16 September 2015 9:51 am
காக்காக்கடிக் கவிதைகளும் மாதவியை வாசித்தலும்- கவிஞர் பெ.சிதம்பரநாதன்இதழியல் துறையில் நீண்ட நெடிய தொடர்பு கொண்ட கவிஞர் பெ.சிதம்பரநாதன் மரபுக்கவிதையில் தேர்ச்சி பெற்று விளங்குபவராக இருந்தும் புதுக்கவிதையிலும் வல்லவர் என்பதை இந்நூலின் வாயிலாக அறிய முடிகிறது.கட்டிய வேட்டியைத் துவைத்துஅது காயும் வரைகட்டிக் கொள்வதற்காகத்தான்இடுப்பில் ஒரு துண்டுஅப்படிப் பட்டவர்கள்செய்வதுதான் தொண்டு !இந்தக் கவிதையில் அரசியலின் தூய்மையை ஜீவாவின் படத்தோடு படிக்க முடிகிறது.திரி இருந்தால் தான்தீபம் எரியும்.திரி இல்லாமலேயேகோபம் எரிக்கும்.இதில் கோபத்தின் கோர முகத்தைக் காட்டியுள்ளார்என்னை ‘ஆடல்மகள்’ என்றீர்கள்மாயப் பொய் பல கூட்டும் மாயத்தாள்என்றும் கூறினீர்கள்.சகோதரி கண்ணகியைஅலையிடைப் பிறவா அமுதே என்றீர்கள்நியாயமா?"இப்படி கோவலனை நிறுத்தி மாதவி கேள்விக்கணைகளை தொடுப்பதைப் போல் காட்டியிருக்கும் வரிகள் சிலப்பதிகாரத்தை பலமுறை படித்தவர்கள்கூட சற்றே சிலிர்ப்படையவே செய்வர். இதை வாசித்த பின்பும் மீண்டும் ஒருமுறை வாசிக்கத்தூண்டும் என்பது திண்ணம்.வெளியீடு : பழனியப்பா பிரதர்ஸ் கோனார் மாளிகை 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை – 600 014, (பக்கங்கள் : 144 விலை : 100)"