கிறித்துவமும் அறிவியலும் - தமிழ் இலெமுரியா

17 February 2015 4:48 pm

கிறித்துவமும் அறிவியலும்- டாக்டர் சு.நரேந்திரன்புகழ் வாய்ந்த டாக்டர் போப் தமிழர்கள் தம் தாய் மொழியில் பேசக் கூச்சப்படுவதைக் கைவிட வேண்டும் என்கிறார். 1860 ஆம் ஆண்டு வரையில் தமிழில் அறிவியல் நூலாசிரியர்கள் பெரும்பாலும் கிறித்துவ மத போதகர்களே ஆவர். மனிதன் தன் அறிவாள் தன்னை முன்னேற்றிக் கொள்ள வேண்டும். அறிவியல் மதத்திற்கு முரணானதல்ல; தமிழ் மொழியின் சிறப்புகளை உலகுக்கு பரப்புரை செய்ததில் கிறித்தவர்களின் பங்கு மிகுதியானது என்பதை பல கிறித்துவ அறிஞர்களை ஆதாரத்துடன் எடுத்துக் காட்டியுள்ளார் நூலாசிரியர். உயர்ந்தவன், தாழ்ந்தவன் என காட்டுமிராண்டித் தனமான எண்ணங்களை வேறருக்க கல்வியால் மட்டுமே இயலும். கல்வியின் தொடர்ச்சியாக மனிதர்கள் பெறும் அறிவின் முதிர்ச்சியே மனிதனை மேன்மையாக்குகிறது என்ற பதிவினை இந்நூல் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார். ஐரோப்பிய கிறித்தவ அறிஞர்கள் வரலாறு காணும் முயற்சியில் ஈடுபட்டதால்தான் தமிழர்களுக்கு வரலாறு காணும் சுவையும் கல்வி அறிவும் ஏற்பட்டது என்பது மெய்யே. மதத்தின் மூலம் அறிவியலை வெளிக்கொணர்ந்த விதத்துடன், தமிழ் மொழியை உலகறியச் செய்த அறிஞர்களின் வரலாற்றையும் இந்நூலின் மூலம் அறியச் செய்தது நூலிற்கு மேலும் பொருள் சேர்ப்பதாக அமைந்துள்ளது.வெளியீடு: கொற்றவை வெளியீடு     4/2,சுந்திரம் தெரு, தி,நகர்,      சென்னை – 600 017.(பக்கங்கள்:272   விலை: ரூ.170/-)

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி