தலைவர் பிரபாகரன் பன்முக ஆளுமை - தமிழ் இலெமுரியா

16 February 2016 10:29 pm

தலைவர் பிரபாகரன் பன்முக ஆளுமை- ஓவியர் புகழேந்திதமிழன் பெருமை தன்னை உலகறிய எடுத்துரைத்ததமிழ் முரசின் பேரோசை தணிந்த தேனோ?" முள்ளிவாய்க்கால் நிகழ்வுக்குப் பின், உலகத்தமிழ்நெஞ்சங்கள், எல்லாம் இப்படித்தான் ஏங்கிவருகிறது, நாதியற்ற தமிழ் இனத்திற்கு நான் தானடா நம்பிக்கை நட்சத்திரம்என்று சொல்லாமலேயே உணர்த்தியவர் தலைவர் பிரபாகரன்என்றால் அது மிகைஅன்று. இருபதாம் நூற்றாண்டில் பெரும் எழுச்சியுடனும் முழு வீச்சுடனும் எழுந்து, அதனினும் கூடுதல் வேகத்தில் நசுக்கப் பட்ட ஓர் இயக்கம் தமிழீழ விடுதலை இயக்கம் தான் என்று அறியும் போது நம்மையறியாமல் நெஞ்சு விம்முகிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் மனித விழுமியங்களை, நாங்கள் தான் காப்பாற்றினோம். அதற்குண்டான சட்டங்களை நாங்கள் தான் இயற்றினோம், என மார்தட்டும் நாடுகளின் ஒப்புதலோடுதான் இலங்கை அரசு இறுதிப் போரில்… ஈழத்தமிழர்கள் ஒன்றரை இலட்சம் பேரை கொன்றுகுவித்தது.  இந்த அவலம் அரங்கேறியபின் தான், தமிழ்நாட்டில் மாற்று கருத்துடையோர்களுக்கு ஓர் உண்மையை உணர்த்தியது. அதுதான் விடுதலைப்புலிகள் இல்லாத வெறுமை! எஞ்சிய ஈழத்தமிழருக்கும் விடுதலைப் புலிகளின் சேவை தேவைப் படுகிறது. இது ஏன்? எப்படி? இந்த வினாக்களுக்கு விடை தான் ஓவியர் புகழேந்தி படைத்துள்ள ‘பிரபாகரன் பன்முக ஆளுமை எனும் நூலாகும். தலைவரின் தொலை நோக்குத் திட்டங்கள் பற்றிய அறிவுக்கலை, இலக்கிய ஈடுபாடு, மாந்த இன நுண்ணுணர்வு, கண் துஞ்சா கடும் உழைப்பை நேரடியாகக் கண்டு, உரையாடி பதிவு செய்துள்ளார் நூல் ஆசிரியர் ஓவியர் புகழேந்தி. வே.பிரபாகரன் இயக்கத்தினரை இரக்கமற்றவர்கள், முரடர்கள், பண்பற்றவர்கள்என்று பல ஊடகங்கள் சித்தரித்தது. அவர்களின் முக மூடிகளைகிழித்திடும் விதமாக இந்நூல் உள்ளது.வெளியீடு : தூரிகைவெளியீடு, எஸ்.பி 63, 3வது தெரு, முதல் செக்டர், கே.கே.நகர், சென்னை – 600 078 (பக்கங்கள் : 256  விலை : 230)"

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி