இலங்கையை பொதுநலவாய நாடுகள் அமைப்பிலிருந்து நீக்க வேண்டும் – வை.கோ - தமிழ் இலெமுரியா

10 September 2013 7:05 am

இலங்கையை பொதுநலவாய நாடுகள் அமைப்பிலிருந்து நீக்க வேண்டுமென மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வை.கோ கோரியுள்ளார். இலங்கை அரசாங்கம் தமிழர்களுக்கு எதிராக செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி தமிழக மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். இலங்கை பொதுநலவாய நாடுகள் அமைப்பிலிருந்து நீக்கப்பட வேண்டும், இலங்கையில் நடைபெறவுள்ள அமர்வுகள் ரத்து செய்யப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியா பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வினை புறக்கணிக்க வேண்டுமென கோரவில்லை எனவும், அவ்வாறு செய்வதன் மூலம் காங்கிரஸ் அரசியல் லாபமீட்ட முயற்சிக்கும் எனவும் வை.கோ தெரிவித்துள்ளார்.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி