கப்பலின் ப்லிம்சோல் கோடு - தமிழ் இலெமுரியா

20 July 2013 1:40 pm

Plimsol Line

கப்பலை மிக அருகில் சென்று பார்த்தால், கப்பலின் அடிப்பகுதியைச் சுற்றி நீளமான கோடு ஒன்று வரையப்பட்டிருக்கும். இக்கோடுகளே “ப்லிம்சோல் கோடு” (Plimsol Line) என அழைக்கப்படுகிறது. இதை லோட் லைன் (Load Line) அடையாளம் எனவும் கூறுவர். இக்கோடு சாமுவேல் ப்லிம்சோல் என்பவரால் அறிமுகப் படுத்தப்பட்டதாகும். ப்லிம்சோல் கடந்த நூற்றாண்டில் பிரிட்டிசு நாடாளுமன்ற உறுப்பினராயிருந்தவர். கடல் பயணத்தின் மீது அவருக்கு மிகுந்த ஈடுபாடு இருந்தது. அதிக அளவில் எடை எற்றிச் செல்லும் கப்பல்கள் கடலில் மூழ்கியதாகச் செய்தி கிடைக்கும் போதெல்லாம் அவர் மிகுந்த வேதனைக்குள்ளானார். இதனைத் தவிர்க்க என்ன வழி என ஆராய்ந்த அவர், 1876 ஆம் ஆண்டு இந்த ப்லிம்சோல் கோட்டை அறிமுகப்படுத்தினார். இந்தக் கோடு நீரின் மேல் மட்டத்தைத் தொடும் வரையில் தான் கப்பலில் எடை ஏற்றலாம். கோடு நீரில் மூழ்குவது வரை ஏற்றினால் ஆபத்து!

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி