15 March 2016 11:01 pm
கொல்கத்தாவின் ஏழை மக்களுக்காகப் பணியாற்றிய அன்னை தெரசா, ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் புனிதர் வரிசையில் இனி இடம்பெறுவார். அன்னை தெரசா தனது சக்தியின் மூலம் ஒருவரை குணப்படுத்தியதாகச் சொல்லப்படும் இரண்டாவது சம்பவத்தை வத்திகானின் மூத்த மதகுருக்கள் அங்கீகரித்ததையடுத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அமைதிக்கான நோபல் பரிசை வென்றிருக்கும் அன்னை தெரசா, அல்பேனியப் பெற்றோருக்குப் பிறந்தவர். இவர் 1950ல் இந்தியாவில் ஏழைகளுக்கு சேவை செய்வதற்காக மிஷினரீஸ் ஆஃப் சாரிட்டீஸ் அமைப்பை நிறுவினார். 1997ல் தனது 77வது வயதில் அவர் காலமானார்.