கசாரா – நாசிக் இடையே புதிய பஸ் இயக்கம் - தமிழ் இலெமுரியா

16 July 2013 2:42 pm

நீண்டநாள் கோரிக்கையான கசாரா& நாசிக் இடையே புதிய பஸ் போக்குவரத்தை எம்எஸ்ஆர்டிசி நேற்று மதியம்  அறிமுகப்படுத்தியது. இதனால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மும்பையிலிருந்து கசாராவிற்கு செல்வதற்கு போதிய அளவில் புறநகர் ரயில்கள் இல்லாததால் பயணிகள் பெரும்  சிரமப்பட்டு வந்தனர். பயணமும் பாதுகாப்பில்லாமல் இருந்தது. டாக்சியில் ஏறினால் ஒருவருக்கு ரூ 100 வீதம் கட்டணம் கேட்கிறார்கள். குறிப்பாக வேலைக்கு செல் பவர்கள் சரியான நேரத்தில் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். நாசிக் கில் இருந்து மும்பைக்கு வரும் ரயில்களும் கசாராவில் நிற்பதில்லை.

இந்த நிலைமையால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். அதனால் பயணிகள் கசாரா விலிருந்து நாசிக்கிற்கு பஸ்கள் இயக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் தற்போது பயணிகளின் சிரமத்தை குறைக்கும் வகையில் மகாராஷ்டிரா மாநில போக்குவரத்து கழகம், கசாரா& நாசிக் இடையே புதிய பஸ் போக்குவரத்தை நேற்று அறிமுகப்படுத்தியது. இதனால் பயணிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து எம்எஸ்ஆர்டிசியை சேர்ந்த அதிகாரி தேஷ்முக் கூறுகையில், இந்த புதிய பஸ் அறிமுகத்தால் கசாரா& நாசிக் இடையே உள்ள 60 கி.மீ தூரத்தை நியாயமான கட்டணத்தில் பயணிகள் பயணம் செய்யலாம். மாலை நேரப் பேருந்துகளின் நேரமும் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது எப்போதும் மாலையில் நாசிக்கிலிருந்து செல்லும் கடைசி பஸ் 6.30 மணிக்கு புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு கசரா வந்து சேரும். சில பஸ்கள் சாபூர் சென்று விட்டு பிறகு நாசிக் வந்து சேரும். இதனால் பயணிகளின் கால விரயம் அதிகமானது.

இந்த பஸ் சேவை அந்த குறையை போக்கும். தற்போது கடைசி பஸ் பயணிகளின் வசதிக்காக இரவு 9.30 மணிக்கு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எந்த வித ஸ்டாப்பிலும் நிற்காமல் செல்வதால் கசாரா – நாசிக் இடையே சென்று வரும். பயணிகளின் நேரம் வெகுவாக குறையும் என்று நம்பிக்கையுடன் கூறினார்.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி