எல்லாப் புகழும் இறைவனுக்கே! - தமிழ் இலெமுரியா

14 October 2013 9:55 am

இயல்பானதுதான் பகுத்தறிவுஎன்றுவாழ்வதுதான் இயல்பானதாய் இல்லை.நம்பிக்கை வலைகளில் சிக்கியசிந்தனைக் குருவியைஒருபோதும் மீட்டுவிடாதேவானம் கடவுளுக்குரியதுவலைதான் குருவிக்குரியதுநெற்றியில் நீறுமார்பில் சிலுவைதலையில் தொப்பிசின்னங்களோடு திரிந்தால்இல்லை தொல்லைமனிதனாக மட்டும் வெளியில் வராதேபெண்ணென்றால் வேண்டும்கருப்பு பர்தா.மனுசியின் இயல்பில் வாழ முற்படாதேகூட்டு வழிபாட்டில்கும்பிட்டபடி இருக்க வேண்டும்ஏந்தியபடி இருக்க வேண்டும்கைகள்.பின்புறம் ஒருபோதும் மடித்துக் கட்டாதேசுரண்டலாம்திருடலாம்கடத்தலில் ஈடுபட்டுக் காசு பார்க்கலாம்எல்லாவற்றையும் மறைக்கஒருகல்விக் கூடம் நடத்தலாம்எது செய்தாலும் வேண்டும் இறைநம்பிக்கைசுடரும் அறிவு உனக்கிருந்தாலும்தொழுவதில்லை என்றுஒருபோதும் சொல்லாதேகடவுளை மறுப்பதுதான்ஒழுக்கக்கேடுஇயல்பானதுதான் பகுத்தறிவுஎன்றுவாழ்வதுதான் இயல்பானதாய் இல்லை.சமயச் சார்பிலா நாடெனச் சொல்லலாம்சமயச் சார்பிலா கல்வி உண்டா சொல்?பிரார்த்தனையோடு தொடங்காதஒருபள்ளியை அடையாளம் காட்டுநேர்முகத்தேர்வில் பகுத்தறிவுவாதி என்றால்வேலை இல்லைகூட்டுப் பிரார்த்தனையில் கும்பிட மறுத்தால்எத்தனை ஆண்டிருந்தாலும்பதவி உயர்வில்லைபகுத்தறிவைத் தொடர்ந்துபரப்பி வந்தால்உயிருக்கு எந்த உத்தரவாதமும் இல்லை.கடவுளை வணங்குமதத்தை நம்புசாதியை பேணுகாதலிக்காமல் திருமணம் பண்ணு.சமுதாயத் தலைவர்களுக்குநல்ல பிள்ளையாய் இருஎல்லாப் புகழும் இறைவனுக்கே!(மகாராட்டிரப் பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர் நினைவாக)- கவிஞர் இன்குலாப், 

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி