17 March 2015 8:03 pm
மருது – இந்து காவியக் கவிதை நூல் - மயில் இளந்திரையன்மருது-இந்து காதல் கனவுலகில் மிதந்து பெற்றோர்களின் அன்பான சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களுக்குப் பிறந்த மகளுக்கு குறளியா எனும் பெயர் சூட்டி தமிழ் மீது கொண்டுள்ள காதலை வெளிப்படுத்துகிறார்கள். 363 கிளைத் தலைப்பில் காதலை மையப்படுத்தி காவியம் பாடுகின்ற கவிஞர் இலக்கண, இலக்கிய வரம்பு மீறாமல் கொங்கு நாட்டு மக்களின் வரலாற்று சிறப்புமிக்க பண்பாடுகளை, கலாச்சாரக் கூறுகளை மருது&இந்து பெயரில் காவியக் கவிதை நூலை பதிவு செய்திருக்கிறார். படிப்பவர்களின் நெஞ்சிலே தடம் பதித்து விட்ட காவிய நாயகனாக மருதுவும், காவிய நாயகியாக இந்துவும் விளங்குகிறார்கள் காதல் வார்த்தைகளை தமிழில் கதிராட வைத்திருக்கிறார். எழுத்தாளனுக்கு ஏகமாய் சுதந்ரம் உண்டு என்பதன் எடுத்துக்காட்டு இந்நூலாகும். காவியத்திற்கும் காதலுக்கும் ஒப்பற்ற தொடர்பு உண்டு என்பதை பறை சாற்றும் இந்நூல் அனைத்து காதல் கொண்ட நெஞ்சங்களும் கைப்பிடிக்க வேண்டிய நூல்.வெளியீடு: தமிழ் மருதம், 2சி-1, மாரியம்மன் கோயில் வீதி, மாச்சம்பாளையம், சுந்தராபுரம் (அ), கோவை – 641 024 (பக்கங்கள்: 150 விலை: 75)