19 December 2015 10:31 am
ஆப்பிரிக்க கிராமங்களில் காட்டு யானைகளின் அச்சுறுத்தலை குறைப்பதற்கான வழியொன்றைக் கண்டறிந்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். நிலத்தினூடாக அதிர்வுகளை உண்டாக்கி யானைகளை பயமுறுத்தி விரட்டுவது தான் அந்த வழி. மனிதர்களுடன் யானைகள் மோதலில் ஈடுபடாமல் தடுப்பதற்கு இந்த ஒலிச் சமிக்ஞைகள் மிகவும் பலனுள்ள வழியாக அமையும் என்று தென்னாப்பிரிக்காவில் உள்ள விட்ஸ்வாட்டர்ஸ்ராண்ட் பல்கலைக்கழகம் தயாரித்துள்ள ஆய்வு கண்டறிந்துள்ளது. குறைந்த அழுத்தம்கொண்ட எச்சரிக்கை ஒலிகளை எழுப்புவது போன்ற வழிமுறைகள் யானைகளை விரட்டுவதில் ஓரளவுதான் வெற்றியளித்துவந்துள்ளன. எச்சரிக்கை ஒலியோடு காலுக்கடியில் அதிர்வுகளையும் உண்டாக்குவதன் மூலம் யானைகளை விரட்டுவதில் வெற்றியடைய முடியும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.