20 July 2013 1:58 pm
ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை ஒவ்வொரு ஆண்டும் நல்ல மதிப்பெண்கள் பெற்று 100 விழுக்காடு தேர்ச்சி பெறும் அரசு கல்விக் கூடங்களையும், ஆசிரியப் பெருமக்களையும் தேர்வு செய்து பாராட்டி வருகின்றது. கடந்த கல்வியாண்டில் 100 விழுக்காடு தேர்ச்சி விகிதத்தைத் தந்த 1300 ஆசிரியப் பெருமக்கள் ஈரோட்டில் நடந்த விழாவில் போற்றிப் பாராட்டப் பெற்று, பாராட்டு மடல்கள் அளித்து ஊக்குவிக்கப்பட்டனர். ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலர் கணேசு தலைமையில் நடந்த இவ்விழாவில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி சிறிதேவி, பட்டிமன்ற உரை வீச்சாளர் திருமதி பாரதி பாசுகர் ஆகியோர் ஆசிரியப் பணியினைப் பாராட்டி உரையாற்றினர். மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் அறிமுக உரையாற்றி நிகழ்வைத் தொடங்கி வைத்தார்.