இங்கிலாந்தின், தேம்ஸ் நதி உட்பட பல நதிகளில் ஏற்பட்ட வெள்ள நீர் கரைபுரண்டு ஓடுவதால் மக்கள் பீதி. - தமிழ் இலெமுரியா

11 February 2014 10:52 pm

இங்கிலாந்தின் தென் பகுதிகளில் பெய்த பலத்த மழையை அடுத்து, தேம்ஸ் நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் , நதியின் கரையை உடைத்து வெள்ளம் அருகிலுள்ள கிராமங்கள் மற்றும் நகரங்களில் புகுந்ததை அடுத்து, நூற்றுக்கணக்கான வீடுகளிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். ஏற்கனவே முன்னெப்போதும் கண்டிராத அளவுக்கு ஏற்பட்டிருக்கும் வெள்ள அளவு, தொடர்ந்து உயரும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். தென்மேற்கு இங்கிலாந்தில் உள்ள பல பகுதிகளில் நீர் மட்டம் உயர்ந்து வருகின்றது. சோமர்செட் பகுதியில் ஒரு பகுதி ஏற்கனவே பல வாரங்களாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறது. அடுத்த சில நாட்களில் மேலும் கடுமையான மழையும், சூறைக்காற்றும் வீசும் என்று வானிலை முன்னறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இரண்டு நூற்றாண்டு காலத்துக்கும் மேற்பட்ட காலத்தில் இங்கிலாந்தில் இந்த ஜனவரியில்தான் இந்த அளவுக்கு மழை பெய்திருக்கிறது.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி