14 January 2016 9:30 pm
இலெமுரியா – குமரிக்கண்டம்சுதா சேஷய்யன் – ஜி.ஸ்ரீகாந்த்மும்பையிலிருந்து வெளிவரும் ‘தமிழ் இலெமுரியா’ மாத இதழில் சற்றொப்ப இரண்டரை ஆண்டு காலமாக தொடராக வெளிவந்த ‘தொலைந்த கண்டத்தின் தொன்மைக் கதை’ எனும் தலைப்பு தமிழ் வாசகர்களின் நெஞ்சில் பசுமையாக நிலைத்துள்ளதை நூல் வடிவமாக கோத்தும் நல்ல பல செய்திகளை இணைத்தும் பொருத்தமான படங்களுடன் நுட்பமாக ஆராய்ந்து நூலாசிரியர் நமக்கு வழங்கியுள்ளார். நூலைப் படிக்க தொடங்கிய சில நிமிடங்களிலேயே நம்மை பண்டைய காலத்திற்கே அழைத்துச் செல்வது போன்ற உணர்வு ஏற்படுகிறது. 1 ‘இலெமுரியா’ எனக் கூறப்பெறுவது யாது? 2 அது தோன்றி, செழித்து, மறைந்ததன் வரலாறு என்ன? 3 ‘இலெமுரியா’ என்ற நிலப்பரப்பு இருந்ததற்கான அறிவியல் சான்றுகள் யாவை? 4 பற்பலரையும் சொந்தம் கொண்டாடவைத்த லெமுரியா என்னும் நிலப்பரப்பு, இன்று எங்கே போயிற்று? 5 இலெமுரியாவைப் பற்றித் தெரிந்து கொள்வதன் நோக்கம் என்ன? ஆகிய வினாக்களுக்கு விடை காண முயன்றிருக்கிறார் ஆசிரியர். வரலாற்று அறிஞர்களின் ஆய்வுகள், ஆராய்ச்சிக்கான கண்டெடுப்புகள், அறிஞர் பெருமக்கள் மற்றும் இந்த நூலுக்கு துணை நின்ற நூல்கள் நூலாசிரியர்கள் என அனைத்தையும் வரிசைப்படுத்தியுள்ளார். இந்த நூல் தமிழ், தமிழ் மக்கள் வரலாறு என செய்திகளை தேடிடும் ஆர்வலர்களுக்கு நல்ல உறுதுணையாக அமையும். அரசு மற்றும் – வீட்டு நூலகங்களின் இந்த நூல் முக்கிய இடம் பெறும்.வெளியீடு : பழனியப்பா பிரதர்ஸ், கோனார் மாளிகை, 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை – 600 014. (பக்கங்கள் : 172 விலை : 130)