உலக மயமாக்கல் – இருபத்தொன்றாம் நூற்றாண்டில் நாம் எதிர்கொள்ளும் சவால்கள் - தமிழ் இலெமுரியா

16 November 2014 7:53 pm

முதல் உலகப் போர் நடைபெற்று நூறாண்டுகளை கடந்து விட்ட நிலையில் பன்முகப் பண்பாடு:  உலக மயமாக்கல், பன்முகப் பண்பாடு, அமைதிக் கட்டமைப்புகளில் இருபத்தொன்றாம் நூற்றாண்டில் நாம் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் மற்றும் சாத்தியக் கூறுகளுக்கான ஆய்வு இன்றைய நாட்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். உலகமயமாக்கப்பட்ட இற்றை உலகில் பரவியிருக்கும் அச்ச உணர்வுகளுக்கிடையே இந்த ஆய்வு ஒரு முக்கியமானதாகக் கருதப்படுகிறது. உலகம் முழுவதும் ஒரே சீராக பரவியிருக்கும் மேற்கத்திய பண்பாடும் அதன் மதிப்பும் உலகமயமாக்களின் நன்மைகளை அறுவடை செய்யும் நிலையில் பிற பண்பாட்டு மக்களுக்கு மிகுந்த அச்சுறுத்தலாக விளங்குகின்றன. அமைதிக் கட்டமைப்பின் முக்கிய அம்சமானது முதல் உலகப் போர் முடிந்து நூறாண்டுகளை எட்டி விட்டதால் 2014 ஆம் ஆண்டு ஒரு சிறப்பு அர்த்தத்தை பெறுகிறது. நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகள் போரினால் வீழ்ந்து கிடந்தன; இரத்த வெள்ளத்தில் மிதந்தன; இதன் வரலாற்றை முந்தைய காலத்தில் யாரும் அறிந்திருக்கவில்லை. போர் வெடிப்பதற்கு முன்பு, அங்கே அமைதியைப் போன்ற உணர்வு நிலவியது. அந்த காலத்தில் ஓர் இலண்டன் குடிமகன் உலகின் எந்த மூலையிலிருந்தும் எந்தவொரு கட்டளையும் வீட்டில் உட்கார்ந்து கொண்டே பிறப்பிக்கவும் அமைதியை அனுபவிக்கவும் முடிந்தது என பிரபல பொருளியல் நிபுணர் ஜான் மேனார்ட் கெய்னஸ் எழுதியுள்ளார். எனினும், எதிர்காலத்தில் அவரது குறிப்பிடத்தக்க நுண்ணறிவு, திட்டங்கள், இராணுவவாத மற்றும் வல்லதிகார அரசியல், இனம் மற்றும் பண்பாட்டு எதிர்ச் செயல்கள், கட்டுப்பாடுகளுடைய கொள்கைகள், ஏகாதிபத்தியம் ஆகியவை சமாதான சொர்க்கத்தில் ஊடுருவும் பாம்புகளைப் போல செயல்பட்டுக் கொண்டிருக்கும் என எச்சரித்தார். இன்று உலகமயமாக்கல் மற்றும் உலக அமைதி நிலவும் சூழலில் பன்முகப் பண்பாட்டில் கவனம் செலுத்தும் போது, பிற பண்பாட்டு மக்களுக்கு மத்தியில் கொள்கை விலக்கல், இனங்கள் மற்றும் பண்பாட்டு எதிர்ச் செயல்கள் என்பது "சொர்க்கத்தில் நயவஞ்சகத்தை ஏற்படுத்தும் செயல்" என்னும் பேராசிரியர் கெய்ன்ஸின் விரிவுரை இங்கே குறிப்பிடத் தக்கதாகும். அதாவது இதுபோன்ற பண்பாடு மற்றும் இனங்களுக்கிடையே எதிர்ச் செயல்கள் தொடர்ந்து நிலவுமெனில், அனைவரும் இணைந்து சகவாழ்வு வாழ முடியாது என்பது பொருள். எனவே இத்தகைய பன்முகப் பண்பாட்டால் ஆபத்துகள் ஏற்பட்டு, அதன் மூலம் பல்வேறு இனங்களுக்கிடையில் ஒரு மோதல் போக்குத் தொடர் நிகழ்வாக அமையுமானால் உலகில் அமைதிக்குக் குந்தகமான சூழலே நிலவும்.உலக அமைதிக்கு கரணியமாக விளங்கும் சாதாரண மக்களுடனான இன உறவு: சற்றொப்ப 30 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த "சொர்க்கத்தில் நெளியும் பாம்புகள்" போன்ற தன்மைபலரைக் கொன்றொழித்து பேரழிவை உருவாக்கின. இரண்டாம் உலகப் போர் தொடக்கத்தின் போது பண்பாட்டு இகழ்ச்சி மற்றும் புறக்கணிப்பு என்னும் பெயரில் உலக அரங்கின் வேரில் பாம்புகளின் நஞ்சை தெளித்ததன் விளைவாக சுழல் முறையிலான வன்முறைகளும் இரத்த சிந்துதல்களும் நிகழத் தொடங்கின. இக்கொடுரமான இரண்டாம் உலகப் போர் நிகழ்வதற்கு முன்பு சமாதானத்தை விரும்பும் மக்கள் பலர் போரை தடுத்து நிறுத்துவதற்கான வழிகளை கண்டறிந்து அவற்றை முற்றிலும் செயல்படுத்தி வந்தனர். சிலர் இப்போரை தடுத்து நிறுத்துக் கோரியும் அதன் விளைவாக ஏற்படக்கூடிய பேரழிவிலிருந்து உலகைக் காத்திடவும், இருபதாம் நூற்றாண்டின் நவீன காலத்திய அகிம்சைவாதியும் உபதேசகருமான மகாத்மா காந்திக்கு கடிதம் எழுதினர். அவர் ஹிட்லருக்கு இரண்டு கடிதங்கள் எழுதினார். அதில் ஒரு கடிதத்தில் இருபத்தொன்றாம் நூற்றாண்டின் அமைதிக் கட்டமைப்பிற்கான நிரந்தர முக்கியத்துவம் குறித்தும் மிகவும் கவனிக்கத்தக்கதாக சிலவற்றை எழுதியிருந்தார். எனவே போரை நிறுத்தக் கோரி ஹிட்லருக்கு காந்தி வேண்டுகோள் விடுத்திருந்தார். ஏனெனில் ஊமைகளாய்த் திரிந்த இலட்சக் கணக்கான இந்தியர்களின் மீது தனது கவனத்தைத் திருப்பியது போன்றே ஐரோப்பிய மக்களின் மத்தியிலிருந்து சமாதானத்தை விரும்புவோரின் அழுகுரலை அவரால் கேட்க முடிந்தது. ஆகவே அமைதிக்கான அடிப்படை முற்படு தேவை என்பது ஊமை மக்களாய் திரியும் இலட்சக்கணக்கானோரின் வாழ்க்கை முறையை சீர்படுத்துதல் என்பதாகும். ஊமை மக்கள் என்போர் அடிக்கடி அநீதி, பாகுபாடு மற்றும் சுரண்டலுக்கு இரையாகும் சாதாரண மக்களே ஆவர். கலாச்சார சுதந்திரத்தை பின்பற்றுவதற்கான வாய்ப்புகளை பெருக்கி, வன்முறையிலிருந்து விடுபட்டு ஒரு சமூக ஒழுங்கிற்காக ஏங்கும் குடிமக்களின் பரந்த உறவு முறைகள் போன்ற பிணைப்புகளே சமாதானத்தைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளாகும். முற்றிலும் எந்த பாகுபாடுமின்றி அவரவர் மத நம்பிக்கைகளுக்கிணங்க கொண்டாடி மகிழவும் சமுக, பொருளாதார மற்றும் சுகாதார நலன்களுக்கான உரிமையும் வழங்கப்பட வேண்டும். ஏனெனில் அவர்கள் குறிப்பிட்ட சமயக் கோட்பாட்டைப் பின்பற்றுபவர்களாகவோ அல்லது குறிப்பிட மொழியை பேசக் கூடியவர்களாகவோ அல்லது குறிப்பிட்ட இனம் அல்லது இனக்குழுக்களைச் சேர்ந்தவர்களாகவோ இருக்கலாம்.ஓரினத்தன்மை – வன்முறைக்கு பின்னாலுள்ள ஓர் காரணி கொள்கை விலக்கல்களும் இனம் மற்றும் பண்பாடுகளுக்கிடையிலான போட்டியுணர்வும் அமைதியை சீர் குலைத்து விடும் என முந்தையக் குறிப்பில் பேராசிரியர் கெய்ன்ஸ் பிரகடனப் படுத்தியிருந்ததை குறிப்பிட்டிருந்தோம். இத்தகைய உள்ளார்ந்த கருத்தாய்வை ஓர் அரசன், ஒரு நம்பிக்கை, ஒரு சட்டம் மற்றும் அதன்படி உருவாக்கப்பட்ட கட்டமைப்புகளைக் கொண்டுள்ள ஐரோப்பாவின் தேசிய குடியரசுகளின் தோற்றம் என்ற சூழலில் பார்க்க வேண்டும். ஒரே நம்பிக்கை, இனம், மொழி என்ற அடிப்படையில் ஒன்றுபட்ட தேசிய அரசுகளில் கடுமையான போட்டியுணர்வுகள் உருவாகின்றன. இந்த போட்டியுணர்வே இறுதியில் தீவிரமான தேசியவாதம், போர், வன்முறை மற்றும் காலனித்துவத்திற்கு வழிவகுக்கிறது. உலகமயமாக்கபட்ட உலகின்  இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஓரினத் தன்மையுள்ள ஒரு நாட்டில் ஒற்றுமை மற்றும் இணக்கத்தைப் பாதுகாக்க வேண்டும் எனும் நோக்கம் விரும்பத்தக்க காரணியாக இருந்தது. இதனால் சனநாயக முறை அறிமுகப் படுத்தப்பட்டது. இந்நாடுகளின் அரசியல்வாதிகள் ஒரு நம்பிக்கை, ஒரு சட்டம் மற்றும் ஓர் அரசன் எனும் நவீன சமுக பரிமாணத்தை புரிந்து கொண்டவராக இருந்தாலும் இதுவே சிறந்த தேசியக் கட்டமைப்பு என நினைத்து விட முடியாது. பல மதங்கள், மொழிகள் மற்றும் இனப்பிரிவுகளைக் கொண்டுள்ள பலவிதமான மற்றும் பரந்த நாடுகளிலும் சனநாயக ஆட்சிமுறை சாத்தியமாக இருக்கலாம். இந்தியர்கள் சுதந்திரத்திற்கான போராட்டத்தில் தங்களை ஈடுபடுத்தும் போது சனநாயகம் மற்றும் சனநாயகக் கட்டமைப்புகளை அறிமுகப்படுத்துமாறு கோரினர். குடியரசு நிறுவனங்களான பிரிட்டிஷ் அதிகாரிகள் இவற்றை எள்ளி நகையாடினர். 1930 ஆம் ஆண்டுகளில் புகழ்பெற்ற பிரபுக்கள் சபையின் முதன்மை உறுப்பினர்களில் ஒருவரான பிரிட்டிஷ் தலைவர் பிரபு நார்த்ப்ரூக் (Lord Northbrooke) என்பவர் பின்வருமாறு கூறினார். "…சாதிகள், மதங்கள் மற்றும் மொழிகள் என பல்வேறு பிரிவினைகளும் பரந்த நிலப்பரப்பும் கொண்ட இந்தியாவிற்கு நாடாளுமன்ற முறைமை பொருந்தாது. இது எப்போதும் மனித மனங்களில் நுழைந்திருக்கும் கொடூரக் கனவுகளைப் போன்ற நாடாளுமன்ற நிறுவனமாகத்தான் பணியாற்ற இயலும்"பன்முகத் தன்மை அமைதியை ஊக்கப்படுத்துகிறது ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தைப் பாதிக்கின்ற பிரிவினையாக இந்த பன்முகத் தன்மை கருதப்பட்டது. இந்த பன்முகத் தன்மையானது தேசிய கட்டமைப்பை உருவாக்கும் நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டை காரணியாக இருக்குமென கருதப்பட்டது. ஒரு நாட்டின் ஓரினத்தன்மை மற்றும் ஒரே சீரான தன்மையானது அந்நாட்டின் ஒற்றுமைக்கான ஓர் ஒத்திசைவான அணுகுமுறைக்கு நலம் பயப்பதாகவும், நாடாளுமன்றம் அல்லது சனநாயக முறையைக் கொண்ட ஆட்சிமுறை நடைமுறைப்படுத்த உகந்ததாகவும் கருதப்பட்டது. ஆகவே பன்முகத்தன்மையும் வேறுபாடுகளையும் கொண்ட இந்தியச் சமுகம் சனநாயகத்திற்கும் சனநானயக கட்டமைப்புடன் கூடிய ஆட்சிமுறைக்கும் உகந்ததல்ல எனக் கருதப்பட்டது. எனினும், கடந்த கால வரலாற்று உண்மைகள் பன்முகத்தன்மை நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் எனக் கருதப்பட்ட நிலையில் தற்போது நாட்டினுடைய வளர்ச்சிக்கு கரணியமாக அமைந்துள்ளது என்பது புலனாகிறது. பல நூற்றாண்டு காலமாக இந்தியச் சமுகத்தினரிடையே நிலவி வரும் பல்வேறு நாகரிகங்கள் ஒன்றுக்கொன்று எதிராக செயல்படுபவை என தவறாக எண்ணிய நிலையில் அவைகள் தம் ஒற்றுமை போக்கை நிறுவியுள்ளன. தேசப் பிதா மகாத்மா காந்தியின் எண்ணப்படி அவர் ஒரு முழுமையான இந்து இந்தியாவையோ அல்லது முழுமையான இசுலாமிய இந்தியாவையோ அல்லது முழுமையான கிறித்தவ இந்தியாவையோ விரும்பவில்லை. ஆனால் பல்வேறு மதங்களுகிடையிலான நல்லிணக்கமும் பல்வேறு கலாச்சாரங்களும் சகிப்புத் தன்மையுடன் ஒன்றுபட்டு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்தும் வளர்ச்சி பெற்றதையும் தன் எண்ணத்தின் வெளிப்பாடாக கூறுகிறார். இந்தியா எட்டியுள்ள ஒற்றுமையும் வளர்ச்சியும் மக்காளாட்சி மேலாண்மையும் பிற நாடுகள் அல்லது குழு நாடுகள் இதுவரை எட்டாத ஓர் இலக்காகும். ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பு இதற்கு ஒரு சரியான எடுத்துக்காட்டாகும். அவர்களால் பல மொழிகளை தேசங்களை இனங்களை ஒன்றாகக் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்தியாவில் நிறுபிக்கப்பட்ட உண்மைகளுக்கு அருகில் கூட அவர்களால் வர இயலவில்லை. ஐரோப்பிய ஐக்கிய நாடுகள் துருக்கி நாட்டை தன்னுடைய கூட்டு நாடுகளில் ஒன்றாக இணைத்துக் கொள்வதற்கு, அவர்கள் இசுலாமிய நாடு என்பதால் மறுக்கின்ற தன்மையானது அவர்கள் பன்முகத் தன்மையை ஏற்க மறுக்கும் மனவோட்டத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது. இருபத்தொன்றாம் நூற்றாண்டை எட்டியுள்ள இன்றைய உலகில் பண்பாடு, மதம், மொழி மற்றும் இனம் என்ற அடிப்படையில் ஓரினத்தன்மை கொண்ட நாடுகள் என எந்தவொரு நாட்டையும் கணக்கிட இயலாது. அதிகபட்ச நாடுகள் வேற்றுமைத் தன்மையும் பன்மைத்துவமும் நிறைந்து காணப்படுகின்றன. உண்மையில் உலகமயமாக்கலானது தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் ஒட்ட வெளிச்சத்தில் இயக்கப்படுகின்றன என்றாலும் பிற தேசிய இனங்கள், சிறுபான்மை மதக் குழுக்கள் மற்றும் மொழியியல் குழுக்களைச் சேர்ந்த மக்களின் சுதந்திரத்தில் இடையூறு விளைவித்தல், ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடிப்படையாக விளங்கும் சமுக, பொருளாதாரா மற்றும் ஏனைய உரிமைகளை மறுத்தல் போன்ற பிற்போக்குத்தனமான குழுக்களும் இயக்கங்களும் இருந்தாலும் கூட தரவுகள், வேகமாக இயங்கும் மக்கள், பொருள்கள் மற்றும் சேவைகள் ஆகியவை பன்மைத்துவத்தை ஊக்குவிப்பதற்கான காரணிகளாக அமைந்துள்ளன.  "நம் நாகரிகத்தின் அழகும் சோதனையும் நாம் வேற்றுமையில் ஒற்றுமை காணும் திறனில்தான் உள்ளது" என மகாத்மா காந்தி நாவன்மையுடன் கூறியதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.பண்பாட்டு பன்முகத்தன்மை குறித்த உலகளாவிய பிரகடனம் 2001 ஆம் ஆண்டு யுனெஸ்கோ (UNESCO) முதன் முதலில் பண்பாட்டு பன்முகத் தன்மை குறித்த உலகளாவிய பிரகடனத்தை உட்புகுத்தியது. அதில் வனங்காடுகளில் பல்லுயிர்களின் முக்கியத்துவத்தைப் போன்றே மனித சமுதாயத்தில் பண்பாட்டு பல்வகைமையும் இன்றியமையானதாகும் எனக் கூறியுள்ளது. பண்பாட்டு பல்வகைமையும் பல்லுயிர்களும் முறையே மனித சமுதாயத்திற்கும் வனங்காடுகளுக்கும் இன்றியமையானது என்பதை இதிலிருந்து தெளிவாக புரிந்து கொள்ளலாம். அதேபோல் குருதேவ் இரவீந்திரநாத் தாகூர் காடுகள் குறித்த தனது ஒளிமயமான கட்டுரை ஒன்றில் "காட்டு வாழ்க்கையின் பல்வகைமையிலிருந்து ஊற்றெடுத்ததே சமுதாயப் பல்வகைமை" என எழுதியுள்ளதும் கவனிக்கத்தக்கது. எனவே காடுகளிலுள்ள தாவரங்கள் அல்லது காடுகளின் பேரழிவு என்பது சமுதாயத்தின் பல்வகைமையை (பன்முகத்தன்மையை) இழப்பதற்கு வழிவகுப்பவையாகும். வேறு விதமாகக் கூறுவோமெனில், பன்முகப் பண்பாட்டை மையமாகக் கொண்டுள்ள சமுதாயத்தின் பல்வகைமையை பாதுகாப்பதற்காக பல்லுயிர்களின் மதிப்பை நமக்குக் கற்றுத் தரும் தாகூரின் எழுத்துகளிலிருந்து பாயும் இந்திய நுண்ணறிவு நமக்கு வேண்டும். எனவே நாம் பன்முகப் பண்பாட்டை காக்கவேண்டுமெனில் பல்லுயிர்களுக்கு பாதுகாப்பளிக்க வேண்டும். இதைத்தான் இந்த ஆய்வின் முக்கியக் கருப்பொருளாக நாம் உணரப்பட வேண்டும். பன்முகப் பண்பாடும் மனித முன்னேற்றமும் 2001 ஆம் ஆண்டு யுனெஸ்கோ பண்பாட்டு பன்முகத்தன்மை குறித்த உலகளாவிய பிரகடனத்தை ஏற்படுத்திய பொழுது, 2004 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மேம்பாட்டு திட்டத்தில் "இன்றைய பன்முக உலகில் பண்பாட்டுச் சுதந்திரம்" குறித்து மனித மேம்பாட்டு அறிக்கையை வெளியிட்டது. அதில் பண்பாட்டுப் பல்வகைமையானது மக்களுக்கான விருப்பங்களை அகலப்படுத்துகிறது; அதிகாரமளிக்கிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மக்கள் தங்களின் மத நம்பிக்கைகள், பேசும் மொழிகள், பின்பற்றும் பழக்கவழக்கங்கள் மற்றும் பண்பாட்டு நடைமுறைகளை, உரிமைகளைப் பறிப்பதால் ஏற்படும் பண்பாட்டு இழப்புகளிலிருந்து அவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் எனில், மனித மேம்பாட்டுக்கு உறுதுணையாக விளங்கும் சமுகம், பொருளாதாரம், சுகாதார மற்றும் பிற வாய்ப்புகளையும் உரிமங்களையும் ஊக்கப்படுத்த இயலாது என்றும் கூறுகிறது. மரபு வழிப் பண்பாட்டு நடைமுறைகளை வெளிக்கொணரும் போது பழமைவாதம் அல்லது பிற்போக்கான பார்வை போன்றவற்றை முன்னெடுத்துச் செல்வதாகாது. பண்பாட்டு விலக்கல்களை நீக்குவதற்கு 2004 ஆம் ஆண்டு மனித மேம்பாட்டு அறிக்கை கூறுவது யாதெனில், பன்முகப் பண்பாட்டுக் கொள்கைகள் மனதை விரிவுபடுத்துவதற்கும் அகண்ட விருப்பத்திற்கும் ஒவ்வொரு இனத்தின் பண்பாட்டுக் கூறுகளை புரிந்து செயல்பட வேண்டும் என்ற புரிதல் தேவைப்படுகிறது. உலகிலுள்ள முக்கிய சிந்தனைக் குழுக்கள் அவர்களின் சிந்தனை அறிக்கையில் பன்முகப் பண்பாடும் சமுக பல்வகைமையும் உள்ள இடத்தில்தான் அமைதி, அகிம்சைக்கான கூறுகள் இருக்கும் என தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர். இந்தியச் சமுகத்தில் அதன் நீண்ட வரலாற்றில் எந்தவொரு புனிதப்போர் அல்லது மதப் போரோ நடைபெறவில்லை என்றால், மக்களின் வாழ்க்கைக் கட்டமைப்பாக விளங்கும் பல மதங்களுடன் கூடி வாழ்ந்த ஒற்றுமைப் போக்காகும். அப்போதுதான் மனிதகுல மேம்பாட்டை ஊக்கப்படுத்தலுக்கும் மக்களின் பரந்த மனதையும் விருப்பத்தையும் விரிவுபடுத்தலுக்கும் அடிப்படையாக விளங்கும் அமைதி மற்றும் சகிப்புத் தன்மைக்கான ஒரு முக்கிய கரணியமாக பன்முகப் பண்பாடு இருக்கும். எனவே 2001 ஆம் ஆண்டு யுனெஸ்கோ-வால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பண்பாட்டு பல்வகைமை குறித்த பிரகடனத்தை "பண்பாட்டு பல்வகைமை என்பது மேம்பாட்டிற்கான ஒரு காரணியாகும்" என மிகவும் பொருத்தமாக விதி 3-இல் வைத்துள்ளது. 21 ஆம் நூற்றாண்டை எட்டியுள்ள இன்றைய உலகில் பொருளாதார மேம்பாட்டையும் வளர்ச்சியையும் தீர்மானிக்கும் அம்சங்களாக சர்வதேச உறவுகளும் அரசியல் கொள்கைகளும் விளங்குகின்றன. இத்தகைய மேம்பாட்டை பெறக்கூடிய அனைத்து பயனாளிகளின் பண்பாடு, மொழி மற்றும் இனக் குழுக்களுக்கான வளர்ச்சிகளையும் வாய்ப்புகளையும் விரைவுபடுத்துவதற்கு நமக்கு இந்த பன்முகப் பண்பாடு மிகவும் அவசியமானதாகும். எனவே பன்முகப் பண்பாட்டை ஏற்பது அங்கீகரிப்பது மட்டும் முக்கியமானதல்ல; அனைத்து மத, இன, மொழி மக்களும் சமுக, பொருளாதார மற்றும் ஏனைய உரிமைகளை அணுகுவதற்கு ஏதுவான வாய்ப்புகளையும் விரிவுபடுத்த வேண்டும் என்பது மிகவும் அவசியமாகும்.பன்முகப் பண்பாட்டை அச்சுறுத்தும் ஆணாதிக்க தாராளமயம் வளர்ந்த சனநாயக நாட்டிலுள்ள தலைவர்கள் சிலரிடமிருந்து வெளிப்படும் பன்முகப் பண்பாட்டு வாதத்திற்கு எதிராக முற்றிலும் முரண்பாடான, கிளர்ச்சிகரமான குரல்கள் எழுந்துள்ளன. 2012 ஆம் ஆண்டு ஹெல்சின்கியில் ஏற்பாடு செய்திருந்த ஐரோப்பிய பாதுகாப்பு மாநாட்டில் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் பங்கேற்ற போது, பிரிட்டன் சமுகத்திலுள்ள இசுலாமியர்கள் பெண்களுக்கு மரியாதையளித்தல், சனநாயக தோற்றத்திற்கு வலுசேர்த்தல் மற்றும் கருத்து வேறுபாடுகளை ஏற்றுக் கொள்ளுதல் போன்ற பிரிட்டனின் பண்புகளை உள்வாங்குவதில் தோல்வியடைந்துள்ளனர் என அனுசரித்தார். இத்தகைய பண்புகளை பிரிட்டன் சமுகத்திலுள்ள முசுலீம்கள் கடைபிடிக்காததே பிரிட்டனின் பன்முகப் பண்பாட்டுத்துவத் தோல்விக்கு வழிவகுத்தது என அவர் முன்மொழிந்தார். அவர் பிரிட்டனின் பண்புகளை முசுலீம்கள் உள்ளீர்த்துக் கொள்ள வேண்டுமென வாதிட்டார். பிரிட்டன் பிரதமரின் இத்தகைய பேச்சுக்கு பல இடங்களிலிருந்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. இன்றைய 21 ஆம் நூற்றாண்டில் மனித மேம்பாட்டிற்கும் அமைதியாக கூடி வாழ்வதற்கும் பல நாடுகள் பன்முகப் பண்பாட்டுக் கொள்கைகளை அரவணைத்துக் கொண்டிருக்கும் போது, பன்முகப் பண்பாட்டிற்கும் தாராளமயத்திற்கும் எதிர்மறையாக இருக்கின்ற ஆணாதிக்க தாராளமயம் குறித்து கேள்விப்படுகிறோம். உள்ளபடியே இசுலாமியர்கள் செறிந்து வாழும் முசுலீம் நாடுகள் அல்லது முசுலீம்கள் அல்லாத நாடுகளென உலகின் எப்பகுதியில் வாழ்ந்தாலும் பிற மதங்களை வழிபடும் மக்களின் சனநாயக மாண்புகளுக்கும் சனநாயகத்திற்கும் ஆதரவாகவே உள்ளனர் என உலக பண்பாட்டு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இசுலாம் சனநாயகத்திற்கு இசைந்து வராத மார்க்கம் எனும் ஒரே மாதிரியான எண்ணத்தைக் கைவிட வேண்டும். மேலும் சரியான கண்ணோட்டத்துடன் காண முனைவதுடன் பன்முகப் பண்பாட்டின் வெற்றிக்கான மகத்தான ஆற்றலை மெருகேற்ற வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிற்கு வருகை புரிந்த இசுரேலைச் சேர்ந்த பயங்கரவாத எதிர்ப்பு நிபுணர் ஒருவர் "இந்தியாவிலுள்ள இசுலாமியர்கள் தீவிரவாதத்திற்கு சிறந்த மாற்று மருந்தாக உள்ளனர். ஏனெனில் அவர்கள் இசுலாமிய மறை மெய்ஞானக் கோட்பாட்டைப் (சுபிசம்) பின்பற்றுகிறார்கள்" என தனது அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதை இங்கு நினைவுகூர்வது மிகவும் பொருத்தமானதாகும்.பன்முகத் தன்மைக்கு அதிகாரமளித்தல் மகிழ்ச்சி, உற்சாகம், அதிகாரம் நிறைந்த பன்முகத் தன்மையை உருவாக்க வேண்டும். மனித மேம்பாட்டு அறிக்கை 2004 நமக்கு எச்சரித்ததைப் போல, அமைதியும் அதிகாரமும் அற்ற பன்முகத் தன்மையை உருவாக்கும் எந்த முயற்சியும் உலகமயமாக்கப்பட்ட உலகிற்கு முற்றிலும் ஆபத்தானதாக அமைந்துவிடும். பன்முகப் பண்பாடும் பாலின சமத்துவமும் பன்முகப் பண்பாட்டுத்துவதும் குறித்து பேசும் போது ஒருவன் பலவிதமான மதங்கள், மொழிகள் மற்றும் இனக்குழுக்களை பறைசாற்றும் வெவ்வேறு பண்பாட்டு மக்களின் உடனிருத்தல் என்பது மட்டுமே பன்முகப் பண்பாட்டுத்துவம் அல்ல. பன்மடங்கு கலாச்சார நீரோடையின் பொதுத் தன்மையை அடிப்படையாகக் கொண்டு நம் சமுதாயத்தால் வடிவமைக்கப்பட்ட பொதுக் கொள்கைளைப் பின்பற்றுவதுடன் பேணிப் பாதுகாக்க வேண்டும். பன்முகப் பண்பாட்டுக் கொள்கையை நிலைநாட்டுவதற்கான சகிப்புத் தன்மை மற்றும் கலாச்சார ஏற்பு, பாலின சமத்துவம், மனித உரிமைகள் ஆகியவை ஒருங்கே அமைந்திருக்கும் சூழலை உருவாக்க வேண்டும். அனைத்து பண்பாடுகளிலும் பெண்கள் பாதிக்கப்படும் வகையில் அவர்களின் பாலினத்தை காரணம் காட்டி பாகுபாடுடனும் இடர்பாடுடனும் நடத்தப்பட்டிருக்கிறார்கள். பன்முகப் பண்பாட்டுக் கொள்கை வெற்றி பெற வேண்டுமெனில், பாலின சமத்துவம், மகளிர் மேம்பாடு (பெண்களுக்கு அதிகாரமளித்தல்), பெண்களுக்கான உடன்பாட்டு நடவடிக்கைகள் ஆகியவற்றிற்கு ஆதரவளிக்கும் பண்பாட்டு நடைமுறைகளைக் மேற்கொள்வது மிகவும் அவசியமாகும். அப்போதுதான் அவர்களால் அரசியல், சட்டமன்றம், பொருளாதாரம் என நம் சமுதாயத்தின் அனைத்து துறைகளிலும் போதுமான பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்த இயலும். ஐக்கிய நாடுகளின் கணக்கீட்டின் படி, உலக பெண்களில் 33 விழுக்காட்டினர், அரசியலில் சரியான, ஒரு ஊழல் இல்லாத சமுதாயம் மற்றும் ஆட்சிமுறையை நிறுவுவதற்கும் அமைதியை நிலைநாட்டுவதற்கும் ஒரு கருவியாக அமையும் வகையில் அனைத்துத் துறைகளிலும் இணைக்கப்பட வேண்டும்.உலகமயமாதல் உருவாக்கமும் பன்முகப் பண்பாட்டுப் பணிகளும் உலகமயமாக்கல் ஏழைகளுக்கு சார்பாக அமைந்தால், இன்றைய உலகமயமாக்கப்பட்ட உலகில் பன்முகப் பண்பாட்டுக் கொள்கைகள் சரியான வழியில் ஊக்கமளிக்கப்பட்டிருக்கிறது என பொருள் கொள்ளலாம். இன்றைய உலகில் பன்முகப் பண்பாடு மிக வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது என உலகமயமாக்கல் பணியை உருவாக்கல் (Mச்டுடிணஞ் எடூணிஞச்டூடித்ச்tடிணிண ஙிணிணூடு) எனும் புத்தகத்தில் நூலாசிரியர் ஜோசப் ஸ்டிக்லிட்ஸ் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். எனினும் அனைத்து பண்பாட்டு மக்களும் உலகமயமாக்கல் கொள்கைகளை ஏற்றுக் கொண்டால் மட்டுமே உலகமயமாக்கல் சாத்தியமாகும் எனவும் கூறியுள்ளார். அப்போதுதான் வளரும் நாடுகள் தங்களின் தொழில் மற்றும் வணிக நடவடிக்கைகளில் நியாயமான மதிப்பையும், உலகமயமாக்கப்பட்ட உலகின் பொருளாதாரச் சிக்கலை தீர்க்கும் பொறுப்பைக் கொண்டுள்ள உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் போன்ற நிதி நிறுவனங்களில் நியாயமான முறையில் பிரதிநிதித்துவத்தையும் பெற்றால் மட்டுமே உலகமயமாக்கல் வெற்றி பெறுவதாக எடுத்துக் கொள்ள முடியும். இல்லையெனில் ஆதிக்க நாடுகள் வளரும் நாடுகளை அச்சுறுத்துவதாகவே முடியும்.இந்தியாவின் பண்டைய மதிநுட்பமே பன்முகப் பண்பாட்டிற்கான ஆதாரம்  2008 ஆம் ஆண்டு ப்ரூஷ் ரீச் எனும் ஓர் அமெரிக்க எழுத்தாளர் இந்தியாவின் ஒடிசா மாநிலத்திற்கு வந்திருந்த போது, கி.மு 3 ஆம் நூற்றாண்டில் கண்டறியப்பட்ட கலிங்கப் போர் நடைபெற்ற இடத்தைப் பார்க்கச் சென்றார். பேரரசர் அசோகர் இந்தியாவின் கந்தகார் முதல் கன்னியாகுமரி வரையிலும் அதே போல் கிழக்கே குசராத் வரையிலும் போர் செய்து வெற்றி பெற்று மாபெரும் பேரரசை நிறுவிய பிறகு, அகிம்சை, ஒழுக்கவியல், உயிரின் மதிப்பு ஆகியவற்றை அடிப்பையையாகக் கொண்டு போர் செய்வதைக் கைவிட்டு அகிம்சை வழியில் மிக நீண்ட ஆட்சி செய்தார்  என்பதைக் கேட்டு அதிர்ந்து போனார். கி.மு.3 ஆம் நூற்றாண்டில் பேரரசர் அசோகர் இத்தகைய பரந்த பேரரசை ஆட்சி செய்து கொண்டிருந்தாரெனில், உண்மையில் அவர் ஒட்டுமொத்த உலகையே ஆட்சி செய்ததற்கு ஒப்பாகும் என எழுத்தாளர் அனுசரித்தார். அவருடைய தெளிவான புரிதலை அடிப்படையாகக் கொண்டு தான் எழுதிய நூலுக்கு "உலகை நிலை நிறுத்துவதற்காக – பண்டைய இந்தியாவிலிருந்து உலக அறநெறிகளுடன் ஓர் அழைப்பு" எனும் தலைப்பை வைத்தார். அப்புத்தகத்தில் அசோகர் உயிர்களின் மதிப்பு, ஒழுக்கவியல், அகிம்சை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இத்தகைய மிகப் பெரிய பேரரசை ஆண்டாரெனில், இன்றைய 21 ஆம் நூற்றாண்டில் அதே கொள்கைகளைப் பின்பற்றி இந்த உலகம் முழுவதையும் ஆட்சி செய்ய நம்மாலும் முடியும் என அவர் வாதிட்டுள்ளார். வேறு விதமாகக் கூறுவதானால் அசோகரின் சாசனத்தில் குறிப்பிடப்படுள்ளதைப் போல இந்தியாவின் பண்டைய மதிநுட்பத்தை உலகம் முழுவதும்  நிலைநாட்ட இயலும். மேலும் அசோக சாசனத்தின் முக்கிய அம்சமே பலவிதமான பண்பாட்டு நம்பிக்கைகளையும் கலாச்சாரத்தையும் ஏற்றுக் கொள்வதைச் சுற்றியே அமைந்துள்ளது. அதாவது வளர்ச்சி, மேம்பாடு, அகண்ட விருப்பங்கள், பாகுபாடின்மை, அமைதி ஆகிய அனைத்திற்குமான கட்டமைப்பாக பன்முகப் பண்பாட்டுத்துவம் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக பொருள்படுகிறது. பன்முகப் பண்பாட்டுத்துவம் எனும் நவீன புரிதலுடன் இணைந்து இந்தியாவின் பண்டைய மதிநுட்பத்தால் கவசமிடுவதன் மூலம் உலகமயமாக்கப்பட்ட உலகில் அமைதியை ஊக்குவிக்க இயலும். பண்பாட்டு பன்முகத் தன்மை, பல்லுயிர் பாதுகாத்தல் மற்றும் சமுக, பொருளாதார, சுகாதார உரிமங்களை வழங்குதல் ஆகியவற்றிற்கான நேர்மறை ஆற்றலை (சாத்தியக் கூறுகளை) உலகமயமாக்கலால் உருவாக்க முடியும். இந்தக் கருத்துகளுக்கு எதிராக நடைபெறும் எவ்வித திணிப்புகளும் நாம் விரும்புகின்ற விடையைத் தரவல்லதாக அமையுமாது என்பதே அசோகர் மூலம் அறியப்படும் செய்தியாகும்.- எஸ்.என்.சாகுஇக்கட்டுரையின் ஆசிரியர் எஸ்.என்.சாகு மறைந்த முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் திரு கே.ஆர்.நாராயணனின் பத்திரிகைச் செயலாளராகவும் தலைமையமைச்சர் அலுவலக இயக்குநராகவும் பணியாற்றியவர். இக்கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள அனைத்தும் கட்டுரையாசிரியரின் தனிப்பட்ட கருத்துகளாகும்."

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி