நெருடல் கவிதைகள் - தமிழ் இலெமுரியா

14 November 2015 9:49 pm

நெருடல் கவிதைகள்ஞா.சிவகாமிகவிதாயினி ஞா.சிவகாமி தாம் ஓர் ஓய்வு பெற்ற தலைமைச் செயலக அதிகாரி என்றும் மெத்தப் படித்தவர் என்றும் ஞான செருக்குடன்தான் பணியில் சேர்ந்ததாக கூறும் இவரின் கவிதைகளை, நாம் படிக்கும் போது பல் நோக்கு குணம் கொண்ட பரந்த மனதுக்கு சொந்தக்காரர் என அறிய முடிகிறது. பல்வேறு அறிஞர்களின் நூல்களை படித்ததால், மனம் பக்குவப்பட்டு, செருக்குப் போனதாகவும்… ‘கற்றது கை மண் அளவு கல்லாது உலகளவு’ என்னும் பக்குவமான மிடுக்கு வந்ததையும் தாமே பதிவு செய்துள்ளார். தமிழா நீ எப்போது வாழப்போகிறாய்? ஆளப்போகிறாய்? உலகை என ஆதங்கப்படும்போதும் விவசாயத்தைப்பற்றி கூறும் போதும் நம்மாழ்வார் வார்த்தைகளில், நெல்லின் நுனி நமக்கு நடு மாட்டுக்கு அடி மண்ணுக்கு என மேற்கோள் காட்டும் போதும் நம்மை வியக்க வைக்கிறார். கடவுளைப் பற்றி, தூணிலும் துரும்பிலும் இருக்கும் கடவுள் ஏன் எங்கள் உள்ளத்தில் இல்லை? வினா எழுப்பியதன் மூலம், தாம் ஒரு புரட்சிப் பெண் என தமது கவிதைகளில் நிரூபித்து உள்ளார். இப்படி பல்வேறு தலைப்புகளில் அருமையான கவிதைகளை வடித்து உள்ளார். இந்த நெருடலின் பாதிப்பு படிப்போர் மனதில் நீண்ட நாள் இருக்கும்.வெளியீடு : விழிகள் பதிப்பகம் 8/எம் 139, 7 ஆம் குறுக்குத் தெரு,  திருவள்ளுவர் நகர், திருவான்மியூர் விரிவு,  சென்னை – 600 041. (பக்கங்கள் : 152  விலை : 100)

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி