மௌனத்தின் பிளிறல் - தமிழ் இலெமுரியா

15 October 2015 2:18 pm

மௌனத்தின் பிளிறல்- புதியமாதவிநூல் ஆசிரியை புதிய மாதவி மும்பை தமிழர்களுக்கு மட்டுமல்லாது உலகின் தமிழறிந்த, தமிழ் நூலை வாசித்திட்ட அனைவரின் மனங்களிலும் தமிழ் சுவாசமாகவே மாறிப் போனவர் என்றால் மிகை யாகா. எண்ணற்ற நூல்களை படைத்திட்ட அவரின் தமிழ்ப் பண்ணையில் புதிய வரவாக ‘மௌனத்தின் பிளிறல்’ எனும் கவிதை நூல் வெளி வந்திருக்கிறது. புதிய மாதவியின்  கவிதைகளில்  கொளுந்து விட்டெரியும்  கோபத்தைத்  தனிப்பட்ட ஒருவரின்  கோபம்  என்று சொல்வதை விட அதை ஒரு தலைமுறைக்  கோபம் என்று புரிந்து கொள்வதே நியாயமானது. தலைமுறை தலைமுறையாய் வாங்கிய அடிகள்  ஒன்றாய்த் திரண்டு வரும்போது அது எல்லோரையும்  சந்தேகித்து, எல்லோரது முகமூடிகளையும்  கிழித்துப் போட்டு, அருவருப்பான அவர்களது சுய முகங்களை உலகுக்குக்  காட்டத் தனது சகல வார்த்தைகளையும்  திரட்டிப்  போராடத்  தொடங்கி விடுகிறது.இத்தகைய  கவிதை நூலில் இடம் பெற்றுள்ள நாற்பத்தியாறு கவிதைகளில் எதைச் சொல்வது எதை விடுவது என தடுமாற்றமே ஏற்படும் படிப்போரிடத்தல். எல்லாக்கவிதைகளும் பொருள் பொதிந்த் கருத்துகள் உள்ளடக்கியுள்ளன. ‘எருமையைக் கொண்டாடுவோம்’ கவிதையில்,யாரையும் கோபத்தில் எருமை எருமை என்றுதிட்டாதீர்கள்… எனத்தொடங்கி, இறுதியில் தோழர்களே… ஈரோட்டுக் கிழவனின்கறுப்புச் சட்டையைஎப்போதும் கழட்டாமல்அணிந்திருக்கும்எருமையைக் கொண்டாடுவோம்.என அனைத்து கவிதைகளிலும் இன, தன்மான உணர்ச்சிகளை காண முடிகிறது. கற்றோர் அனைவரும் படித்து சுவைக்க வேண்டிய நூல்.வெளியீடு :   எழுத்து  36, எல்டோராடோ 112,  நுங்கம்பாக்கம்  ஹைரோடு சென்னை – 600 034 (பக்கங்கள் : 96  விலை : 60 )

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி