வீணாகும் உணவு - தமிழ் இலெமுரியா

11 September 2013 12:29 am

இந்தியாவில் உற்பத்தியாகும் உணவு தானியங்களைச் சேமிக்க இதுவரை போதிய உணவுக் கிடங்குகள் இல்லாமையால் பல கோடிக்கணக்கான கோதுமை, அரிசி, பருப்பு, பழவகைகள் போன்றவை அழுகி விரயமாகின்றன. நாடாளுமன்றத்தில் இது குறித்து எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்குப் பதிலளிக்கையில் இந்திய உணவுத் துறை அமைச்சர் சற்றொப்ப 44,000 கோடி மதிப்புள்ள பொருள்கள் விரயமாவதாகக் கூறினார். இதில் பழங்கள், காய்கறிகள் சற்றொப்ப 13,300 கோடி எனவும் விளக்கம் அளித்தார்.  இதற்கிடையில் அய்.நா. அறிக்கையின் படி இந்தியாவில் உற்பத்தியாகும் உணவுப் பொருள்களில் 40% பயனற்றுப் போவதாகவும், வளர்ந்து வரும் நாடுகளில் 85 கோடி மக்கள் சத்துணவின்றி, பசியால் வாடுவதாகவும் தெரிவித்துள்ளது.   

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி