொண்டால் 15 நாட்களுக்குள் 2 முதல் 5 கிலோ வரை எடைக் குறைய வாய்ப்புண்டு.இதைச் சற்று விரிவாகச் சொல்ல முடியுமா? ஓ! கண்டிப்பாக!. இயற்கை நமக்கு 32 பற்களைத் தனித்தனி பயன்பாட்டிற்காக வழங்கியிருக்கிறது. நாம் அதை மறந்து ஒரு விலங்கைப் போல உணவை விழுங்கிக் கொண்டிருக்கிறோம். இது உறுப்புகளை  வற்புறுத்தி தண்டிக்கும் முறையாகும். மேலும் விலங்குகளைப் போன்று மனிதர்களுக்கு அசை போடும் வசதி இல்லை. ஆகவே இந்த மிக உன்னதமான முறைப்படி உணவை 32 முறை மென்று உட்கொண்டால் உடல் எடையைக் குறைக்க முடியும் என்பது துய்த்தறிந்த உண்மை.அதாவது எடையை குறைக்க வேண்டுமெனில், சரியான முறையில் உணவை மென்று உண்ண வேண்டும் என்று சொல்கிறீர்களா? ஆம்! மிகச் சரியாக சொன்னீர்கள். ஒவ்வொரு சோற்றுருண்டையும் உண்ணும் பொழுது, ஒரு சிறு பகுதி உணவைக் கூட பற்களுக்கிடையில் விட்டுவிடாமல், இரண்டு பக்க பற்களின் தாடைகளாலும், குறைந்த பட்சம் 32 முறை நன்கு மென்று உண்ண வேண்டும். ஒருமுறை 32 எண்ணிக்கையில் மென்ற பின், அவற்றை ஒரே முயற்சியில் விழுங்கி விட வேண்டும். நாம் நன்றாக மென்று கொண்டிருக்கும் போது விழுங்கி விடக் கூடாது. வேறு விதமாகக் கூறினால், ஒவ்வொரு உணவுத் துண்டும் 32 முறை நன்கு மெல்லப்படாமல், உணவின் ஒரு சிறுபகுதி கூட தொண்டைக்குள் செல்லக் கூடாது.32 முறை மெல்லும் போது என்ன நிகழ்கிறது? நம்முடைய இருபக்கப் பற்களின் தாடைகளால் உணவை நன்கு மெல்லும் போது, இடது பக்க மூளையின் செயல்பாடுகள் வலதுபக்கத்திலும், வலது பக்க மூளையின் செயல்பாடுகள் இடது பக்கத்திலும் நடைபெறுகின்றன. அதாவது இரு பக்க மூளையும் நன்கு செயல்படுகிறது. எந்த ஒரு உணவுத் துகளும் உள்ளே செல்லாமல், 32 முறை மெல்லும் போது, உணவு எச்சிலுடன் சேர்ந்து ஒரு கூழ் போன்று மாறுகிறது. உணவு உண்பவருக்கு இந்தக் கூழ் பல்வேறு வகைகளில் உதவுகிறது. முதலாவதாக, நன்கு மெல்லப்படாத உணவை அரைப்பதற்கும், செரிமானம் செய்வதற்கும் உடலுக்குக் கூடுதல் ஆற்றல் தேவைப்படாது. இரண்டாவதாக, உணவின் அளவு நமக்குத் தெரியாமலேயே 30 விழுக்காடு குறைந்து விடும். மூன்றாவதாக, பொதுவாக நன்கு மெல்லப்படாமல் உண்ணப்பட்ட உணவினால் ஏற்படும் மலச்சிக்கல் போன்ற இடையூறு இல்லாமல் சுமுகமாக மலம் கழிகிறது.வேறு என்ன நிகழ்கிறது? மிக இனிமையான விடயம் நம் வயிற்றுக்குள் நிகழ்கிறது. நம்முடைய உணவு கூழாகும் அளவிற்கு நன்கு மெல்லப்பட்டதால், வேறு இடையூறு இல்லாமல் செரிமான முறைமைகளுக்கான ஆற்றல் சேமிக்கப்பட்டு, மலச்சிக்கலைத் தவிர்க்கிறது. இதன் மூலம் உடலில் நச்சுப் பொருள் தேங்குவது தடுக்கப்படுகிறது.எடை எவ்வாறு குறைகிறது என்பதை நீங்கள் இன்னும் சொல்ல வில்லையே? ஒவ்வொரு உணவுருண்டைகளையும் (உணவுத் துண்டுகளையும்) 32 முறை நன்கு மென்று கூழாக மாற்றி வயிற்றை நிரப்பி விடுகிறோம். மேலும் நாம் எடுத்துக் கொள்ளும் 30 சோற்றுருண்டைகளில் குறைந்த பட்சம் 200 மி.லி. எச்சிலும் உட்கொள்ளப்படுகிறது. இதனால், உணவு முழுமையாக உள்ளே இறங்குகிறது. எந்த இடையூறும் இல்லாமல், ஒருமுறை உணவு சரியான அளவீடுகளில் உட்கொள்ளப்பட்டால், உடலிலுள்ள கூடுதலான அல்லது அதிகப்படியான கொழுப்பு தானாகவே குறைந்து விடும். இது போன்று எண்ணிக் கொண்டே மெல்லும் பயிற்சியைக் கொடுப்பதற்கு முன்பு, சில மலமிளக்கிகள் மூலம் வயிற்றைத் தூய்மைப்படுத்தப் பரிந்துரைக்கின்றோம். நாங்கள் வாரத்திற்கு ஒருமுறை பழச்சாறு (திரவ) சிகிச்சையையும் பரிந்துரைக்கிறோம். இதில் அதிசயம் எதுவுமில்லை, ஆனால் உங்களுடைய எடை குறைக்கப்படும் என்பதை உறுதியாக்க முடியும். இதற்கும் மேன்மையாக, உணவு உண்ணும் முறையே ஒரு தியானமாக மாறிவிடும். எந்த இயற்பண்புகளைக் கொண்டு நீங்கள் சாப்பிடுவது என்பது ஒரு தியானம் எனச் சொல்கிறீர்கள்? நிச்சயமாக இது ஒரு தியானம் தான். தியானம் என்பது மன அமைதி, பாசாங்கு இல்லாத அணுகுமுறை, ஆழ்ந்து கவனித்தல் (சிந்தித்தல்) ஆகிய 3 நிபந்தனைகளின் கீழ் பின்பற்றப்படும் செயல்கள் ஆகும். இந்த மூன்றையும் உள்ளடக்கிய செயல் எதுவாகினும் தியானம் என்று செப்பலாம்.சாறு (திரவ) சிகிச்சை என்றால் என்னவென்று சற்று விரிவாகச் சொல்ல முடியுமா? பங்கேற்பாளர்களின் வசதிகளைப் பொறுத்து வாரம் ஒருமுறை, இந்தச் சாறு சிகிச்சை வழங்குவதன் மூலம் எந்தவொரு ஆற்றல் இழப்புமின்றி, வயிற்றுக்கு முழு ஓய்வு கொடுக்க முடியும். 24 மணி நேர சாறு சிகிச்சையில், ஒருவர் தான் தூங்கும் நேரத்தை தவிர்த்து, விழித்திருக்கும் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கு ஒரு முறை பல வகையான பழச்சாறுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். மருத்துவர்களின் பரிந்துரையை ஏற்பது நலம் பயக்கும்.உண்ணும் போது தியானம் செய்யும் முறையை உங்களால் விளக்க முடியுமா? நாங்கள் உணவு உண்ணும் போது அதிகக் கட்டுப்பாடுகளை விதிக்கிறோம். அதற்காக நாங்கள் தியானம் செய்வதற்கான மூன்று கூறுகளும் உரிய உகந்த சூழ்நிலையை உருவாக்குகிறோம். சாப்பிடுவதற்கு முன்பு, மேசை, நாற்காலி, விசிறி போன்ற உயிரற்ற மற்றும் உயிருள்ள அனைத்திற்கும் நன்றி சொல்லும் விதமாக, முதலில் நாங்கள் வழிபாட்டுக் கூட்டம் நடத்துவோம். உங்களுக்கு உடன்பாட்டுச் சிந்தனையை வரவழைப்பதே இந்த வழிபாட்டின் நோக்கமாகும். சாப்பிடும் போது சில விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. நாங்கள் பங்கேற்பாளர்களைத் தனியாக அமர்ந்து உண்ணுமாறு வலியுறுத்துகிறோம். அவர்கள் உண்ணும் போது பேசவோ, படிக்கவோ, வேடிக்கைப் பார்க்கவோ, பிறவற்றைக் கவனிக்கவோ கூடாது. அமரும் முறையும் எங்களின் வழிகாட்டுதல் படி உட்கார வேண்டும். ஒவ்வொரு தனிநபரும் உணவை மெல்லும் போது 1 லிருந்து 32 வரை வரிசையாக எண்ணுவதற்கும், 33 வது எண்ணிக்கையில் ஒரே முயற்சியில் விழுங்கி விடுமாறும் கேட்டுக் கொள்ளப்படுவார்கள். தற்போது இந்த தியானத்தின் மூன்று முக்கியக் கூறுகளான மன அமைதி, பாசாங்கில்லாத நடுவுநிலை அணுகுமுறை மற்றும் ஆழ்ந்து கவனித்தல் ஆகியவற்றை பங்கேற்பாளர்கள் உண்ணும் போது ஒருங்கே செய்து முடிக்கிறார்கள்.  இப்போது நாம் ஒரு நபர் 30 சோற்றுருண்டைகளை 960 நொடிகளில் அல்லது 15 விநாடிகளில் உட்கொள்ள முடியும் என எடுத்துக் கொள்வோம். நான் உறுதியாகச் சொல்கிறேன், ஒரு சாதாரண மனிதரால் 15 விநாடிகள் தன்னை முழுமனதாக தியானத்தில் ஆட்படுத்த முடியாது. ஆனால் நாம் உண்ணும் போது அதை சாத்தியமாக்க முடியும். வேறு விதமாகக் கூறுவோமேயானால், தியானத்தையும், சாப்பிடுவதையும் ஒருங்கே செய்ய முடியும். ஒரு முறை உங்களால் இந்த முறை பின்பற்றப்பட்டு விட்டால், பின்னர் பங்கேற்பாளர்கள் சம்பிரதாயத்திற்காக ஒரு நாளைக்கு 3 முறை உண்ணும் பழக்கத்தைத் தவிர்த்து, பசிக்கும் போது மட்டுமே சாப்பிடக் கூடியவர்களாக மாற்றம் பெறுகின்றனர்.உடற்பருமனைக் குறைக்க எந்த வகையில் இது ஏதுவாக இருக்கிறது? ஒரு இயந்திரத்தைச் செயல்படுத்துவதற்கான ஆற்றலை எரிபொருள் கொடுக்கிறது. அதே போல் மனித உடலுக்குத் தேவையான ஆற்றலை உணவுகள் மூலம் பெறலாம். சரியாக மெல்லப்படாத உணவு, அளவுக்கதிகமாக உட்கொள்ளப்பட்ட உணவு ஆகிய இரண்டுமே செரிமானம் ஆக, உடலுக்கு அதிக ஆற்றல் தேவைப்படுகிறது. எங்களுடைய சேவா சாதன் அறிவுறுத்தலின் படி உட்கொண்டால், உங்களுடைய உணவு செரிமானம் ஆக நீங்கள் அதிக ஆற்றலை இழக்க வேண்டியதில்லை. அதே நேரத்தில், நீங்கள் சாப்பிட்ட அளவு உணவிலிருந்து உடலுக்குத் தேவையான ஆற்றலை எடுத்துக் கொள்கிறது.மற்றுமொரு முக்கியமான விடயம் என்னவென்றால் நாம் சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கக் கூடாது. இது உணவிலுள்ள சத்துகளின் நீர்மைத் தன்மையைத் தவிர்த்து, விரைவில் உணவு முழுவதையும் உடலில் ஈர்ப்பதற்கு உதவுகிறது. சாப்பிட்டு 30 நிமிடம் கழித்த பின்பே தண்ணீர் குடிக்க வேண்டும்.  நாம் அறியாமலேயே நம்முடைய உணவின் அளவு குறையும் போது, உடற்பருமனும் தானாகவே குறைய ஆரம்பிக்கும். வேறென்ன கட்டுப்பாடுகள் இருக்கின்றன?வேறு பெரியக் கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. மனதில் தான் கட்டுபாடு உள்ளது. ஆமாம். நாங்கள் காய்கறி உணவை மட்டுமே வழங்குகிறோம். பிதாகோரஸ், சாக்ரடீஸ், பிளேட்டோ, அரிசுடாட்டில், லியோனார்டோ டா வின்சி, ஐசக் நீயுட்டன், வால்டையர், ஹென்றி டேவிட் தோரஸ், சார்ஜ் பெர்னாட் ஷா, பென்ஜமின் ஃப்ரான்க்லின், டாக்டர் ஆல்பர்ட் செஸ்வெய்டர், மகாத்மா காந்தி ஆகியோர் காய்கறி உணவுகளை மட்டுமே தன் வாழ்நாளில் உண்டு வந்தனர் என்னும் செய்தி உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். இவர்கள் அனைவரும் சைவ உணவு உண்பவர்கள். இவர்களை உங்களுடைய முன் மாதிரிகளாக எடுத்துக் கொண்டு, உங்களுடைய உடல் பருமன் குறையும் வரைக்கும் காய்கறி உணவை மட்டுமே உட்கொள்ள வேண்டும்.  உண்ணும் பொழுது ஒளி, ஒலி சம்பந்தமான எந்த ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளையும் பார்க்கவோ, கேட்கவோ கூடாது. உணவை உண்ணும் முன் மனதை ஒருநிலைப் படுத்த வேண்டும். நன்றியறிதலினுடைய அணுகுமுறையை வெளிப்படுத்தும் பொழுதுதான் உங்களால் மனதைச் சீரமைக்க முடியும். செய்நன்றி அறிதல் என்பது நன்றி மறவாமை ஆகும். இலட்சக்கணக்கான மக்கள் உணவின்றி, பட்டினியால் வேதனையுறும் வேளையில் உங்களுக்கு உணவு கிடைக்கின்றது என்பதே பெரும் செயலாகும். இந்த நிலையை ஏற்படுத்திய அனைத்திற்கும் நன்றி சொல்வது மனிதப் பண்பு ஆகும். உணவை நன்கு வேக வைப்பதால் அதிலுள்ள வைட்டமின்களும், தாதுக்களும் குறைந்து விடும். நாம் அரைவேக்காட்டில்தான் சமைக்க வேண்டும். பின்னர், இயற்கை நமக்களித்துள்ள பற்களைப் பயன்படுத்தி உமிழ்நீருடன் சேர்த்து நன்கு மெல்லவும். இவ்வாறு மெல்வதற்கு, தளிர்விட்ட காய்கறிகளை வாங்குமாறு நாங்கள் பரிந்துரைக்கின்றோம். இந்த உணவை ஒருவரால் குறைந்தபட்சம், ஆறு மாதத்திற்கு நுகர்ந்து, முறையாக மென்று உண்டு வந்தால் நாம் எதிர்பார்த்த நிலையை அடையலாம். அதிகமாக உட்கொள்ளுதலே உடற்பருமனுக்கு முக்கியக் காரணமாக அமைகிறது. குப்பையைக் குப்பைப் பெட்டிக்குள் திணிப்பது போன்று வயிற்றுக்குள் உணவைத் திணிக்கக் கூடாது. தேவைக்கதிகமான உணவை வயிற்றுக்குள் திணித்து உணவை வீணாக்காதீர்கள். வாழ்க்கையின் ஆற்றலை உற்பத்தி செய்யுமிடமாக எப்போது வயிறு மாறுகிறதோ, அப்போது வயிறு கோயிலாகிறது. வயிறு என்னும் கோயிலில் வாழ்க்கையின் ஆற்றல் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும், நாம் இதை அறியாது விருப்பப்படி உண்ணும் போது, அனைத்து நோய்களும் உருவாகும் மையமாக வயிறு மாறுகிறது. இந்த மடத்தில் அதிகமான பங்கேற்பாளர்களின் உடல் எடையைக் குறைக்க உதவினாலும், இந்த எளிமையான மென்று உண்ணும் செய்முறை இன்னும் சிலருக்கு கடினமாகவே இருக்கிறது.தங்கள் பரிந்துரையின் படி 100 விழுக்காடு கூழாக்கப்பட்ட உணவாக உணவைக் கொதிக்க வைத்தால், தாடைகளின் மூலம் செய்யப்படும் செயலுக்கு ஈடாகுமா? ஆலோசனை வழங்குக? உணவை அதிகம் வேக வைப்பதன் மூலம் அனைத்து சத்துகளையும், கனிமங்களையும் இழந்து விடுகிறோம். உணவை பாதி வேக வைத்து மீதியை இயற்கை நமக்களித்த தாடைகள், உமிழ்நீர் மூலம் உடலில் சேர்ப்பதே உகந்ததாகும். இப்பயிற்சியைப் பெற முளைப் பயிர்களை தினமும் உணவாக உட்கொள்ளலாம். இந்த இயற்கை நிலையான, பச்சையான உணவினை தாடைகள் மூலம் குறைந்த பட்சம் 6 மாதம் உட்கொள்ளுவதன் மூலம் ஆச்சரியமான விடைகளைக் காண முடியும்.சிந்தனைக்கான ஓர் உணவு? பழங்காலத்திலிருந்தே முளைவிடும் பயிர்கள் ஓர் தரம் வாய்ந்த உணவாக ஏற்கப்பட்டுள்ளது. இது மிகவும் மலிவான மற்றும் அதிக ஊட்டச்சத்து நிறைந்த உணவாகும். உண்மையிலேயே அவைகள் மனித இனத்திற்கு இயற்கை அன்னை வழங்கிய அருட்கொடை எனச் சொல்லலாம். விதையில் சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழும் போது, பயிர்கள் முளை விட ஆரம்பிக்கும் நிலையே தளிர் எனப்படும். ஒரு விதையானது ஏற்கனவே புரதங்கள், கொழுப்புகள், கார்போ ஹைட்ரேட், வைட்டமின்கள் மற்றும் கனிமங்களை உள்ளடக்கிய ஓர் ஆற்றல் குவியலாகும். பயிறு முளை விடும் பொழுதுதான் செயலற்ற என்சைம்கள் (செரிமானம் – நொதி) செயல்படத் தொடங்கும். பின்னர் விதைகளிலுள்ள மாவுச்சத்துக்கான குளுக்கோஸ், ப்ஃருட்டோஸ், புரதங்கள் போன்ற சர்க்கரைச் சத்தாக மாற்றப்படுகிறது. பின்னர் இது சேர்ம அமினோ அமிலமாக உருவாகிறது. செறிவூட்டப்பெற்ற கொழுப்பு, கொழுப்பு அமிலமாக மாற்றப்படுகிறது. அதனுள் நிறைந்திருக்கும் வைட்டமின்கள் வேகமாக வளர்ந்து திடீரென முளைவிடத் தொடங்குகிறது. சேமிக்கப்பட்டத் தாதுக்கள் தடையின்றி உட்செல்கின்றன; அதனால்தான் அவைகளை எளிதில் உறிஞ்ச முடிகிறது.   பிற தாதுக்களும், வைட்டமின்களும் பெரிதும் அதிகரித்துள்ளது. உடலுக்குத் தேவையான வைட்டமின் சி அதிகமாக இருப்பது மிகவும் இன்றியமையாததாகும். முளை விட்ட பயிர்களை உட்கொண்டால், வாயு உருவாகுவதைத் தவிர்த்து, எளிதில் சீரணமாக ஏதுவாகும்.முளை விடும் பயிர்கள் யாவை? பொதுவாக, அனைத்து சமையல் தானியங்கள், வித்துகள் மற்றும் பருப்பு வகைகள் முளைவிடக் கூடியவை. கீழ்க்காண்பவைகள் வழக்கமாக பயன்படுத்தப்படுகிறது.தானியங்கள்: கோதுமை, சோளம், கேழ்வரகு, கம்பு, பார்லிவிதைகள்: முள்ளங்கி, வெந்தயம், கேரட், கொத்தமல்லி, பூசணி, கற்பூரப்பழம் மற்றும் கீரை வகைகள்.பருப்பு வகைகள்: பாசிப் பருப்பு, கடலைப் பருப்பு, அந்து பூச்சி, நிலக்கடலை (வேர்க்கடலை), பட்டாணி மற்றும் சோயா பீண்ஸ். கீழ்க்காணும் பயிர் வகைகள் மிகவும் அசாதாரணமான சிறப்பு தரம் வாய்ந்தவைகள் ஆகும். குதிரை மசால்: இது அனைத்து முளைப்பயிர்களின் அரசன் என அழைக்கப்படுகிறது. இந்த குதிரை மசால் உயர்ந்த தாதுக்களும், வைட்டமின்களும் நிறைந்த ஏ, பி, சி, ஈ, கே மற்றும் அமினோ அமிலம் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. எள், வைட்டமின் ஈ, பி-காம்ப்ளக்ஸ், சுண்ணாம்புச் சத்து மற்றும் பிற ஊட்டச் சத்துகள்.நிலக்கடலை: இது அதிக புரதங்கள் நிறைந்த பயிராகும். இது முட்டையிலும், இறைச்சியிலுமுள்ள புரத்தை விட 2 1/2 மடங்கு அதிகமான புரதச்சத்துகளை உள்ளடக்கியுள்ளது. காய்கறி வகைகளில் சோயா பீண்சைத் தவிர்த்து, பிற காய்கறிகளை விட அதிக புரதத்தைக் கொண்டுள்ளது. இந்த வேர்க்கடலையை இரவு முழுவதும் ஊற வைத்த பின், உண்பதே சிறந்ததாகும்.சோயாபீண்: இது ஒரு முழுமையான புரதச் சத்து அடங்கிய உணவாகும். சில முக்கிய உறுப்புகளிலுள்ள கொழுப்புப் பொருட்களை குறைப்பதற்கான இலசித்தின் எனப்படும் மிகச்சிறந்த பயிராகும். எவ்வாறு முளைவிடச் செய்வது? பயிர்களை முளைவிடச் செய்வது மிகவும் எளிமையானதாகும். பலவகையான நல்ல வித்துகளை பயன்படுத்த வேண்டும். பயிரிலுள்ள நச்சு இரசாயனங்களை அகற்ற அதை நன்கு அலசிக் கழுவ வேண்டும். இந்த பயிர்கள் அல்லது பருப்பு வகைகளை ஒரு கொள்கலனினுள் போட்டு, சுத்தமான நீரினை ஊற்றி ஊர வைக்க வேண்டும். அந்தக் கொள்கலனை மிதமான வெப்பமுள்ள இடத்தில், சற்று காற்று உட்புகும் அளவிற்கு மூடி வைக்க வேண்டும்.  8 லிருந்து 12 மணி வரை ஊறிய பின் தண்ணீரை வடிகட்ட வேண்டும். கொள்கலனின் கொள்ளளவு இந்த பயிர்களை முளைவிட்டு வளர ஏதுவாக உள்ளனவா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இந்த விதைகளை ஒரு நாளைக்கு 2லிருந்து 3 முறை நன்கு கழுவ வேண்டும். மேலும் ஒவ்வொரு முறையும் கழுவிய பின், தண்ணீரை நன்கு வடிகட்ட வேண்டும். இந்த பயிர்களை வேர் விடும் அளவிற்கு ஊற வைத்துவிடக் கூடாது.  நாம் வாங்கிய இந்த விதைப்பயிர் குறைந்த பட்சம் அரை அங்குலமாவது வளர்ந்திருக்க வேண்டும்.  பொதுவாக ஒரு விதையின் ஈரப்பதத்தையும், தட்பவெப்ப நிலையையும் பொறுத்தே, இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் முளை விட ஆரம்பிக்கிறது. உதாரணமாக பாசிபருப்பு தளிர்விட குறுகிய நேரமும், குதிரை மசாலா தளிர்விட அதிக நேரமும் எடுத்துக் கொள்கிறது. நீர், வெப்பம், காற்று, வெளிச்சம் ஆகியவை முளைவிடுவதைக் கட்டுப்படுத்தும் காரணிகள் ஆகும். சிறந்த முளைவிட்ட பயிர்களை உண்பதால் அதிக ஊட்டச்சத்துகள் கிடைக்கின்றன. முளைவிடும் பயிர்களை இறுகி மூடியக் கொள்கலனில் வைத்து, குளிர்சாதனப் பெட்டியில் வைத்துப் பாதுகாக்கலாம்.முடிவுக்காக…… உடல் பருமன் என்னும் எண்ணமும், தோற்றமும் கோடிக்கணக்கான மக்களை மனதளவில் பாதிப்படையச் செய்வதுடன், அந்தத் தன்மையிலிருந்து விடுபட வேண்டி அழகு நிலையங்களையும், உடல்பயிற்சிக் கூடங்களிலும் சென்று பணத்தை வாரி இறைக்கின்றனர். இது பல நேரங்களில் வேறு பல நோய்களுக்குக் காரணமாகவும், தசைப் பிடிப்புகளுக்கும் கூட காரணமாகி விடுகிறது. ஆனால், இயற்கையோடு ஒன்றி வாழும் விலங்குகள் இது போன்ற சிக்கலின்றி மகிழ்ச்சியுடன் அலைந்து திரிகின்றன. மனிதர்களாகிய நாம் இவற்றை அறியாது, மகத்துவத்தை நம் பழக்கவழக்கங்களில் தன்னகத்தே வைத்துக் கொண்டு தடம் மாறி, மன உளைச்சல், மயக்கம் போன்றவற்றிற்கு ஆளாவது முறைதானா? உணவுப் பழக்கவழக்கம், வெளிநாட்டு மோகம், விரைவு உணவு என பல வழிகளில் திசைமாறிச் செல்வதை தவிர்த்து நாம் நாமாக வாழ்ந்தால்  நலம் பெறலாம். உடல் பருமனுக்கு விடை சொல்லலாம்.நேர்காணல்: ப.இரா.சுபாசு சந்திரன்."

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி