என் எண்ணமெல்லாம் அந்த புத்தகத்தை திரும்ப வாங்குவது பற்றியே இருந்தது…. - தமிழ் இலெமுரியா

18 August 2015 10:11 am

அரசியல் கட்சி சார்புகளுக்கு அப்பாற்பட்டு இந்திய நாட்டுக் குடியரசுத் தலைவர் பொறுப்பேற்று கடமையாற்றியவர் என்ற பெரும் புகழைப் பெற்றவர் மறைந்த மாமேதை ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் ஆவார். அவருடைய திடீர் மறைவு இந்தியத் துணைக்கண்டம் மட்டுமன்றி உலகநாடுகள் பலவற்றுக்கும் கூட அதிர்ச்சியைத் தந்த ஒன்றாகும். பொதுவாகவே தமிழ் நாட்டிலிருந்து வட இந்திய அரசியலில் புகழ் பெற்று விளங்கிய தலைவர்களில் பெரும் பாலோர் தாம் தமிழர்களாக இருப்பதனால் என்னவோ தமிழ் நாட்டின் நியாயமான நெறியான வேண்டுதல்களுக்குக் கூட துணை நிறக அஞ்சியவர்களாகவே வரலாற்றில் பதிவு பெற்றிருக்கிறார்கள். மூதறிஞர் என்று புகழக் கூடிய இராசாசி, மேனாள் குடியரசுத் தலைவர் வெங்கட்ராமன், சி.சுப்பிரமணியம், ப.சிதம்பரம் என பட்டியல் நீண்டு கொண்டே போகும். அந்த வகையில் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்கள் இந்தியக் குடியரசில் பதவியேற்றப்போது பிற மாநிலங்களை விட தமிழகம் மகிழ்ந்தது. எனினும் அப்துல் கலாம் அவர்கள் எவ்வித உவப்பும் இன்றி தன்னை ஓர் தலை சிறந்த இந்தியக் குடிமகனாகவே நிலை நிறுத்திப்பணியாற்றியவராவார். தமிழ் நாடு சந்த்தித்தச் சிக்கல்கள் ஈழம், காவிரி, மீனவர், அணு உலை ஆகியவற்றில் தமிழ் நாட்டு மக்களின் விருப்புக்கு ஒப்ப எதுவும் செய்யவில்லையே என்ற ஏக்கம் எமக்கும் உண்டு. எனினும் இவையனைத்தையும் தாண்டி இந்திய இளைய சமுதாயத்தின் ஓர் எழுச்சி நாயகனாக விளங்கினார். சொன்னார்; செயல் பட்டார்; மக்களோடு மக்களாக; மாணவர்களோடு மாணவராக வலம் வந்தார் என்பது இந்திய அரசியல் வரலாற்றில் எவரும் ஏற்படுத்திடாத ஒரு தாக்கம் ஆகும். அவருடைய எளிமை மேலும் அவரை உயர்த்திக் காட்டியது. அவருடைய சொல்லும் செயலும் தொடர்புடையவை என்பதால் சாகித்ய அகாதெமியின் இலக்கியத் திருவிழாவின் போது, டாக்டர் அப்துல்கலாம் ஆற்றிய உரையை நாம் ஏற்கனவே வெளியிட்டோம். அவை மாணவர்களுக்கு படிக்கும் பழக்கத்தைப் பெரிதும் தூண்டிய ஒன்றாகும். எனவே அவர் மறைவையொட்டி மீண்டும் அதை இங்கே மீள்பிரசுரம் செய்து எம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கின்றோம்.     – ஆசிரியர் நண்பர்களே,  இந்தியப் பண்பாட்டினை இந்த நாடு மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக இளைஞர்களிடையே பரப்புவதற்கு சாகித்திய அகாதெமி ஏற்பாடு செய்துள்ள செயல் திட்டங்களை அறிவதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். இதில் என்னுடைய கண்ணோட்டம் என்னவெனில், ஒரு இளைஞனின் முயற்சி எதுவாக இருந்தாலும் பாடத்திட்டங்களில் உயரிய மனிதப் பண்புகளும் இலக்கியமும் கட்டாயமாக சேர்க்கப்பட வேண்டும். நம்முடைய வாழ்க்கை அனுபவத்துடன் இலக்கியம் குறித்த விளக்கம் தொடர்ந்து இருக்கக் கூடியதாகும். இலக்கியமானது நம்முடைய சிந்தனையைத் தொடர்ந்து முடிவின்றி வலுப்படுகின்றது. உங்களுடைய முயற்சிகளைப் பாராட்டுகின்ற அதே வேளையில் உங்களுடைய பரிசீலனைக்காக ஒரு சில கருத்துகளை முன் வைக்க விரும்புகின்றேன்.1. பொதுமக்களிடையே இலக்கியத்தைப் பரப்புவதற்கு வானொலி – தொலைக்காட்சி ஊடகங்களை இன்னும் சிறப்பாகப் பயன்படுத்த முடியுமா?2. குறிப்பாக தொலைதூரக் கல்வியைப் பயன்படுத்தி இலக்கியக் கல்விக்கு ஏற்பாடு செய்யலாம். இதனை நாம் தொடர்ந்து செய்ய முடியுமா?3. இளைஞர்கள் இலக்கியத்தில் ஆராய்ச்சி செய்வதற்கு அவர்களுக்கான சிறப்பு போட்டிகளையும், திட்டங்களையும் நாம் மேற்கொள்ள முடியுமா?4. தொழில் நுட்பம், மருத்துவம் போன்ற தொழில் சார்ந்த கல்வி நிறுவனங்கள் இலக்கியப் புத்தகங்களைக் கொண்டிருப்பதற்கு ஊக்கப்படுத்தப்பட வேண்டும். 5. சிறுவர்களுக்கு வீடுகளில் நூலகங்களை பெற்றோர்களும், மூத்தோர்களும் ஏற்பாடு செய்து தர வேண்டும் என்று நான் ஊக்கப்படுத்தி வந்திருக்கிறேன். நல்ல இலக்கிய நூல்களை சேகரிக்குமாறு அவர்களை நீங்களும் ஊக்கப்படுத்தலாம். நண்பர்களே, சிறந்த புத்தகங்களே அறிவு ஞானத்தை அளிக்கின்றன என்பது நன்கு அறிந்த ஒன்றாகும். ஆனால் இங்கே ஒரு நிகழ்வை விவரிப்பதற்கு என்னை அனுமதிக்க வேண்டும். அந்த நிகழ்வில் ஒரு புத்தகம் எனக்கு நெருக்கமான நண்பனாக ஆனதுடன் ஒரு நெருக்கடியான நிலைமையைச் சமாளிக்கவும் உதவியது. இந்நிகழ்வு இராமேஸ்வரத்தில் வீசிய புயல் சம்பந்தப்பட்டதாகும். நான் 1954 – 1957 ஆம் ஆண்டுகளில் சென்னை குரோம் பேட்டையில் மெட்ராஸ் தொழிற்நுட்பக் கல்வி நிறுவனத்தில் (Mஐகூ) படித்துக் கொண்டிருந்த போது நிகழ்ந்தது. அப்போது நான் என்னுடைய படிப்பின் இரண்டாவது ஆண்டில் 1955 டிசம்பரில் படித்துக் கொண்டிருந்தேன் என்று நினைக்கிறேன். அப்போது எனது வகுப்பு மாணவர்கள் அனைவரும் கோடை விடுமுறையில் தங்களது ஊர்களுக்குச் சென்று விட்டனர். நான் குறிப்பிட்ட பாடத்தில் சரியாகத் தெளிவடையாமல் இருந்தேன். ஆகவே, அடுத்து வரவிருந்த தேர்வுக்கு அந்த பாடத்தில் என்னைத் தயார் செய்வதற்கு விடுதியிலேயே தங்கி விடலாம் என்று முடிவு செய்திருந்தேன். அந்தக் கோடை விடுமுறையின் போது ஒருநாள் என்னுடைய மைத்துனர் அகமது ஜலாலிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அப்போது அவர் இராமேஸ்வரத்தைக் கடுமையான சுழல் புயல் தாக்கியதாகவும் என்னுடைய பெற்றோர்கள் என்னை உடனடியாக பார்க்க விரும்புகிறார்கள் என்றும் தெரிவித்தார். நான் உடனடியாக இராமேஸ்வரம் சென்று என்னுடைய பெற்றோரையும், மற்றவர்களையும் பார்க்க விரும்பினேன். அப்போது மாதக் கடைசி என்பதால், என்னிடம் பணம் இல்லை. எனக்குப் பணம் அனுப்புவதற்கு என்னுடைய குடும்பத்துக்கும் கால அவகாசம் இல்லை. என்னுடைய பயணத்திற்கு எப்படி ஏற்பாடு செய்வதென நான் யோசித்துக் கொண்டிருந்தேன். அந்தச் சமயத்தில் என்னிடம் ஒரே ஒரு சொத்து மட்டும்தான் இருந்தது. அது என்னவெனில், எனது இரண்டாம் ஆண்டு படிப்பின் போது ஏரோடைனமிக்ஸ் (அஞுணூணிஞீதூணச்ட்டிஞிண்) என்ற பாடத்தில் எனது சிறப்பான தேர்வைப் பாராட்டி மெட்ராஸ் தொழிற்நுட்பக் கல்வி நிறுவனத்தின் நிருவாக கவுன்சில் தலைவர் டாக்டர். லட்சுமணசாமி முதலியாரால், பரிசாக வழங்கப்பெற்ற மிக உயரிய புத்தகமாகும். அந்தப் புத்தகம் தி தியரி ஆஃப் எலாஸ்டிசிடி (கூடஞு கூடஞுணிணூதூ ணிஞூ உடூச்ண்tடிஞிடிtதூ) என்னும் புத்தகமாகும். அந்தப் புத்தகம் திமோ ஷெங்கோ, குட்லியர் ஆகியோரால் எழுதப்பட்டது. அந்தக் காலத்திலேயே அதனுடைய விலை ரூ. 400 ஆகும். என்னுடைய படிப்புத் திறமைக்காக பரிசளிக்கப்பட்ட அந்தப் புத்தகத்தை விற்பது குறித்து முடிவெடுப்பது எனக்குச் சிரமமாக இருந்தது. என்னுடைய ஊருக்குச் செல்ல குறைந்த அளவு ரூ.60 தேவைப்பட்டது. எனவே நான் குரோம் பேட்டையிலிருந்து சென்டிரல் இரயில் நிலையத்தை ஒட்டியிருந்த மூர்மார்கெட்டிற்கு மின்சார இரயிலில் சென்றேன். அந்த நாட்களில் மூர்மார்கெட்டில் பழைய, புதிய புத்தகங்கள் நியாயமான விலையில் கிடைக்கும். நான் இதற்கு முன்னதாக லைட் ஃப்ரம் மெனி லேம்ப்ஸ் (ஃடிஞ்டt ஞூணூணிட் Mச்ணதூ ஃச்ட்ணீண்) என்ற புத்தகத்தை வெறும் ரூ. 20க்கு வாங்கியிருந்தேன். அந்தப் புத்தகம் என்னுடைய வாழ்க்கைக்கு வழிகாட்டும் ஆன்மாவாக விளங்கியது. அந்தப் புத்தகத்தை நான் வாங்கிய பழைய புத்தகக் கடையானது பாரம்பரியக் குடுமியோடு இருந்த ஒரு பயபக்தியான பிராமணரால் நடத்தப்பட்டக் கடையாகும். நான் அவரை அணுகி என்னிடம் ஒரு புத்தகம் இருக்கிறது. நான் அதை விற்க வேண்டியுள்ளது. ஏனென்றால் சொந்த ஊருக்கு அவசரமாக செல்வதற்கு பணம் தேவைப்படுகிறது" என்று கூறினேன். புத்தகத்தைக் காட்டுமாறு கேட்டதுடன் எனக்கு எவ்வளவு பணம் தேவைப்படுகிறது என்று கேட்டார். மிகக் குறைவாகத்தான் கொடுப்பார் என்று கருதினேன். ஆனாலும் எனக்கு ரூ.60 தேவைப்படுகிறது என்று கூறினேன். அவர் அந்தப் புத்தகத்தை திறந்து பார்த்தார். முதல் பக்கத்தில் இந்தப் புத்தகம் அப்போதைய சென்னை பல்கலைக் கழக துணை வேந்தரான டாக்டர். இலட்சுமணசாமி முதலியாரால் முதல் பரிசு புத்தகமாகக் கொடுக்கப்பட்டது என்ற விவரத்தைப் பார்த்தார். அவர் உடனே, என்னிடம் தாம் அந்தப் புத்தகத்தை வாங்கப் போவதில்லை என்றார். எனவே பணம் பெற முடியாது என்று கவலைப்பட்டேன். ஆனால், அந்தப் புத்தகம் பேரா.இலட்சுமணசாமி முதலியாரால் பரிசளிக்கப்பட்ட புத்தகம் என்பதால் எனக்கு ரூ.60 தருவதாகவும், நான் பணத்தைத் திரும்பக் கொடுக்கும் வரை புத்தகத்தை பத்திரமாக வைத்திருப்பதாகவும் என்னிடம் தெரிவித்தார். ஒரு சிக்கலான சமயத்தில் எனக்கு உதவுவதற்கு மகத்தான ஆன்மா ஒன்று முயற்சிக்கிறது என்பதிலும், படிப்பில் எனக்கிருந்த ஆர்வத்தையும் அவர் புரிந்து கொண்டார் என்பதிலும் நான் மகிழ்ச்சியடைந்தேன். அவரிடமிருந்து பணம் வாங்கிக் கொண்டு இராமேஸ்வரம் சென்றேன். அங்கு இயற்கையின் கொடூரத்தைப் பார்த்தேன். ஆனால், என் எண்ணமெல்லாம் அந்த புத்தகத்தைத் திரும்ப வாங்குவது பற்றியே இருந்தது. இராமேஸ்வரத்திலிருந்து திரும்பியவுடன் நான் மூர்மார்கெட்டிற்கு சென்று பணத்தை திரும்பக் கொடுத்துவிட்டு அந்த புத்தகக் கடைக்காரரிடமிருந்து புத்தகத்தை திரும்பப் பெற்றுக் கொண்டேன். அது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. இது, கொஞ்ச காலத்திற்கு தனது மகனை இழந்திருந்த தாய் தன் மகனை திரும்பப் பெறும் போது ஏற்படும் அனுபவம் போன்றிருந்தது. எப்போதும் ஒரு நல்ல நூல் அறிவு ஞானத்தைக் கொடுக்கிறது. ஆனால், எப்போதாவது ஒரு நெருக்கடியான சமயத்தில் அது நமக்கு உதவக் கூட முடியும்.லைட் ஃப்ரம் மெனி லேம்ப்ஸ்  நல்லதொரு புத்தகத்துடன் தொடர்பு கொண்டிருப்பதும், அதனை வைத்திருப்பதும் வாழ்க்கையில் நம்மை செழுமைப்படுத்தும் அனுபவமாகும். புத்தகம் ஒரு நிரந்தரமான நண்பனாகிறது. சில நேரங்களில் அவை (புத்தகங்கள்) நமக்கு முன்பு பிறந்தவையாக இருக்கின்றன. அவை நம்முடைய வாழ்க்கைப் பயணத்திற்கு வழி காட்டுகின்றன. பல தலைமுறையினருக்குத் தொடர்ந்து வழிகாட்டுகின்றன. நான் ஏற்கனவே கூறியது போல சென்னை மூர்மார்கெட்டில் பழைய புத்தகக் கடையில் லைட் ஃப்ரம் மெனி லேம்ப்ஸ் என்ற புத்தகத்தை வாங்கியிருந்தேன். அந்தப் புத்தகத்தின் ஆசிரியர்கள் வாட்சன், லில்லியன் எய்ச்சர் ஆகியோர் ஆவர். அந்தப் புத்தகம் 50 ஆண்டுகளாக என்னுடைய நெருங்கிய நண்பனாக இருந்தது. எனக்கு சிக்கல் ஏற்படும் போதெல்லாம் அந்தப் புத்தகம் எனது கவலையைப் போக்குகிறது. அந்தப் புத்தகம் மகத்தான சிந்தனைகளது அனுபவங்களின் அடிப்படையில் எழுதப்பட்டதாகும். மகிழ்ச்சியில் மூழ்கி விடும் சமயங்களிலும் அந்தப் புத்தகம் மீண்டும் ஒரு நிதானமான சிந்தனையைக் கொண்டு வருகிறது. அதே புத்தகத்தின் புதிய பதிப்புப் பிரதி ஒன்றை நீதித்துறையில் பணியாற்றிய எனது நண்பர் ஒருவர் 2004 இல் எனக்குப் பரிசளித்தார். அப்போது அந்தப் புத்தகத்தின் முக்கியத்துவத்தை நான் மீண்டும் உணர்ந்தேன். அவர் எனக்குக் கொடுக்க முடிந்த மிகச் சிறந்த பரிசு இந்தப் புத்தகம் தான் எனக் கூறினார். இப்போதிலிருந்து இன்னும் ஒரு ஐம்பது ஆண்டுகளில் அதே புத்தகம் ஒரு புதிய அவதாரம் எடுக்கும். நான் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் போது நான் சந்திக்கின்ற இளைஞர்களிடமிருந்து இமெயில்களும், கடிதங்களும், கேள்விகளும் அடிக்கடி வருகின்றன. அவைகளின் மிதமிஞ்சியிருக்கும் அவர்களின் கேள்விகள்:1. உங்களுடைய உண்மையான கூட்டாளிகளாக இருக்கும் புத்தகங்கள் எவை?2. தற்போது நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் புத்தகம் எது? நான் அவர்களிடம் ஒரு புத்தகத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதிகளைப் படிப்பதை நான் பேணி வருகின்றேன் என்று கூறியிருக்கின்றேன். நான் படித்து அனுபவித்த நூல்கள் என்ன? டாக்டர் அலெக்சிஸ் கேரல் எழுதிய மேன் தி அன்நோன் (Mச்ண tடஞு க்ணடுணணிதீண)அவர் டாக்டராக இருந்து தத்துவவாதியாக ஆனவர். நோபல் பரிசு பெற்றவர், இந்தப் புத்தகம் எப்படி உடலும், சிந்தனையும் ஒருங்கிணைந்த முறையில் செயல்படக் கூடியவை என்பதை முன்னிலைப்படுத்துகிறது. இவை இரண்டில் ஒன்றிற்கு முக்கியத்துவம் கொடுத்துவிட்டு மற்றொன்றை அலட்சியப்படுத்த முடியாது. குறிப்பாக இளைஞர்களில் டாக்டர்களாகவும் ஆரோக்கிய நிபுணர்களாகவும் வருவதற்கு கனவு கண்டு கொண்டிருப்பவர்கள் இந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டும். அவர்கள் இந்த புத்தகத்தில் மனித உடம்பு என்பது வெறுமனே ஒரு யாந்திரிகமான அமைப்பு அல்ல என்பதையும் இந்த உடம்பு ஒரு சிக்கலான மற்றும் உணர்ச்சி மிகுந்த விவரங்களைக் கொண்டு ஒரு ஒழுங்குமுறைக்கு உட்பட்ட அறிவார்ந்த உயிரமைப்பாகும் என்பதை புரிந்து கொள்வார்கள். நான் பெரிதும் விரும்பும் இரண்டாவது புத்தகம் திருவள்ளுவரின் திருக்குறள் ஆகும். இது தேசியம், மொழி, மதம் பிரதேசம் ஆகிய எல்லைகளுக்கு அப்பாற்பட்ட வாழ்க்கைக்குரிய மிகச் சிறந்த நடத்தை கோட்பாட்டை அளிக்கிறது. நான் பல நூலாசிரியர்களைச் சந்திக்கின்றேன். புத்தகம் எழுதுவதில் அவர்களுக்குள் அறிவையும், அனுபவங்களையும் நான் பங்கிட்டுக் கொள்கிறேன். என்னுடைய கவனத்தை ஈர்த்த புத்தகங்கள் உள்ளன. அவை ஹோவார்டு கேட்னர் எழுதிய ஃபைவ் மைன்ட்ஸ் ஆஃப் ஃப்யூச்சர் (ஊடிதிஞு Mடிணஞீண் ணிஞூ ஊதtதணூஞு), ஸ்டீபன் ஆர்.கொவெ மற்றும் டேவிட் கே.ஹேட்ச் எழுதிய எவரிடே கிரேட்னெஸ் (உதிஞுணூதூஞீச்தூ எணூஞுச்tணஞுண்ண்), ஜி.வெங்கட்ராமன் எழுதிய மேக்ரோகாஸ்ம் அண்ட் மைக்ரோகாஸ்ம் (Mச்ஞிணூணிஞிணிண்ட் ச்ணஞீ Mடிஞிணூணிஞிணிண்ட்), ஜார்ஜ் ஒல் ஷெவ்ஸ்கி எழுதிய அண்டர் ஸ்டான்டிங் தி ஜெனோம் (க்ணஞீஞுணூண்tச்ணஞீடிணஞ் tடஞு எஞுணணிட்ஞு), மிச்சியோ காகுவின் பேரல்லெல் வேல்டு (கச்ணூச்டூடூஞுடூ ஙிணிணூடூஞீ) ஆகியனவாகும். இந்நூல்கள் உங்களை உண்மையான வாழ்க்கை உலகத்துக்கு அழைத்துச் செல்வதோடு அனுபவங்கள், கற்பனைகள் ஆகியவை அடங்கிய உலகத்திற்கு இட்டுச் செல்கின்றன. மனித வாழ்க்கையில் நூலாசிரியர்கள்; ஒரு மிக முக்கியமான பங்கு ஆற்றுகிறார்கள். ஒரு நூலாசிரியரின் ஒரு நல்ல புத்தகம் பலதலைமுறையினருக்கு மகத்தான அறிவு, ஞானம் கொண்டதாகவும் சொத்தாகவும் விளங்குகிறது. சில சமயங்களில் ஒரு புத்தகம் அதன் ஆசிரியர் உயிருடன் இருக்கும் காலத்தில் வாசகரை ஈர்க்காமல் போகலாம். ஆனால் அந்தப் புத்தகம் கூறும் அறிவுரை காலப்போக்கில் மிகத் தெளிவானதாகிறது; அதனுடைய முக்கியத்துவம் பின் தலைமுறையினரால் உணரப்படுகிறது. அதன் பிறகு அப்புத்தகம் ஒளிரத் தொடங்குகிறது. உண்மையிலேயே சில தொன்மை நூல்கள் தொடர்ந்து ஒளிரக் கூடியவையாக உள்ளன. நண்பர்களே, நான் ஒரு நோக்கில் உறுதியாக உள்ளேன். அந்த கருத்தோட்டத்திற்கு உடன்பாடான உங்களில் பலர் இன்றும், நாளையும் சமூக மாற்றத்திற்கான நூல்களை உருவாக்குபவர்களாக இருக்கின்றீர்கள். புத்தகங்கள் துணையாக இருக்கும் போது நான் எப்போதுமே மகத்தான அறிவையும், மகிழ்ச்சியையும் பார்த்திருக்கிறேன். நான் எனது வீட்டில் நூலகம் ஒன்றை ஏற்படுத்தியிருக்கிறேன். அதில் பல்வேறு தலைப்புகளில் பல்வேறு மொழிகளில் புத்தகங்கள் உள்ளன. காலப்போக்கில், அதில் 5 ஆயிரத்திற்கும் அதிகமான புத்தகங்களாக அதிகரித்தன. அவற்றில் ஆன்மிகம், அறிவியல், ஆளுமை, வரலாறு, பூகற்பவியல், இலக்கியம், நிருவாகம் ஆகியவை சம்பந்தமான நூல்கள் உள்ளன. நான் எனது நூலகத்தை மிகுந்த மதிப்பு மிக்க சொத்தாகக் கருதுகிறேன். அதில் செலவழித்த நேரங்களெல்லாம், மிகுந்த பயன் மிக்கவையாகவும், நேசிக்கத் தக்கனவையாகவும் உள்ளன. நண்பர்களே, இங்கே ஓர் அனுபவத்தைக் கூற விரும்புகிறேன். நான் தமிழ்நாட்டில் ஈரோட்டில் நடைபெற்ற புத்தகக் காட்சியின் முடிவாக 2009, ஆகஸ்ட் 11 இல் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். அந்தக் கண்காட்சியில் கூடியிருந்தவர்களைப் பார்த்து அசந்து போனேன். 2 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் கூடியிருந்தனர். அவர்களில் இளைஞர்கள், அனுபவப்பட்டவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலதரப்பட்டவர்கள் வந்திருந்தனர். பல்வேறு தலைமுறைகளைச் சேர்ந்தவர்களை நான் பார்த்த போது அவர்களிடம் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு நூலகம் இருக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தேன். அத்தோடு ஒரு உறுதி மொழியை அவர்கள் எடுத்துக் கொள்ளும் வகையில் அதனை வாசித்தேன். அந்தப் பெருந்திரளான கூட்டம் முழுமையும் பொங்கும் உற்சாகத்துடன் கீழ்க்கண்ட அந்த உறுதி மொழியை எடுத்துக் கொண்டது.1. இன்றிலிருந்து நான் 20 புத்தகங்களுடன் ஒரு வீட்டு நூலகத்தை தொடங்குவேன். அவற்றில் 10 புத்தகங்கள் குழந்தைகளுக்கான புத்தகங்களாக இருக்கும்.2. என்னுடைய மகளும், மகனும் இந்த வீட்டு நூலகத்தை 200 புத்தகங்களாக விரிவுபடுத்துவார்கள்.                    3. என்னுடைய பேரக் குழந்தைகள் வீட்டு நூலகத்தை 2000 புத்தகங்களுடன் விரிவுபடுத்துவார்கள்.4. நான் எங்களுடைய நூலகத்தை எங்களுடைய குடும்பத்தின் வாழ்க்கை முழுமைக்குமான செல்வமாகவும், விலைமதிப்பற்ற சொத்தாகவும் கருதுகிறேன்.5. நாங்கள் எங்களுடைய குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து படிப்பதற்கு வீட்டு நூலகத்தில் குறைந்தது 1 மணி நேரம் செலவழிப்போம். இந்த உறுதி மொழிக்குப் பிறகு, வீட்டு நூலகம் பற்றி அவர்கள் ஒவ்வொருவரிடமும் ஏற்பட்ட மகிழ்ச்சியை என்னால் காண முடிந்தது. இதன் தொடர்ச்சியாக, வியப்பான நிகழ்வு ஒன்று நிகழ்ந்தது. அவர்களில் ஆயிரமாயிரமானோர் புத்தக விற்பனை நிலையங்களுக்கு விரைந்தனர்; ஒரு மணி நேரத்திற்குள் பெரும்பாலான புத்தகங்கள் விற்றுத் தீர்ந்து விட்டன. அன்பான இளம் நண்பர்களே, விருதுகள் பெறும் சாகித்ய அகாதெமியின் பல புத்தகங்கள், வீட்டு நூலகத்தின் மிக உயரிய சொத்துக்களாகும். அவை இளம் இந்தியச் சிந்தனையாளர்களை மகத்தான வித்வான்களாகவும், மகத்தான தொழில் நுட்பர்களாகவும், மகத்தான அறிவியலாளர்களாகவும், மகத்தான ஆசிரியர்களாகவும், மகத்தான தலைவர்களாகவும் மாற்றும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். நண்பர்களே, எனது உரையை முடிக்கும் தருவாயில் குழந்தைகளுடைய இலக்கியம் பற்றி எடுத்துரைக்க விரும்புகிறேன். கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஒரு கோடியே 10 இலட்சத்திற்கும் அதிகமான குழந்தைகளையும், இளைஞர்களையும் சந்தித்திருக்கிறேன். அவர்கள் கிராமப் புறங்களையும், நகர்ப்புறங்களையும் வளர்ச்சியடைந்த மற்றும் வளரும் உலகின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்தவர்கள். இளைஞர்களின் சிந்தனை தூண்டிவிடப்பட்டால் இந்தப் பூவுலகின் மீதும், இந்தப் பூவுலகின் கீழேயும், இந்தப் பூவுலகிற்கு உயரேயும் சக்தி வாய்ந்த மூலாதாரமாகி விடும். இளைஞர்களின் ஆற்றலும் உற்சாகமும் அனுபவம் வாய்ந்தவர்களுக்கு வாழ்க்கை பற்றிய தொலைநோக்கையும் அவர்கள் பெருமைப் படக்கூடிய ஒரு மரபுப் பண்பை விட்டுச் செல்வதற்கான பொறுப்பையும் அளிக்கின்றன. நான், பல்வேறு வாழ்க்கைத் துறைகளில் தங்களை நிலை நிறுத்திக் கொண்ட பல மகத்தான சிந்தனையாளர்களின் குழந்தைப் பருவத்தைப் படித்திருக்கிறேன். அவ்வாறு படித்ததில் குழந்தைகளின் கற்கும் வகைமுறையால் நான் ஈர்க்கப்பட்டிருக்கிறேன். குழந்தைகளிடமிருந்து வரும் ஈர்ப்புத் தன்மை கொண்ட கேள்விகள் சிந்தனையைத் தூண்டக் கூடியவை; அவை ஒரு பொதுவான வகைமுறையைக் கொண்டுள்ளன.1. நகர்புறக் குழந்தைகளுக்கு அறிவுக்கான மூல ஆதாரங்கள் நிச்சயமாகக் கிடைக்கின்றன. அவை, மின்னணுப் பொருட்கள் அல்லது குழந்தைகளுக்கான புத்தகங்கள் என்கிற வடிவில் உள்ளன. அவை அறிவுத் தாகத்துடன் உள்ள ஏராளமான கிராமப்புறக் குழந்தைகளுக்கு கிடைக்கச் செய்ய வேண்டும்.2. குழந்தைகள் வியக்கத்தக்க கவனிப்புத் தன்மையையும், ஆக்கச் சிந்தனையையும் கொண்டவர்கள். ஆகவே, நம்முடைய கல்வி – முறைசார் கல்வியும் முறைசாராக் கல்வியும் – தரமான புத்தகங்கள் மூலம் குழந்தைகளிடையே ஆக்கத்திறனை வளர்க்க வேண்டியுள்ளது.3. குழந்தைகள் தங்களுடைய சுற்றுப்புறச் சூழல்கள், குடும்பம், சூழ்வட்டாரம் ஆகியவற்றின் மூலம் கற்கிறார்கள். உதாரணமாக, அவர்களுடைய பெற்றோர்களும், ஆசிரியர்களும் புத்தகங்களைப் படிக்கும் போது அதனை அவர்கள் பார்க்கிறார்கள். அது அவர்களுக்கும் புத்தகவாசிப்பில் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. பெற்றோர்களும், ஆசிரியர்களும் புத்தகங்கள் குறித்து குழந்தைகளுடன் விவாதித்தால் அது அவர்களுடைய புத்தக ஆர்வத்தை மேலும் வேகமாக்குகிறது.4. கற்றல், நல்ல மாண்புகள், விளையாட்டுகள் ஆகியவற்றிற்கான சூழலிலும் கவனிப்பு மிக்க குடும்பத்திலும் வளர வேண்டியவர்களாகவும், குடிமைப் பொறுப்புகளையும் சிந்தனை ரீதியான மற்றும் உடல் ரீதியான வலுத்தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டியவர்களாகவும் குழந்தைகள் இருக்கின்றனர்.5. கேள்விகளைக் கேட்பதற்கு குழந்தைகளை ஊக்கப்படுத்துவது அவசியம். அவர்களுடைய கேள்விகளுக்குப் பொறுமையுடனும் அறிவுப் பூர்வமாகவும் பதில் அளிக்க வேண்டும். அவ்வாறு செய்யும் பட்சத்தில்தான், குழந்தைகளின் சிந்தனைகள் திறக்கப்படுகின்றன. அவர்கள் சிந்தனை அடைபடுவதில்லை. வேறுபட்ட நாடுகளில் குழந்தைகள் சந்தித்துக் கொள்ளும் போது, ஒரு அம்சத்தை நான் கவனிக்கிறேன்; அதன் படி அவர்களை ஒருவரையொருவர் பழக்கமுள்ளவர்களாக்குவது புத்தகங்கள் தான். அவைதான் ஒருவருக்கொருவரை உறவாக்க முடியும். இந்தப் புத்தகங்கள், உலக அளவிலான பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு உரிய ஆர்வமுள்ள ஒரு பரந்த நோக்கு கொண்ட நூலாசிரியர்களால் எழுதப்பட்டவையாகவே இருக்க முடியும். இந்தியாவைப் பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதற்கான தொலைநோக்கை செயல்படுத்துவதற்கு அறிவு உலகம் என்பது மிகவும் முக்கியமானது. இந்த அறிவு உலகம் வழியாகப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய இளைஞர்களை இட்டுச் செல்லக்கூடிய புத்தகங்கள் இருக்கவே செய்கின்றன. நல்ல இலக்கியங்களை உருவாக்கி இந்திய மக்களிடையே படிக்கும் பழக்கத்தை வளர்க்கும் தனது பணியில் சாகித்ய அகாதெமி அனைத்து வெற்றிகளையும் பெற வாழ்த்துகிறேன். – ஏ.பி.ஜே.அப்துல் கலாம்  உரை"

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி