அரைக்கால் டிரவுசர் பேன்ட் ஆகிறது; ஆர்எஸ்எஸ் சீருடையில் மாற்றம் - தமிழ் இலெமுரியா

15 March 2016 11:29 pm

இந்தியாவின் வலதுசாரி இந்துத் தேசியவாத அமைப்பான ஆர்எஸ்எஸ், தனது உறுப்பினர்களின் சீருடையை மாற்றும் முடிவை உறுதிசெய்துள்ளது.காக்கி நிற அரைக்கால் டிரவுசருக்குப் பதிலாக, பழுப்புநிற முழு பேன்ட் தான் இனிமேல் சீருடையாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.ஆர்எஸ்எஸ் 91 ஆண்டுகளுக்கு முன்னர் நிறுவப்பட்டது முதல், காக்கி நிற அரைக்கால் டிரவுசர் தான் அவர்களின் தனி அடையாளமாக இருந்துவந்துள்ளது. அடுத்த 6 மாதங்களுக்குள் இந்த புதிய சீருடை நடைமுறைக்கு வரவுள்ளது.1925-ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஆர்எஸ்எஸ், நாட்டின் சுதந்திரத்துக்குப் பின்னர் மூன்று தடவைகள் தடைசெய்யப்பட்டது.பிரதமர் நரேந்திர மோடி, ஆர்எஸ்எஸ்-இல் முன்னர் உறுப்பினராக இருந்தவர். அவரது ஆளும் பாஜக கட்சிக்கு ஆர்எஸ்எஸ் கொள்கை ரீதியான முன்னோடி அமைப்பாக இருந்துள்ளது.ஆர்எஸ்எஸ் அமைப்பு, முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வெறுப்புணர்வு பிரச்சாரங்களை முன்னெடுப்பதாக விமர்சனங்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி