4 December 2013 12:06 am
ஏற்காடு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் பிரசாரம் முடிந்து விட்டது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. தேர்தல் விதிமுறைகளை மீறி பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.. நடைபெறுவது பொதுத் தேர்தல் அல்ல. ஒரு தொகுதியிலே நடைபெறும் இடைத்தேர்தல்தான். அதற்குத்தான் ஆளுங்கட்சி தன் அதிகாரம் முழுவதையும் பயன்படுத்தி மக்களை அச்சுறுத்தி வருகிறது. நடைபெறும் காட்டாட்சிக்கு, தொடர்ந்து நடத்தி வரும் அக்கிரமங்களுக்கு, ஓர் எச்சரிக்கை செய்ய வேண்டாமா? அதற்குத்தான் இந்த இடைத்தேர்தல்! இந்தத் தேர்தலிலும், ஆளுங்கட்சியை வெற்றிபெறச் செய்துவிட்டால், அவர்கள் மேலும், மேலும் அக்கரமங்களிலே ஈடுபட வழி ஏற்பட்டு விடும். தங்களை எதிர்க்க யாருமே கிடையாது என்கிற நினைப்பு அவர்களுக்குத் தோன்றிவிடும். நடைபெறும் ஆட்சியில் எந்தத் தரப்பினரும் நிம்மதியாக இல்லை. நாட்டிலே எந்தக் குறை ஏற்பட்டாலும், உடனே தலைமையமைச்சருக்கு அவசர அவசரமாக கடிதம் எழுதுகிறார்கள். அதனைத் தீர்ப்பதற்கான வழிவகைகள் எதுவும் நடைபெறுவதாகத் தெரியவில்லை. எதிர்க்கட்சிகள் யாராவது இந்த ஆட்சிக்கு எதிராகவோ, முதலமைச்சருக்கு எதிராகவோ பேசினால் போதும், உடனே ‘அவதூறு வழக்கு’ தான். இவற்றுக்கெல்லாம் பாடம் கற்பிக்க வேண்டும். அதற்கொரு வாய்ப்பாக இருப்பதுதான் ஏற்காடு தொகுதி இடைத்தேர்தல். ஏற்காடு இடைத் தேர்தலில் தி.மு.க. வெற்றி என்ற நல்ல செய்தி வரும் என்று நம்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.