15 July 2013 1:02 pm
பலமொழிகள் இன்று அழிவின் விளிம்பில் நிற்பதற்கு ‘உலகமயமாக்கல்’ என்கிற கருத்துரு ஒரு காரணமாகப் பேசப்படுகிறது. இதற்குத் தமிழும் தப்ப வில்லை. உலகமயமாக்கலுக்கு இயைந்து நடந்தால்தான் நாமும் வளர முடியும், வல்லரசாக முடியும் என்றொரு மாயையைப் பரப்பி வருகிறார்கள். நாட்டின் வளர்ச்சிக்காக நம் மொழியைக் காவு கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. தாய்மொழியிலேயே கற்று இன்று எல்லா நிலைகளிலும் தலைநிமிர்ந்து நிற்கும் நாடுகளாக ஜப்பானும் சீனாவும் இல்லையா? எனவே எந்தச் சூழலுக்காகவும் மொழியைப் பலியிடாதீர்கள். அது நம் சந்ததியை நர பலி இடுவதற்குச் சமம்.