வரலாற்று சுவைகள் - தமிழ் இலெமுரியா

15 July 2014 3:52 am

ஒருமுறை தொழிலதிபர் ஜே.ஆர்.டி.டாட்டா கோவா சென்றிருந்தார். அவர் மகிழுந்தில் சென்று கொண்டிருந்த போது வழியில் ஒரு மரத்தடியில் ஒருவன் இடுப்பில் ஒரு துண்டு மட்டும் அணிந்து கொண்டு நிழலையும் காற்றையும் அனுபவித்துக் கொண்டிருந்தான். அவனைக் கண்ட டாட்டா மகிழுந்தை நிறுத்தச் சொல்லி அவனிடம் சென்று ஏம்பா ஏன் இப்படி சோம்பேறியாக இருக்கிறாய். என்னுடன் பாம்பே வந்துவிடு. உனக்கு வேலை தருகிறேன்" என்றார்.அதற்கு அவன் "வேலை எதற்கு?" என்று கேட்டான்.டாட்டா சொன்னார் உனக்கு சம்பளம் நிறைய கிடைக்கும்அவன் கேட்டான் "சம்பளம் எதற்கு?"டாட்டா: "நீ நிம்மதியாக சாப்பிடலாம். சகல வசதிகளோடும் வாழலாம். வாழ்க்கையில் மகிழ்ச்சி கிட்டும்" என்றான்.அவன்: மகிழ்ச்சிக்காக நான் பாம்பே வந்து கடினப்பட்டு உழைக்க வேண்டும் என்றால் மன்னிக்கவும், அந்த மகிழ்ச்சி எனக்கு இந்த மர நிழலிலேயே அதிகமாகக் கிடைக்கிறது. தயவு செய்து நீங்கள் போகலாம்" என்றான். ………… காஷ்மீரில் படை எடுத்த பாகிஸ்தானியர்களை ஓட ஓட விரட்டி அடித்த இந்திய தளபதி ஜெனரல் திம்மையா ஒருமுறை இந்திய இராணுவ அதிகாரிகளைத் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். இராணுவ அதிகாரிகளாகச் சேர வந்திருந்த இளைஞர்களிடம் திம்மையா கேட்டார். "நீங்கள் ஏன் இராணுவத்தில் சேர வந்திருக்கிறீர்கள்?"வந்த பதில்: "நான் என் தாய் நாட்டுக்காக உயிர் துறக்கத் தயாராக இருக்கிறேன்" இதே மாதிரியான பதிலை பல இளைஞர்கள் சொன்னார்கள்.ஆனால் இப்படிப்பட்ட உயிர் தியாகம் செய்யத் தயாராக இருந்த அந்த திறமை வாய்ந்த இளைஞர்களில் ஒருவரைக் கூட ஜெனரல் திம்மையா இராணுவத்திற்குத் தேர்ந்தெடுக்கவில்லை. ஏன்? அவர் சொன்னார்: "இராணுவத்தில் வந்து தாய்நாட்டிற்காகச் சாக விரும்புகிற இளைஞர்கள் நமக்குத் தேவை இல்லை. நமது பாரத இராணுவத்தில் எதிரிகளைக் கொன்று குவிக்கின்ற வீரர்கள் மட்டுமே வேண்டும். எதிரிகளைக் கொன்றுவிட்டு அதற்கு மேலும் உயிர் வாழ விரும்புகின்ற வீரர்கள்தான் வேண்டும். எல்லா இளைஞர்களுமே இந்தியாவுக்காக உயிர் விட்டு விட்டால் பின் யார்தான் நம் நாட்டில் எஞ்சியிருப்பார்கள்? ………… "இன்றைய இலக்கியப் பட்டிமன்றங்கள் சுவைக்கு உதவாதவை" என்னும் ஒரு கருத்து நிலவி வருகிறது. அதுபற்றி பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் அளித்த விளக்கம்.இலக்கியப் பட்டிமன்றங்கள் ஒரு பயனுமற்றவை என்று கருதுவது சரியல்ல. பட்டிமன்றங்கள் பல வகை. பல பொருள் பற்றியும் விவாதிக்கப்பட்டும் கல்லூரிப் பட்டி மன்றங்கள்; ஓர் இயக்கம் சார்பான கொள்கை – கருத்து விளக்கத்திற்காக நடைபெறும் பட்டிமன்றங்கள் இலக்கிய நலனிலும், நாடக மாந்தர் படைப்பிலும், கபிஞர் தம் காவியத் திறனளிலும் ஆர்வம் வளர்வதற்கு என நிகழும் இலக்கியப் பட்டிமன்றங்கள் என அவற்றைப் பகுத்துக் காணலாம்.சில புலவர் விழாக்களில் இடம் பெறும் இலக்கியப் பட்டிமன்றங்கள் தமிழ் ஆர்வலர்களுக்கு இன்றும் இலக்கிய விருந்தாகின்றது. மேலும் மரபுக் கவிதை, புதுக் கவிதைக்கு இடம் தந்துள்ளன. மரபு இலக்கியத்தின் இடத்தை இன்று தற்கால நவீன இலக்கியங்கள் நிரப்பி வருகின்றன. இந்த நூற்றாண்டில் தோன்றிய பாரதி, பாவேந்தர் போன்றோரின் கவிதைகளும், அண்ணா, கல்கி, மு.வ, அகிலன், கலைஞர் போன்றோரின் புதினம், சிறுகதைகள், நாடகம், மடல் பற்றியும் பட்டிமன்றங்களில் விவாதிக்கப்படுகின்றன. எனவே இலக்கியப் பூந்தோட்டத்தில் உலவ விரும்பும் ஆர்வலர்களுக்கு அதுவே உரிய இடமாகத் திகழ்கிறது. ஒருவகையில் பழந்தமிழ் இலக்கியம் ஒரு சாராரிடையிலானும் வலம் வர அப்படிப்பட்ட பட்டிமன்றங்கள் வேண்டப்படுபவையே.- சீர்வரிசை சண்முகராசன்"

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி