11 January 2015 5:32 pm
நல் உயிர் பேணும் உழவன் – கவிஞர் பூ.அ.இரவீந்திரன், கோவை.நிலம் கருதாது பருவம் நினையாதுஅடிவயிற்றில் முப்போதும் முளைவிடும்பசி என்று படர்தரும் உறுநோய்நேற்று வந்தது இன்று வந்தது நாளை வரும்உயிர்மூச்சு இருக்கும்வரை நிலைகொள்ளும்மண்ணை உழுது தானியம் விதைத்து மாநிலத்தில் பிணிமருந்து விளைவித்தவன் உழவன்உயிர் காக்கும் இறைஎனில் மிகையில்லைஅறிவின் திறத்தால் பொன்னேர் பூட்டிநதி நிறுத்திக் கால்வாய் பிரித்து மடைதிருப்பி நீர் பாய்ச்சி எருவிட்டுக் களைகட்டிமானாவாரியாய் இருந்ததைப் பொன்விளையும் பூமியாக்கிய புகழினன் வியர்வை முத்துகள் விழுந்த கணத்தில் நிலமகள் கன்னிகழித்து கருக்கொள்கிறாள்ஒன்றுபத்து நூறாகப் பெருக்குகிறாள்காலத்தின் முதல் இயற்கைப் புணர்ச்சி இதுநெல் கரும்பு இஞ்சி மஞ்சள் என்றுசுவைபடு பொருள்களால் புதியன படைக்கிறாள்போலிப் பதர்களைக் குவிக்க எரிகிறது போகி மடமை உடன் சேர விரிகிறது கனலின் கொழுந்துஞாயிறு மாடு வான்சிறப்பு போற்றுதும்கீழ்த்திசையின் புலர் முகத்தில்நுரைத்துப் பொங்கும் பொங்கல்செடியிலும் கொடியிலும் அவிழும் நாள் மலர்கள்தமிழ்ப் புத்தகத்தின் முதல் சித்திரம் தைமகள்! …………………………. ………………………………… ……………………………………பாவாய் நீ… வருக…! – முனைவர் ம.நாராயணன், வேலூர்.தன்னுழைப்பில் தானுயர்ந்து சுகங்கள் காணத் தற்காலத் தலைமுறைகள் முயல வேண்டும்;முன்னவர்கள் செல்வமதைத் தீண்டி டாத முற்போக்குச் சிந்தனைகள் வளர வேண்டும்;தன்னுழைப்பால் சொற்பந்தான் வருமெ ன்றாலும் தயங்காது ஏற்பதுவே சொர்க்கமாகும்;இன்னுரையாம் இவ்வுரையை எடுத்து ரைக்க எழிற்பொங்கல் பாவாய்நீ… வருக… வாழ்க…!சின்னஞ்சிறு ஓட்டைதான் என்றி ருந்தால் சிலநொடிக்குள் முழ்குமன்றோ பெரிய கப்பல்!சின்னஞ்சிறு செலவுகளே என்ற போதும் செல்வமலை பனிமலைபோல் கரையும் அன்றோ!இன்றிருக்கும் இளைஞரெலாம் சிக்க னத்தை இன்னுயிர்போல் போற்றுவதே கடமையாகும்!நன்மையுரை இதைவிளக்கி… நலங்கள் நல்க நற்றமிழ்த்தைப் பாவாய்நீ… வருக… வாழ்க…!மழைநாளில் தமக்குதவும் எனநி னைந்தே வரப்போரச் சிற்றுயிர்கள் தாமும் மற்றும்அழகழகாய் எறும்புகளும் தேனீக் கூட்டம் அன்றாடம் கடிதுழைத்தே உணவைச் சேர்க்கும்!பழக்கமிதை நாம்போற்றிப் பணத்தைச் சேர்ப்போம் பிறவிமுற்றும் வறுமையது நெருங்கா வண்ணம் தழைத்தினிதே வாழ்ந்திடுவோம்… என்று ரைக்கத் தைப்பொங்கல் பாவாய்நீ… வருக… வாழ்க…! …………………………. ………………………………… ……………………………………பொங்கல் வாழ்க! -ஆலந்தூர் கோ. மோகனரங்கன்விடமாட்டேன் எனத் தடுக்கும் கூட்டத்துக்குள் வியர்வையினால் வழியமைத்து முன்னே நிற்போம்!படமாட்டேன் உன்கண்ணில் என்று நாட்டில் பாழ்பட்ட அறங்களைநாம் பரவச் செய்வோம்!தொடமாட்டேன் எனமறுக்கும் வெற்றி மங்கை தொழுகின்ற வரைக்கும்நாம் தூங்கமாட்டோம்!கெடமாட்டேன் எனஉள்ளம் உறுதி ஏற்கக் கிடைத்ததொரு வாய்ப்பான பொங்கல் வாழ்க!நினைவாலே இமயத்தின் நிழலாய், வாழும் நெஞ்சாலே தித்திக்கும் பழமாய், வாடும்உணர்வாலே நலிந்தோர்க்கு விருந்தாய், இந்த உலகத்தின் நோய்க்கெல்லாம் மருந்தாய், காதல்மணத்தாலே இணைந்தோர்க்குக் குடையாய், சாதி மறுப்போர்க்கு நிற்கின்ற துணையாய், நல்லகுணத்தாலே வழிகாட்டும் குறளாய், ஊக்கம் கொள்ளுகின்ற வாய்ப்பான பொங்கல் வாழ்க! …………………………. ………………………………… ……………………………………தமிழிசையை உயிர்ப்பிப்போம் – பாவலர் கருமலைத் தமிழாழன்சிலம்புரைக்கும் அரங்கேற்றுக் காதை தன்னில் சிறந்திருந்த தமிழிசையைக் கொணர்வோம் மீண்டும்புலமையொடு தமிழிசைக்கு இலக்க ணத்தைப் புகன்றிட்ட இசைநுணுக்கம் பஞ்ச மரபுவலம்வந்த பெருநாரை பெருங்குரு கென்று வரிசையாக இருந்தஇசை நூல்கள் சொல்லும்நலமான தமிழிசைதான் செவிவி ழுந்தால் நாமுணர்ந்து தலையாட்டி மகிழ்வோம் அன்றோ!கீர்த்தனைகள் எனப்புரியா மொழியில் பாடக் கீழ்மேலாய்த் தலையாட்டும் மாடாய் ஆனோம்சீர்த்தகுரல் கைக்கிளையும் துத்தம் தாரம் விளரியொடு உழைஇளியும் ஏழாய் நின்றுஆர்த்தசுரம் பன்னிரண்டும் பாலைக் குள்ளே அரும்பண்கள் நூறோடு மூன்றில் தேனைச்சேர்த்தளிக்கும் துளைநரம்பு கருவி பெய்யும் செம்மையான தமிழிசையே மயக்கும் நெஞ்சை!புறக்கணிப்பால் மறைந்துவரும் தெருவின் கூத்து புறமொதுக்கும் கரகாட்டம் மயிலின் ஆட்டம்குறத்தியர்தம் ஏலேலோ பொம்ம லாட்டம் குற்றுயிராய்ப் போனதுபோல் போயி டாமல்சிறப்பாகத் தமிழிசையை இசைக்கச் செய்தால் சீர்பெற்று மீண்டுமிங்கே தழைக்கும் நன்றாய்உறவாக உலகத்தை இணைக்கும் நம்மின் உயர்வான தமிழிசையை உயிர்ப்பிப் போமே! …………………………. ………………………………… ……………………………………தமிழ்த்தாயின் பொங்கல்நாள் புலம்பல்(உருவகப்பாட்டு) – ம.இலெ.தங்கப்பா (1966)ஊர்புகழ ஒருமகனைச் சுமந்து பெற்றேன்;ஒதுக்கிஎனை வைத்துவிட்டான்; புலம்புகின்றேன்.பேர்புகழைப் பெறட்டுமென வளர்த்தேன் தானாய்ப்பெண்பார்த்து மனந்துகொண்டான்; வருத்தமில்லைஆர்வமுடன் வரவேற்றேன்; மருமகள்பின்;அவள் வந்தாள்.ஆர் என்றேன் ‘மாமி’ என்றான்.ஓரிருநாள் இருந்துசெல்வாள் என நினைத்தேன்ஒரேபடியாய்க் கூடாரம் அடித்திட்டாளே. மனையாளைப் போற்றட்டும், தவறே இல்லை. மாமியவட்கு அடிமையெனப் போய்விட்டானே. தனை ஏதோ உயர்ந்தவள்போல் அவளும் எண்ணித் தமிழ்பேச மறுக்கின்றாள்; சிலுப்புகின்றாள். எனைமறந்தான் மகன் எனினும் வருந்தமாட்டேன். எப்படியும் வாழ்க என மகிழ்வேன், ஆனால் மனையகத்தே நானிருக்க, எனை ஒதுக்கி மாமியவள் குடும்பத்தின் தலை என்றானேதெருப்புழுதி திண்ணையிலே என்னை வைத்தான்; தினையரிசிக் கஞ்சி ஒருவேலை தந்தான்.கரிப்பிடித்த பழம்புடவை பக்கம் மாற்றிக் கட்டுகின்றேன்; மாமிக்கோ பட்டுச் சேலை!உருப்படியாய் வாழ்வானா? பெற்ற தாயைஊர்சிரிக்க விட்டானே! வேற்றூர்க்காரிசெருப்பை முத்த மிட்டானே, தானவட்குச்சேலைதுவைக் கின்றானே வெட்கமின்றி! அவள் வந்த நாள் முதலாய் என் இல்லத்தில் அயலவர்க்குக் கொண்டாட்டம், அவள் பேர் சொல்லி எவர் எவரோ வருகின்றார், விருந்துண் கின்றார் இதுவும் போ தாதென்று, திறவுகோலை அவள் கையில் கொடுத்துவிட்டான் இந்தப்பேதை! அதிகாரம் செய்ய அவர் தொடங்கி விட்டார். கவிந்தபடி மூலையிலே கிடக்கின்றேன் நான்; கண்டவரின் கிண்டலுக்கும் ஆளாய்ப் போனேன்.பெற்றவயிறு எரியுதடா மகனே, என்னைப் பேணாமல் இருந்தாலும் பொறுப்பேன்; ஆனால்மற்றவர்கள் எனைத் தள்ளி மிதிக்கக் கண்டும்மண்ணாந்தை ஆனாயே, தூ, தூ, வெட்கம்!பெற்றவள் என் மகனா நீ? பேடி! அந்தப் பேய்களோடுஞ் சேர்ந்தென்னைப் பழிக்கின்றாயேஉற்ற சொந்த வீட்டில் எனக்கு அடிமை வாழ்வா?ஊர்ப்பரத்தை உடல்நெளிப்புப் பெரிதாயிற்றா? மகள்வயிற்றுப் பேரன்மார் தந்தையற்றார்; மகன் வளர்ப்பான் என்றிருந்தேன்; அவனோ மாமி புகுந்த முதல் அவள் உறவே பெரிதாய் போனான். புதியவர் முன் பல்லிளித்தான், தசையும் என்பும் நகமுமென இருந்தவரைத் தெருவில் விட்டான். நாகரிகப் பழக்கம் எனக்கு இல்லை என்றான். தகுமனைவி அவளேனும் இரங்குவாளா? தாய்பேச்சைக் கேட்டவளுக்கும் கொடுமை செய்வாள்.இன்றைக்குப் பொங்கல் நாள், இரக்கப் பட்டேஎனக்கு மகன் வெண்பொங்கல் கொண்டு வந்தான்.‘மென்றிதனைப் பார்’ என்று வைத்துச் சென்றான்.விழியாலும் நான் அதனைத் தொடுதல் உண்டோ?என்றைக்கென் வீட்டில் நான் இழிவு நீங்கிஎனக்குரிய தலைமையுற்று வாழுவேனோ,அன்றைக்கன்றோ எனக்குப் பொங்கல் நன்னாள்?அதுவரை ஏன் இப்பொங்கல்? நாய் தின்னட்டும்! …………………………. ………………………………… ……………………………………