17 November 2014 11:41 am
சாகசக்காரி பற்றியவை – தான்யா 1980களில் நடைபெற்ற வன்முறைகளால் நாடோடிகளாய் மாறிப்போன மூத்த தலைமுறையினருக்கு அடுத்தத் தலைமுறைகளில் பூத்த ஒரு சில எழுத்தாளர்கள், கவிஞர்கள் உலகெங்கும் வலம் வருகின்றனர். கனடாவில் அகதிகள், பெண்கள், சிறுவர்கள் மற்றும் தொழிலாளர் உரிமைகள், குடிவரவாளர்களின் சிக்கல்களைத் தீர்ப்பதில் ஈடுபாடும் சமூக அக்கறையும் கொண்ட கவிஞர் தான்யாவின் படைப்புகளில் ஒன்றே சாகசக்காரி பற்றியவை". சமூக மாற்றங்களை ஏற்படுத்தவல்ல போர்க்குணமும் ஆளுமையும் மிகுந்த சாகசக்காரிகைகளை விழுங்கிக் கொண்டு இச்சமூக அமைப்பு அவர்களை தன்னலமும் தம் குடும்பத் தொழிலாளியாகவும் மையப்படுத்தியுள்ள இழிநிலைகளை இடித்துறைக்கும் வகையில் பல கவிதைகள் இடம் பெற்றுள்ள ஒரு அருமையானத் தொகுப்பு. பெண்ணியம் பேசும் தன்னலவாதிகள் நிறைந்த இச்சமுகத்தில் கடந்த காலத்தில் தாம் சந்தித்த துயரங்களின் வெளிப்பாடாக வந்துள்ள எழுத்துத் துளிகளே இவரின் கவிதை வரிகளாக அமைந்துள்ளன. "வடலி" வெளியீடாக வந்துள்ள இந்நூலின் வடிவாக்கமும் முகப்பும் அருமை. குளிரோ வெய்யிலோ காலங்கள் மாறி மாற்றம் நிகழும் ஆனால் எனக்காக நிமிடங்கள் எனக்காக நாட்கள் எனக்காக வருடங்கள் எப்போது போல அப்படியே!வெளியீடு: வடலி வெளியீடு 8ஏ, அழகிரி நகர் 4வது தெரு, லட்சுமிபுரம், வடபழனி சென்னை ISBN: 9780991975563பக்கங்கள்: 64 விலை: 50"