10 November 2013 11:13 pm
இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி வேகம் குறைந்துள்ள போதிலும், அங்கு நிதி நெருக்கடி ஏற்படலாம் என்ற அச்சத்தை இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் நிராகரித்துள்ளார். கடந்த மாதம் ரிசர்வ் வங்கியின் ஆளுனராக பொறுப்பேற்ற பிறகு சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கும் முதல் நேர்காணலில், பிபிசியுடன் பேசியுள்ள ரகுராம் ராஜன் அவர்கள், 1991 இல் இந்தியா சர்வதேச நாணய நிதியத்திடம் பொருளாதார மீட்பு நிதி உதவி கோரியது போன்ற நிலைமை மீண்டும் ஏற்படாது என்று கூறியுள்ளார். உள்ளூர் மொத்த உற்பத்தியில் 15 விழுக்காட்டிற்கு சமனான அளவுக்கு நிதிக் கையிருப்பை இந்தியா வைத்திருக்கும் நிலையில், தேவைப்படும் பட்சத்தில் உடனடியாகக் கூட அனைத்து இந்தியக் கடன்களையும் அடைக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.