10 December 2013 10:59 pm
உலகில் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டத்துக்கு உரமூட்டிய மனிதன் நெல்சன் மண்டேலா என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் இலங்கையின் நாடாளுமன்றத்தில் இதனை தெரிவித்தார். தென்னாபிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் மறைவு குறித்து நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது சம்பந்தன் இதனைக் குறிப்பிட்டார். தென்னாபிரிக்க மக்களின் சமவுரிமை, நீதி, நிறம், இனம் என்பவற்றுக்காக நெல்சன் மண்டேலா தமது வாழ்க்கையை அர்ப்பணித்தார். இதன்மூலமே அவர் உண்மையான மக்களாட்சியை வென்றெடுத்தார். இந்தநிலையில் நெல்சன் மண்டேலாவின் வாழ்க்கை மற்றும் போராட்டங்கள் யாவும் இனத்தால் மதத்தால் பிரிந்து போயுள்ள நீதியற்ற ஏனைய நாடுகளின் தலைவர்களுக்கு பாடமாக இருக்கும் என்றும் சம்பந்தன் குறிப்பிட்டார்.