ஆசியாவிலேயே தமிழ்நாட்டில்தான் வறுமை அதிகம் – உணவுக்கே வழியில்லை: பசில் ராஜபக்சே திமிர் பதில் - தமிழ் இலெமுரியா

14 November 2013 10:41 pm

ஆசியாவிலேயே தமிழகத்தில்தான் வறுமையில் வாடுவோர் அதிகம் என்றும் தமிழகத்தில் உணவுக்கே வழியில்லை என்றும் இலங்கை அமைச்சர் பசில் ராஜபக்சே திமிராக பதிலளித்துள்ளார்.  கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பதிலளித்த பசில் ராஜபக்சே, இலங்கையில் நடைபெறுகின்ற காமன்வெல்த் மாநாட்டில் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொள்ளாததால் அந்நாடுதான் அதிக கவலைப்பட வேண்டும். இந்த மாநாடு இலங்கையின் மாநாடு அல்ல. இந்திய பிரதமர் மன்மோகன் சிங் மாநாட்டில் கலந்து கொள்ளாதது அவர்களது உள்நாட்டு அரசியல் பிரச்சினையே. அது பற்றி நாங்கள் எதுவும் சொல்வதற்கில்லை என்றார்.  காமன்வெல்த் மாநாட்டில் எவரும் கலந்து கொள்ள கூடாது என்ற தமிழ்நாடு சட்டசபை தீர்மானம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், இலங்கையில் வாழும் தமிழ் மக்கள், தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களை விட அதிகம் நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும், சுதந்திரமாகவும் வாழ்கின்றனர். தமிழ்நாட்டில் வாழும் அதிகமான தமிழர்கள் உணவின்றி வாழ்கின்றனர். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா முதலில் அவர்களுக்கு உணவு கொடுத்துவிட்டு இலங்கை தமிழர்களை பார்க்கட்டும். ஆசியா நாடுகளிலேயே தமிழ்நாட்டில்தான் வறுமையில் வாடுவோர் அதிகம். ஆனால் இலங்கையில் அப்படி இல்லை என்றார்.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி