21 April 2016 4:56 pm
இலங்கையின் புதிய பொலிஸ்மா அதிபராக பூஜித் ஜயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து பூஜித் ஜயசுந்தர நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.இலங்கையின் காவல்துறையின் தலைமைப் பொறுப்புக்கு முன்னாள் மூத்த துணைப் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பெயர் அரசியலமைப்பு பேரவையினால் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.அந்த பரிந்துரையை ஏற்றுக்கொண்டு இலங்கையின் 34-வது பொலிஸ்மா அதிபராக பூஜித் ஜயசுந்தரவை ஜனாதிபதி நியமித்துள்ளார்.முன்னாள் பொலிஸ்மா அதிபர் என்.கே. இலங்கக்கோன் ஓய்வுபெற்றிருந்த நிலையில் அந்த வெற்றிடத்துக்கு மூன்று துணை பொலிஸ்மா அதிபர்களின் பெயர்கள் அரசியலமைப்பு பேரவைக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தன.